மழைக்காலத்துல சளி, இருமலா? எல்லாம் பறந்து போயிடும்...! இந்த டீ ட்ரை பண்ணுங்க! | Best drinks for rainy season in tamil

மழைக்காலத்துல சளி, இருமலா? எல்லாம் பறந்து போயிடும்...! இந்த டீ ட்ரை பண்ணுங்க! | Best drinks for rainy season in tamil
X
மழைக்காலங்களில் உடலின் நோயெதிர்ப்பு சக்தி சற்று பலவீனமாக இருக்கும். இதனால் தான் காலநிலை குளிர்ச்சியாகும் போது, பலரும் காய்ச்சல், சளி, இருமல் போன்ற பிரச்சனைகளை சந்திக்கிறார்கள்.இப்போது மழைக்காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க எந்த மாதிரியான டீக்களைக் குடிக்கலாம் என்பதைக் காண்போம்.

மழைக்காலம் ஆரம்பிச்சாலே நம்ம உடம்புல பல பிரச்சனை வந்துருது, முக்கியமா சளி,இருமல், காய்ச்சல், பனி வெடிப்பு போன்ற நிறைய பிரச்சனைகள் வருது.இதனால,நோயெதிர்ப்பு சக்தி குறைஞ்சு உடம்பு பலவீனமாகி சோர்ந்து போயிடுவோம்.அதனாலயே மழைக்காலத்துல பல பிரச்சனைகளை(Problems faced during rainy season) சந்திக்க அதிக வாய்ப்பு நேரிடும்.

மழைக்காலம் (Best drinks for rainy season in tamil) என்பது நம்ம உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டிய காலகட்டம். இந்த சீசன்ல தான் நோய்த்தொற்றுகள் அதிகமாக பரவும் என்பதால நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மிகவும் முக்கியமாகும். இதற்கு உதவும் சிறந்த வழி, வீட்டிலேயே தயாரித்து குடிக்கக்கூடிய ஆரோக்கியமான தேநீர் தான். அப்டி என்னென்ன தேநீர்லா செய்யலாம்னு பாக்கலாம் வாங்க.

மழைக்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சில தேநீர் வகைகள் | Best drinks for rainy season in tamil

இஞ்சி டீ (Ginger tea)


இஞ்சி((Ginger) இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் பொருள். இது வீக்கத்தைத் தணித்து, குளிர், காய்ச்சல் போன்ற நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.இந்த இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை, நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துவதோடு,செரிமான பிரச்சனைகளைத் தடுக்கவும் உதவுகிறது. இப்படிப்பட்ட இஞ்சியைத் துருவி கொதிக்கும் நீரில் சேர்த்து, சில நிமிடங்கள் ஊற வைத்து, பின் வடிகட்டி, சுவைக்கேற்ப தேன் மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து குடித்து வாருங்கள்.

துளசி தேநீர் (Basil tea)


துளசி(Basil) நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, தொண்டை வலியையும் குறைக்கிறது. இது சுவாச நோய்களுக்கு சிறந்த மருந்தாகும்.துளசியில் ஆன்டி-பாக்டீரியல், பூஞ்சை எதிர்ப்பு மற்றும் ஆன்டி-வைரல் பண்புகள் இருப்பதால், இந்த துளசியைக் கொண்டு டீ தயாரித்து குடிக்கும் போது, மன அழுத்தத்தைக் குறைகிறது . அதற்கு கொதிக்கும் நீரில் ஒரு கையளவு துளசி இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, சுவைக்கேற்ப தேன் சேர்த்து குடிக்க வேண்டும்.

கற்பூரவல்லி தேநீர் (Camphor tea)


கற்பூரவல்லி(Camphor) நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, தோல் தொற்றுகளையும் குணப்படுத்துகிறது. இது சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

மஞ்சள் பால் (Turmeric milk)


மஞ்சளில்(Turmeric) உள்ள குர்குமின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, வீக்கத்தையும் குறைக்கிறது. பாலுடன் சேர்த்து குடிக்கும் போது, நோய் எதிர்ப்பு சக்தி இன்னும் அதிகமாகும்.

பொடி திப்பிலி தேநீர் (Powdered Tibili tea)


பொடி திப்பிலி (Powdered Tibili) சளி, இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாகும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, சுவாச மண்டலத்தை சுத்திகரிக்கிறது.

மசாலா டீ (Spiced tea)


மசாலா டீ (Spiced tea) மழைக்காலங்களில் குடிக்க ஏற்ற அற்புதமான பானம். மசாலா டீயில் ஏலக்காய், பட்டை, கிராம்பு, மிளகு போன்ற உடலுக்கு இதமளிக்கும் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகள் இருப்பதால், இந்த டீயை மழைக்காலத்தில் குடித்து வந்தால், செரிமானம் மேம்படும், சளி, இருமலில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

புதினா டீ (Mint tea)


புதினா டீ(Mint tea) மழைக்காலத்தில் புத்துணர்ச்சி அளித்து, உடலை இதமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. ஆய்வு ஒன்றின் படி, புதினாவில் உள்ள பண்புகள் செரிமான பிரச்சனைகளை சரிசெய்யவும், தலைவலியைக் குறைக்கவும், நெஞ்சில் தேங்கியுள்ள சளியை வெளியேற்றவும்உதவுகிறது . முக்கியமாக இந்த புதினா உடலை மட்டுமின்றி, மனதையும் அமைதியாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

மழைக்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மற்ற சில வழிகள் | Precautions for rainy season in tamil

1.ஆரோக்கியமான உணவு உண்ணுங்கள்.

2.போதுமான தண்ணீர் குடிக்கவும்.

3.தினமும் உடற்பயிற்சி செய்யவும்.

4.போதுமான தூக்கம் எடுக்கவும்.

5.மன அழுத்தத்தைத் தவிர்க்கவும்.

மழைக்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க (To boost immunity during rainy season in Tamil) இந்த தேநீர் வகைகளை தினமும் குடிப்பது மிகவும் நல்லது. இது உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

Tags

Next Story