தினமும் காலைல சியா விதைகளை சாப்பிடுறீங்களா ?... அப்ப அதுல இருக்க நன்மைகளையும் , பக்க விளைவுகளையும் தெரிஞ்சுக்கோங்க ..!
சியா விதைகள் இன்றி ஒரு கோடைகாலம் இருக்க முடியாது. சாதாரணமாக சாலையோரங்களில் உள்ள ஜூஸ் கடைகளில் கூட நாம் பருகும் குளிர்பானங்களில் சியா விதைகளை கலந்து தருவார்கள். இது மட்டுமல்லாமல் சாலட் தயாரிக்கும்போது கூட சியா விதைகளை சேர்த்துக் கொள்ளலாம். இதை எப்படி உபயோகித்தாலும் முதலில் தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பார்ப்பதற்கு அளவில் சிறியதாக உள்ள சியா விதைகளில் நம் உடலுக்கும், மனதிற்கும் பலன் தரக் கூடிய அம்சங்கள் நிரம்பியுள்ளன. ஆனால் மற்ற நேரத்தை விடகாலையில் எடுத்துக் கொள்ளும்போது என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பது பற்றி சிலவற்றை இந்தச் செய்தியில் பார்க்கலாம்.
சியா விதைகளை காலையில் எடுத்துக்கொள்வது நமது ஆரோக்கியமான உணவு முறைகளில் ஒன்றாகும் .சியா விதைகளில் சுமார் 92 சதவீதம் அளவுக்கு நார்ச்சத்து நிரம்பியுள்ளது. மேலும் புரதம் மற்றும் ஆன்டி -ஆக்சிடன்ட்கள் அதிகம் உள்ளன. அவை காலை நேரத்தில் நம் உடலின் ஊட்டச்சத்தை அதிகரிக்க சிறந்த வழியாகும்.
சியா விதைகளை எப்படியெல்லாம் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்?
சியா நீர் : சியா விதைகளை தண்ணீரில் ஊற வைத்து அதை வெந்நீரிலோ அல்லது சாதாரண நீரிலோ கலந்து குடிக்கலாம் .
எலுமிச்சை நீர் : எலுமிச்சை நீரில் ஊறவைத்த சியா விதைகளை ஒரு ஸ்பூன் அளவு சேர்த்து குடிக்கலாம்.
சாலட்களில் : வெஜிடபிள் மற்றும் ஃப்ரூட் சாலட்டுகளின் மேல் சியா விதைகளை தூவி சாப்பிடலாம்.
ஸ்மூத்திகளில் : வழக்கமாக காய்கறி, கீரை, பழங்களின் ஸ்மூத்திகளில் சியா விதைககளை கலந்து குடிக்கலாம்.
சியா விதைகளின் நன்மைகள் :
- சியா விதைகளில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளன . இதனால், மாவுச்சத்து குறைவாக இருக்கிறது. இந்த நார்ச்சத்து என்பது கரையும் தன்மை கொண்டது. நம் குடலில் உள்ள நன்மை பயக்கும் பாக்டீரியாக்களுக்கு உணவாக பயன்படுகிறது. இதனால், குடல் நலன் மேம்படும்.
- சியா விதைகளை தினமும் நம் உணவுகளில் சேர்த்துக்கொள்வதன் மூலம் இதயம் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளையும் தவிர்க்கலாம் .
- நமது எலும்புகளுக்கு வலுவூட்டக் கூடிய கால்சியம், புரதம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துகள் சியா விதைகளில் இருக்கிறது. பால் பொருட்களை தவிர்ப்பவர்களுக்கு கால்சியம் சத்து கிடைக்க உதவியாக இருக்கும். இதனால் , நம் எலும்புகள் பலப்படும் .
- சியா விதைகளில் ஆன்டி -ஆக்சிடன்ட்கள் அதிகம் உள்ளன . உடலின் செல்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடிய கிருமிகளை அழிப்பதில், சியா விதைகளில் உள்ள ஆன்டி- ஆக்சிடன்ட்கள் சத்துகளின் பங்கு அதிகமாகும். வயது முதிர்வை தடுக்கிறது.
- இதில் புரதச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இதை அதிகம் எடுத்துக் கொள்ளும்போது நமக்கு பசி உணர்வு கட்டுப்படுகிறது. இதனால், இரவு நேர பசி அல்லது ஸ்நாக்ஸ் சாப்பிடும் ஆசை கட்டுப்படுத்தப்படுகிறது.
- நிரம்பிய புரதச் சத்து மற்றும் நார்ச்சத்து போன்றவை இருப்பதால் உடல் எடையை குறைக்க உதவிகரமாக இருக்கும். இதை சாப்பிடும்போது வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படும்.
- சியா விதைகள் குளிர்ச்சியை தரக்கூடியது . கோடை காலத்தில் நம் உடலில் நீர்ச்சத்தை தக்க வைத்துக் கொள்ளவும், உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளவும் இது உதவிகரமாக இருக்கும். சியா விதைகளை எடுத்துக் கொண்டால் வாதம், பித்தம் குறையும் என்றும், கபம் (நீர்ச்சத்து) அதிகரிக்கும் என்றும் ஆயுர்வேத மருத்துவம் கூறுகிறது.
சியா விதைகளை அதிகம் சேர்ப்பதால் வரும் பக்க விளைவுகள் :
ஜீரணக் கோளாறுகள் : சியா விதைகளை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்வது, அதேசமயம் அதிகமாக தண்ணீர் குடிக்காமல் இருக்கும்போது வயிறு வலி, வாய்வுத் தொல்லை, மலச்சிக்கல் உள்ளிட்ட அஜீரணக் கோளாறுகள் உண்டாகும்.
அழற்சி : இது மிக அரிதாக ஏற்படக்கூடிய பக்க விளைவு தான். ஆனால் வெகுசிலருக்கு இந்த பிரச்சனை வரும். சருமத்தில் அரிப்பு எரிச்சல் உள்ளிட்ட பிரச்சனைகள் வரும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu