25 வயதிலேயே சுகர் வருதா ?.. நீங்க கவனமா இருக்க இதெல்லாம் கவனிங்க....!
நீரிழிவு நோய் இப்போது எல்லா வயதினருக்கும் வரக் கூடிய நோயாக மாறிவிட்டது , குறிப்பாக இளம் வயதினரை மிகவும் அச்சுறுத்துகிறது . இதை நாம் முன்கூட்டியே கையாளாமல் விட்டால் எதிர்காலத்தில் பெரிய பிரச்சனைகள் வர வாய்ப்புகள் அதிகம்.நீரிழிவு நோய் எனப்படும் சர்க்கரை நோய் பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகள், இளைஞர்கள் உட்பட அனைத்து வயதினரையும் பாதிக்கிறது. இந்த நீரிழிவு நோய் தற்போது இளம் வயதினரை அதிகமாக பாதித்து இளம் நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. இளம் வயதினருக்கு அதாவது 20 முதல் 30 வயது உள்ளவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான காரணங்கள் மற்றும் அறிகுறிகள் குறித்து பார்ப்போம்.
இளம் வயதினருக்கு நீரிழிவு நோய் வருவதற்கான முக்கியமான அறிகுறிகள்:
1. அடிக்கடி தண்ணீர் தாகம் எடுக்கிறது என்றால், இது நீரிழிவு நோயின் அடிப்படை அறிகுறியாக இருக்கலாம்.
2. சருமம் பளபளப்பற்ற மற்றும் மஞ்சள் நிறமாக மாறுதல் .
3. எந்தவித உணவுக் கட்டுப்பாடும் இல்லாமலே, உடல் எடை குறைந்து வருவது, உடலின் இன்சுலின் நிலை குறைவாக இருப்பதை குறிக்கலாம்.
4. கண்ணில் தெளிவில்லாமல் மங்கலாக தெரிவது , கண் பார்வையில் சிரமம் ஏற்படுவது நீரிழிவு நோயின் காரணமாக இருக்கலாம்.
5. அதிகமாக தண்ணீர் அருந்துவதால், உடலில் உள்ள நீரிழிவு அளவு அதிகரிக்க, அடிக்கடி சிறுநீர் கழிப்பது அறிகுறியாக இருக்கலாம்.
6. தினசரி செயலில் சோர்வு அதிகமாக இருந்தால், சர்க்கரையின் அளவுக் குறைவு அல்லது அதிகரிப்பு காரணமாகவும் இருக்கலாம் .
7. காயங்கள், வெட்டுக்கள் வேகமாக ஆறவில்லை என்றால், இது நீரிழிவு நோயின் அறிகுறியாக இருக்கலாம்.
8. கழுத்து மற்றும் இடுப்பில் தோல் கருமை நிறமாக மாறுதல்.
9. பாதங்களில் எரிச்சல் அல்லது உணர்ச்சியின்மை ஏற்படுதல் .
10. அடிக்கடி பசி எடுத்தல் .
உடனடியாக சிகிச்சை பெற வேண்டிய அவசியம்:
இவற்றுள் ஏதேனும் ஒரு அறிகுறி இருந்தாலும், உடனடியாக மருத்துவரை அணுகி சரியான பரிசோதனைகள் மற்றும் சிகிச்சையை தொடங்குவது முக்கியம்.இளம் வயதினர்கள் ஆரோக்கியமான உணவுப் பழக்கம், தவிர்க்க முடியாத உடற்பயிற்சியை பின்பற்றுவதன் மூலம் நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu