உங்க உடம்புல இரத்தமே இல்லையா..இனிமே தினம் இத சாப்பிடுங்க.. அப்றம் டாக்டர் கிட்ட போகவே மாட்டீங்க..! | Beetroot benefits in tamil

உங்க உடம்புல இரத்தமே இல்லையா..இனிமே தினம்  இத சாப்பிடுங்க.. அப்றம் டாக்டர் கிட்ட போகவே  மாட்டீங்க..! | Beetroot benefits in tamil
X
பீட்ரூட்டில் மிக அதிக அளவில் இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் பி1 அதிகமாக இருப்பதால் இது ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்கிறது. ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது.இது மட்டும் இல்லாமல் இன்னும் பல நன்மைகளை செய்கிறதா.? என்பதை பார்க்கலாம்.

பீட்ரூட்(Beetroot) என்பது மிக சிறந்த காய் வகைகளுள் ஒன்று. இது கிழங்கு போன்று இருக்கும். மிக மிக உடலுக்கு நல்லது. ரத்தம் போன்ற கலரில் இருக்கும். இது தொடர்ந்து சாப்பிட்டால் ரத்தம் அதிகரிக்கும் ஸ்கின் க்ளோவ் ஆகும்.

பீட்ரூட் | Beetroot benefits in tamil

பெரும்பாலும் இந்த காய் மலை பகுதியில் தான் அதிகம் வளரும்.இது இந்தியாவில் மட்டும் இல்லை வெளிநாடுகளில் விளைவிக்க செய்கின்றனர். அனைவரும் விரும்பி உண்ணும் காய்.ஒரு சிலர் வீட்டிலே விளைவிக்கிறார்கள். விலையும் மலிவு தான்.ரத்த சோகை உள்ளவர்கள் அடிக்கடி எடுத்து கொள்ளலாம்.இதை கூட்டு, பொரியல், சட்னி , தோசை என பல வகைகளில் சமைத்து சாப்பிடுவார்கள்.உடலுக்கு மிகுந்த பலனை(Beetroot benefits in tamil) தர கூடியது.பீட்ரூட்(Beetroot) ரத்தத்தை அதிக அளவில் உற்பத்தி செய்யும்.


பீட்ரூட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்| (Benefits of Eating Beetroot)

1.அல்சர் குணமாக | (To cure ulcer)

காரமான உணவுகள் அதிகமாக எடுத்துக் கொண்டாலோ அல்லது முறையான வாழ்க்கை முறையைப் பின்பற்றாமல் இருப்பவர்களுக்கு அல்சர் ஏற்படும் வாய்ப்பு அதிகம். அப்படி அல்சரால் அவதிப்படுகிறவர்கள் பீட்ரூட்டை (Beetroot) தங்களுடைய உணவில் அதிகமாக எடுத்துக் கொள்ளலாம். தினமும் சாப்பிடத் தேவையில்லை. வாரத்தில் 3 நாட்கள் பீட்ரூட்(Beetroot) ஜூஸில் சிறிதளவு தேன் சேர்த்து கலந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் அல்சர்(To cure ulcer) விரைவில் குணமாகும்.

2.உடல்உறுப்பு சுத்தம் செய்யும் | (Cleanses body organs)

சிறுநீரகம், பித்தப்பை, கல்லீரல் போன்ற உடலின் உள்ளுறுப்புகளில் இருக்கும் நச்சுக்களை நீக்குவதற்கும் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி சுத்தப்படுத்தவும்(Cleanses body organs) பீட்ரூட் ஜூஸ் மிகச் சிறந்த தீர்வாக இருக்கும். மாதத்தில் நான்கு நாட்கள் பீட்ரூட் ஜூஸை எடுத்துக் கொள்வதால் உடல் உறுப்புகள் சுத்தமடையும்.


3.ரத்த சிவப்பணுக்கள் | (Increases blood circulation)

பீட்ரூட்டில் மிக அதிக அளவில் இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் பி1 அதிகமாக இருப்பதால் இது ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்கிறது. ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச்(Increases blood circulation) செய்கிறது.பீட்ரூட் ஜூஸில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து குடியுங்கள். சுவையும் கூடும். பச்சையாக பீட்ரூட்டை (Beetroot) மெல்லிய துண்டுகளாக நறுக்கியும் அதில் எலுமிச்சை சாறில் தொட்டும் சாப்பிடலாம்.

4.​தீக்காயம் சரியாக | (Heals burns)

சருமத்தில் தீக்காயங்கள் ஏதேனும் ஏற்பட்டால், சருமத்தில் புண், கொப்புளங்கள் ஆகியவை உண்டாகும். அது அதிக எரிச்சலையும் வலியையும் உண்டாக்கும். அப்படி ஏற்படும் தீக்காயங்கள் கொப்புளங்களாக மாறாமல் இருக்கவும் காயங்கள் எரிச்சலையும் ஏற்படுத்தாமல் இருப்பதற்காக பீட்ரூட்டைப்(Beetroot) பயன்படுத்தலாம். தீக்காயம்(Heals burns) பட்ட இடங்களில் பீட்ரூட் (Beetroot) சாறினை தடவி வந்தால் அது காயம் பட்ட இடங்களில் கொப்புளங்கள் ஏற்படாமல் இருக்கும்.

5.​அழற்சி பண்புகள் | (Anti-inflammatory properties)

பீட்ரூட்டில்(Beetroot) பீட்டாலைன் என்னும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிக அளவில் நிறைந்திருப்பதால் நாள்பட்ட அழற்சி போன்றவற்றைத் தீர்க்க உதவுகிறது. குறிப்பாக சிறுநீரகத்தில் உண்டாகிற அழற்சியைப்(Anti-inflammatory properties) போக்க உதவுகிறது.


6.ஜீரண சக்தி அதிகரிக்க | (To improve digestion)

நீரில் கரையும் நார்ச்சத்துக்கள் பீட்ரூட்டில்(Beetroot) மிக அதிக அளவில் உள்ளதால் ஜீரண சக்தியை அதிகரிக்கச்(To improve digestion) செய்யும். மெட்டபாலிசத்தை அதிகரிக்ச் செய்யும். பெருங்குடல் நீரை அதிகமாக உறிஞ்சாமல் பார்த்துக் கொண்டு பெருங்குடலைச் சுத்தமாக வைத்திருக்கச் செய்யும்.

பீட்ரூட்டில் உள்ள சத்துக்கள்| (Nutrients in Beetroot)

கார்போஹைட்ரேட் , புரதச்சத்து,நார்ச்சத்து ,கால்சியம் ,இரும்பு, சோடியம் , மெக்னீசியம் , பாஸ்பரஸ், பொட்டாசியம் ஜிங்க்,மாங்கனீசு,வைட்டமின் சி , பீட்டெய்ன்,ஃபோலேட் , மாவுச்சத்து, நார்ச்சத்து.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!