முகத்திலும் தலைமுடியிலும் மாயங்கள் செய்யும் பாட்டி கால அரப்பு பொடி! எந்தவித தலைமுடி & முக பிரச்சனைக்கு தீர்வு !
அரப்புப்பொடி :
அரப்பு எனனும் தாவரவியல் பெயர் கொண்டது. அரப்பு மரத்திலுள்ள இலைகளைப் பறித்து நன்கு அரைத்து தலையில் ஹேர்பேக் போல அப்ளை செய்து நன்கு உலர விட்டு குளிப்பார்கள். அதே பேஸ்ட்டை உடல் முழுக்க சோப்பு போல பயன்படுத்திக் கொள்வார்கள். நம்முடைய ஷாம்புவை போல லேசாக இது நுரை வரும் பண்புகள் கொண்டது. அதனால் மிக எளிதில் அழுக்ககள் நீங்கும். அதுதவிர இந்த அரப்புக்கு நிறைய மருத்துவ குணங்களும் உண்டு. அவற்றை தெரிந்து கொண்டால் இன்றைக்கே நாட்டு மருந்து கடைகளில் அரப்பை தேடி வாங்கி வந்து பயன்படுத்த ஆரம்பித்து விடுவீர்கள்.இதை தலைக்கு பயன்படுத்தினால் முடி நீளமாக வளரும்.முகமும் பொலிவாகும்.
அரப்பை பயன்படுத்தினால் கிடைக்கும் மருத்துவ குணங்கள்:
1. அரப்பை இயற்கையான, ரசாயனங்கள் எதுவுமில்லாத நேச்சுரல் க்ளன்சர் என்று சொல்லலாம். அடிப்படையில் இது சருமம் மற்றும் தலைமுடியில் இருக்கும் அழுக்குகளை முற்றிலும் நீக்கும் தன்மை கொண்டது.
2.அரப்புக்கு குளிர்ச்சித் தன்மை அதிகம். இதை பயனபடுத்தும் போது உடல் சூடு தணிந்து குளிர்ச்சியடையும். அதேசமயம் வாத, பித்த, கப சமநிலையையும் ஏற்படுத்தும்.
3.அரப்பு இலைகளில் தலைமுடிக்குத் தேவையான பி வைட்டமினுடன் சேர்ந்து ஃபிளவனாய்டுகள், ஆல்கலாய்டுகள் மற்றும் கிளைக்கோசைடுகள் உள்ளிட்ட ஆற்றல் வாய்ந்த ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் நிறைந்து இருக்கின்றன.
தலைமுடிக்கு அரப்பு பொடியை எப்படி பயன்படுத்தலாம்:
1.கிராமப்புரங்களில் அரப்பு இலைகள் கிடைக்கும். அரப்பை தண்ணீர் சேர்த்து அரைத்து அப்படியே பயன்படுத்தலாம்.
2.அரப்பு பொடியாக கிடைத்தால் ஒரு பௌலில் உங்களுடைய முடியின் நீளத்துக்கு ஏற்றபடி அரப்பு பொடியை எடுத்துக் கொள்ளுங்கள்.
3.அதில் 4 ஸ்பூன் தயிர் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து திக்கான பேஸ்ட்டாக குழைத்துக் கொள்ளுங்கள்.
4.ஏற்கனவே தலையில் எண்ணெய் இருந்தால் இதில் சேர்க்கத் தேவையில்லை. இல்லையென்றால் ஒரு கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
5.இந்த பேஸ்ட்டை முடியின் வேர்க்கால்கள் முதல் நுனி வரை அப்ளை செய்து அரை மணி நேரம் ஊற விடுங்கள். பிறகு குளிர்ந்த நீரில் நன்கு தேய்த்து தலையை அலசிக் கொள்ளுங்கள்.
தலைமுடிக்கு அரப்பு பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்:
1.முடி உதிர்வை தடுக்கும்:
முடி அதிகமாக உதிர்வதற்கு முக்கியக் காரணமே உடல் சூடு தான். அந்த உடல் சூட்டைக் குறைத்து முடி உதிர்வையும் தடுக்கும்.
2.பொடுகுத் தொல்லை தீர:
தலைமுடியில் பொடுகு மற்றும் அரிப்பு ஆகியவை இருப்பவர்களுக்கு அரப்பு மிகச்சிறந்த தீர்வாக இருக்கும். அரப்பில் உள்ள ஆன்டி பாக்டீரியல் பண்புகள் உச்சந்தலை அரிப்பு மற்றும் பொடுகை விரட்டும் தன்மை கொண்டவை.
3.முடி வளர்ச்சிக்கு உதவும்:
முடியின் வேர்க்கால்களுக்குத் தேவையான ஊட்டச்சத்தை தந்து முடியின் வளர்ச்சியைத் தூண்டும். முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர உதவும்.
4.முடி பளபளப்பாக:
வெந்தயம், கற்றாழை ஆகியவை சேர்த்து குளிக்கும்போது முடி எவ்வளவு பளபளப்பாகவும் பொலிவாகவும் இருக்கிறதோ அதேபோல இந்த அரப்பு இலை பொடி தேய்த்து குளிக்கும்போது முடி அதிக பளபளப்புடன் இருக்கும். குறிப்பாக எண்ணெய் பசை உள்ள கூந்தலில் உள்ள அதிகப்படியான எண்ணையை இது உறிஞ்சி எடுக்கும்.இது உடலுக்கும் குளிர்ச்சி சேர்க்கும்.
சருமத்துக்கு அரப்பை எப்படி பயன்படுத்தலாம் :
1.அரப்பு பொடியை தினமும் சருமத்துக்குப் பயன்படுத்தி வந்தால் சருமம் மிக மிக மென்மையாக மாறும்.
2.ஒரு பௌலில் ஒரு ஸ்பூன் அரப்பு பொடியை எடுத்துக் கொள்ளுங்கள் . அதோடு தண்ணீர் அல்லது ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் பேஸ்பேக் போல அப்ளை செய்து 10 நிமிடங்கள் உலர விடுங்கள். பிறகு கழுவிக் கொள்ளுங்கள்.
3.ஆயில் ஸ்கின் உள்ளவர்கள் தயிரில் கலந்தும் டிரை ஸ்கின் உள்ளவர்கள் பாலில் கலந்தும் அப்ளை செய்து கழுவி வர, கூடுதல் பலன்கள் கிடைக்கும்.
சருமத்துக்கு அரப்பு பொடி பயன்படுத்தினால் கிடைக்கும் நன்மைகள்:
1.க்ளன்சர்:
நீங்கள் பயன்படுத்தும் பிஎச் அதிகமுள்ள சோப்புடன் ஒப்பிடும் போது அரப்பு பொடி ரசாயனங்கள் சேர்க்காத மிகச்சிறந்த க்ளன்சராக செயல்பட்டு சருமத்தில் உள்ள அழுக்குகளை முழுமையாக நீக்கும்.
2.எக்ஸ்ஃபோலியேட்:
சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குவதற்கு மிகச்சிறந்த எக்ஸ்ஃபோலியேட்டராக அரப்பை பயன்படுத்தலாம். அரப்பு பொடியுடன் அரிசி மாவு, கற்றாழை ஜெல் ஆகியவை சேர்த்து அப்ளை செய்து மென்மையாக ஸ்கிரப் செய்ய சருமத்திலுள்ள இறந்த செல்கள் முழுமையாக நீங்கும். இதை வாரத்தில் 1-2 முறை பயன்படுத்தலாம்.
3.சருமம் மென்மையாக :
வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு சருமம் மென்மையாக குழந்தை சருமம் போல மாற வேண்டுமென்றால் நீங்கள் உங்களுடைய சோப்புக்கு பதிலாக இந்த அரப்பு தூளை பயன்படுத்தலாம்.
4.சரும பிரச்சினைகள் தீர:
சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை உறிஞ்சி, பருக்கள் உண்டாவதை தடுக்கும். அதோடு சருமத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள், பருக்களால் உண்டான தழும்புகள், சருமத்தில் ஏற்படும் அரிப்பு, வீக்கங்கள் உள்ளிட்டவை குணமாகும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu