1 ரூபாய் காபி பொடி போதும்! முகத்துல இருக்க முகப்பரு, கருமை எல்லாமே மறஞ்சிரும்! நம்பமுடியலல! வாங்க ட்ரை பண்ணி பாக்கலாம்!
காபி பொடி(Coffee powder) சரும பராமரிப்பில் ஒரு சக்திவாய்ந்த இயற்கை பொருளாகக் கருதப்படுகிறது. அதில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் சத்துக்கள் சரும பிரச்சனைகளை தீர்க்க, தோலை ஆரோக்கியமாகவும் ,பிரகாசமாகவும் மாற்ற உதவுகின்றன. முகப்பரு முதல் உதடு கருமை வரை உள்ள பல பிரச்சனைகளை காபிபொடியை பயன்படுத்தி சரியான முறையில் குணப்படுத்தலாம்.
காபி குடிப்பதற்கு மட்டுமின்றி அழகு சார்ந்த விஷயங்களுக்கும் பயன்படுத்துகிறோம். நிறைய அழகு சாதனப் பொருள்களில் காபி மிக முக்கியமான உட்பொருளாக இருப்பதைப் பார்த்திருப்போம். அதிக செலவு செய்து அந்த பொருள்களை வாங்கிப் பயன்படுத்துவதை விடவும் நம் வீட்டு சமையலறையில் இருக்கும் காபி பவுடரை எப்படி நம்முடைய சருமப் பிரச்சனைகளுக்கு பயன்படுத்தலாம் என்பது பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்கப் போகிறோம்.
முகப்பரு முதல் பிக்மன்டேஷன் மற்றும் மங்கு பிரச்சனை வரைக்கும் சரிசெய்யும் ஆற்றல் காபி பொடிக்கு உண்டு. இதிலுள்ள காஃபைன் மற்றும் பிற மூலக்கூறுகள் சருமத்தின் ஆழம் வரை சென்று சீபம் சுரப்பை கட்டுப்படுவது முதல் சன் டேனை குறைப்பது வரை பல பிரச்சனைகளைச் சரிசெய்யும். எந்தெந்த சருமப் பிரச்சனைக்கு எப்படி காபி பொடியை பயன்படுத்தலாம் என்று இங்கு பார்க்கலாம்.
காபி ஸ்கிரப் | Coffee scrub for face
காபி பொடி சருதத்திற்கு மிகச்சிறந்த எக்ஸ்ஃபோலியேட்டராகச் செயல்படும். சருமத் துளைகளுக்குள் சென்று முழுமையாக இறந்த செல்களை நீக்கும்.
தேவையான பொருட்கள் :
1.காபி தூள் - 1 ஸ்பூன்
2.சர்க்கரை - 1 ஸ்பூன்
3.ஆலிவ் ஆயில் (அ) தேங்காய் எண்ணெய் - 1 ஸ்பூன்
செய்முறை:
ஒரு பௌலில் காபிபொடி (Coffee powder) மற்றும் சர்க்கரையை போட்டுக் கொள்ளுங்கள். அதில் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். இது ஒரு பேஸ்ட்டாக மாற்றிக் கொள்ளுங்கள். இந்த கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் அப்ளை செய்து வட்ட வடிவில் மென்மையாக மசாஜ் செய்து கொடுங்கள். இப்படி செய்வதன் மூலம் சருமத்திலுள்ள இறந்த செல்கள் நீங்கி புதிய செல்கள் உருவாகும். ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
காபி பேஸ்பேக் | Coffee face pack benefits in Tamil
தேவையான பொருள்கள் :
1.காபி பவுடர் - 2 ஸ்பூன்
2.தயிர் - 1 ஸ்பூன்
3.தேன் - 1/2 ஸ்பூன்
செய்முறை:
ஒரு பௌலில் காபிபொடியை (Coffee powder) சேர்த்து அதில் தயிரும் சேர்த்து நன்கு ஸ்மூத்தான பேஸ்ட்டாக கலந்து கொள்ளுங்கள். அதில் அரை ஸ்பூன் தேனும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். இந்த பேஸ்பேக்கை முகத்தில் அப்ளை செய்யும் முன் முகத்தை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். அதன்பின் இந்த பேஸ்பேக்கை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் அப்ளை செய்து 15-20 நிமிடங்கள் வரை உலர விடுங்கள்.
பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவிக் கொள்ளுங்கள். வறண்ட சருமம் உடையவராக இருந்தால் தயிருக்கு பதிலாக பால் சேர்த்துக் கொள்ளலாம். இந்த பேஸ்பேக் தொடர்ந்து பயன்படுத்தி வரும்போது சருமம் மென்மையாக மாறும்.
கருவளையங்கள் மறைய | Dark Circles Home Remedies
கண்ணுக்கு கீழ் இருக்கும் கருவளையங்களை நீக்கும் ஆற்றல் இந்த காபி பொடிக்கு இருக்கிறது. கருவளையங்களைப் போக்க காபி பொடியை எப்படி பயன்படுத்தலாம் என பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருள்கள் :
1.காபி பொடி - 1 ஸ்பூன்
2.தேங்காய் எண்ணெய் - 1 ஸ்பூன்
செய்முறை:
ஒரு பௌலில் காபி பொடியும் தேங்காய் எண்ணெயும் சேர்த்து பேஸ்ட்டாகக் கலந்து அதை கண்ணுக்குக் கீழே உள்ள கருவளையங்கள் உள்ள பகுதிகள் மற்றும் கண்களைச் சுற்றிலும் அப்ளை செய்யுங்கள்.
பிறகு மென்மையாக மசாஜ் செய்து விடுங்கள். இப்படி செய்வதன் மூலம் கண்களைச் சுற்றிலும் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதிலுள்ள காஃபைன் கண்ணுக்கு கீழ் உள்ள கருவளையங்களைப் போக்கும்.
முகப்பருக்களை அழிக்கும் காபி | coffee for pimples
தேவையான பொருள்கள் :
1.காபி பொடி - 1 ஸ்பூன்
2.தேன் - 1 ஸ்பூன்
3.எலுமிச்சைச் சாறு - 1 ஸ்பூன்
செய்முறை:
ஒரு பௌலில் காபி பவுடரைச் சேர்த்துக் கொண்டு, அதில் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து மிக்ஸ் செய்து கொள்ளுங்கள். முகத்தை நன்கு கழுவிவிட்டு பின் இந்த கலவையை முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் வரை உலர விடுங்கள். பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவிக் கொள்ளுங்கள். | Coffee powder benefits in tamil
இப்படி செய்வதன் மூலம் சருமத்தில் ஏற்படும் சீபம் சுரப்பைக் கட்டுப்படுத்தி பருக்கள் வருவதைத் தடுக்கும்.
சருமம் பளபளப்பாக மாற காபி ஸ்கிரப் | coffee for skin whitening
தேவையான பொருள்கள்:
1.காபி பவுடர் - 1 ஸ்பூன்
2.ஆரஞ்சு தோல் பொடி - 1 ஸ்பூன்
3.தயிர் - 1 ஸ்பூன்
செய்முறை:
ஒரு பௌலில் காபி பொடி, ஆரஞ்சு தோல் பொடி மற்றும் தயிர் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து ஸ்மூத்தான பேஸ்ட்டாக மாற்றிக் கொள்ளுங்கள்.இவை சருமத்தில் உள்ள அழற்சி மற்றும் பிற பிரச்சனைகளைச் சரிசெய்து சரும நிறத்தையும் அதிகரிக்கும். பருக்கள் உள்ளிட்டவை வராமல் தடுக்கவும் செய்யும். இந்த பேஸ்ட்டை முகத்தைக் கழுவிவிட்டு, முகத்தில் அப்ளை செய்யுங்கள்.
காபி லிப் ஸ்கிரப்
தேவையான பொருள்கள் :
1.காபி பொடி - 1 ஸ்பூன்
2.தேன் - அரை ஸ்பூன்
3.சர்க்கரை - 1/2 ஸ்பூன்
செய்முறை:
ஒரு பௌலில் காபி, தேன் மற்றும் சர்க்கரை ஆகியவற்றைச் சேர்த்து மிக்ஸ் செய்து உதடுகளில் அப்ளை செய்து லேசாக விரல்களால் மென்மையாக ஸ்கிரப் செய்து கொடுங்கள். இப்படி ஸ்கிரப் செய்யும்போது உதடுகளில் இருக்கும் இறந்த செல்களை நீக்கி உதடுகளில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும். இதனால் உதடுகளில் உள்ள கருமையை நீக்கி உதட்டின் நிறத்தை மேம்படுத்தும்.
காபியை ஸ்கின் கேரில் பயன்படுத்தும் முன் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் | Coffee powder benefits in tamil
உங்களுடைய பாடி வாஷில் காபி பொடியைச் சேர்த்து பயன்படுத்தலாம். அப்படி பயன்படுத்தும் போது அது க்ளன்சராக மட்டுமின்றி, ஸ்கிரப்பாகவும் செயல்படும். காபியால் ஏதேனும் அழற்சி ஏற்படும் என்று நினைத்தால் அதற்கு முன்பாக ஒரு சிறிய பேட்ச் டெஸ்ட் செய்து கொள்ளுங்கள்.
வறண்ட மற்றும் சென்சிடிவ் சருமம் உடையவர்கள் காபியை சருமப் பராமரிப்பில் சேர்ப்பதை தவிர்ப்பது நல்லது. காஃபைன் சேர்த்த பொருள்களைப் பயன்படுத்திய பின் கட்டாயம் சருமத்திற்கு மாய்ஸ்ரைஸர் அப்ளை செய்ய வேண்டும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu