சர்க்கரை நோய் இருக்கா.. டீ, காபி குடிக்க முடிலயா..? இந்த பானத்தை ட்ரை பண்ணி பாருங்க..!

சர்க்கரை நோய் இருக்கா.. டீ,  காபி குடிக்க முடிலயா..? இந்த பானத்தை ட்ரை பண்ணி பாருங்க..!
X
சர்க்கரை நோயின் மூலம் உடல் நிலையை கட்டுப்படுத்துவது முக்கியமாக இருக்கின்றது. அதற்கான முறைகள் உடல் ஆரோக்கியம், சரியான உணவு, உடற்பயிற்சி, மற்றும் சில வீட்டு மருந்துகள் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும்

சர்க்கரை நோய் (Diabetes) என்பது உடலில் இன்சுலின் (insulin) செயல்பாடு குறைவைத அல்லது சர்க்கரையின் பரிமாற்றம் சீராக நடைபெறாத ஒரு நிலை ஆகும் . இந்த நோயின் மூலம் உடலில் சர்க்கரையின் அளவு அதிகமாகும். அது உடலின் பல முக்கிய உறுப்புகளுக்கு தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். சர்க்கரை நோயை கட்டுப்படுத்த இயற்கை முறைகள், ஊட்டச்சத்துகள், சரியான வாழ்க்கை முறை, உடற்பயிற்சி உதவிகரமாக இருக்கக்கூடும்.ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14 ம் தேதி உலக சர்க்கரை நோய் தினம் அனுசரிக்கப்படுகிறது அதில் இந்த சர்க்கரை நோய்க்கான விழிப்புணர்வுகளை மற்றும் பலவிதமான முன்னெச்சரிக்கை நடவெடிக்கைகளும் மேற்கொள்கின்றனர் .

சர்க்கரையை கட்டுப்படுத்த உடற்பயிற்சி முக்கியமானது.அதனால் தினமும் உடற்பயிற்சியும் மேற்கொள்வது அவசியம் .கெட்ட கொழுப்புகள் உள்ள உணவுகளை குறைத்து, இரசாயனம் இல்லாத உணவுகளைக் கொண்டுவந்து, சர்க்கரையை நோயை கட்டுப்படுத்துங்கள்.இவை அனைத்தையும் போக , சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த பின்வரும் வீட்டு முறை பானங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன.

வீட்டு முறை பானங்கள் | Home made drinks

முருங்கைக்கீரை சாறு (Moringa Juice)

முருங்கைக்கீரை (Moringa) ஒரு சக்திவாய்ந்த பச்சைக்கீரை வகை ஆகும். இது சர்க்கரையை கட்டுப்படுத்தவும், உடலின் இன்சுலின் ஆலைசிலின் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது.காலையில் உணவிற்கு முன், தினமும் 1 குவளை பருக வேண்டும்.

நெல்லி சாறு (Amla Juice)

நெல்லி (Indian Gooseberry or Amla) ஒரு சிறந்த சிகிச்சை முறையாக கருதப்படுகிறது. இது பல்வேறு தாதுக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்டுகளுடன் நிறைந்துள்ளது. அதனால் இது சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது.


புதினா சாறு (Mint Juice)

புதினா (Mint) சாறு அதிக பயன்கள் மிகுந்தவை. ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளன. இவை இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துவதோடு, இரத்த சர்க்கரையையும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவுகின்றன. அதற்கு இந்த டீயை இரவு தூங்கும் முன் குடிப்பது நல்லது.

மஞ்சள்பால் ( Turmeric golden milk )

மஞ்சள்பால் மஞ்சளில் அழற்சி மற்றும் நூலை எதிர்ப்பு சக்திகள் அதிகம் உள்ளன. இந்த மஞ்சள்தூளை மிதமான சூடு உள்ள பாலுடன் சேர்த்து கலந்து குடித்து வரும்போது, அது இன்சுலின் திறனை அதிகரித்து மேம்படுத்துவதோடு, இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. இந்த மஞ்சள் பாலை இரவு தூங்கும் முன் குடித்து வந்தால், இரத்த சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம்.

ஆப்பிள் சீடர் வினிகர் ( Apple cider vinegar )

ஆப்பிள் சீடர் வினிகர் உள்ள ஆரோக்கிய நன்மைகள் காரணமாக .சமீப காலமாக மக்களிடையே பிரபலமாக உள்ளது. 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு டம்ளர் நீரில் கலந்து குடித்து வந்தால் இப்படி இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும்.

பாதாம்பால் ( Badam paal )

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற ஒரு பானமாக இந்த பாதாம்பால் விளங்குகின்றது .இந்த பாதம்பாலை இரவு தூங்குவதற்கு முன் குடித்து வந்தால், இரத்த சர்க்கரை அளவு நிலையாக இருக்கும் மற்றும் உடலுக்கு வேண்டிய அத்தியாவசிய சத்துக்களும் கிடைக்கும். ஏனெனில் இந்த பாலில் ஆரோக்கியமான கொழுப்புக்கள் அதிகமாகவும், கார்போஹைட்ரேட்டுகள் குறைவாகவும் உள்ளது அதனால் மிகுந்த பயனுள்ள ஒரு பானமாக இந்த பாதாம்பால் உள்ளது .


சர்க்கரை நோயாளிகளுக்கு உதவக்கூடிய ஒரு இயற்கை தீர்வு இவை அனைத்தும் இருக்கக்கூடும். ஆனால், அதனை நீங்கள் எடுத்துக்கொள்வதற்கும், எந்தவொரு இயற்கை மருந்தையும் பயன்படுத்துவதற்கும், மருத்துவரின் ஆலோசனை மற்றும் பரிந்துரைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

Tags

Next Story
சிக்கன் , மட்டன் எதுக்கு...? கால் கிலோ சுண்டல் போதுமே..! அந்த ரகசியம் தெரியுமா...?