அகத்தி கீரைல இவ்வளவு நன்மைகள் இருக்ககா..? ஆமாங்க..! இதுல இருக்க பலன்கள் தெரிஞ்சா சாப்பிடாம இருக்க மாட்டிங்க! |Agathi keerai benefits in tamil

அகத்தி கீரைல இவ்வளவு நன்மைகள் இருக்ககா..? ஆமாங்க..! இதுல இருக்க பலன்கள் தெரிஞ்சா சாப்பிடாம இருக்க மாட்டிங்க! |Agathi keerai benefits in tamil
X
அகத்தி கீரை என்பது பல மருத்துவ குணங்கள் கொண்ட ஒரு சிறந்த இயற்கை மருந்தாகும். இதில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன.இந்த அகத்தியில் உள்ள நன்மைகள் என்ன என்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

அகத்தி கீரை (Agathi keerai benefits in tamil) இயற்கையின் மருத்துவக் கிடங்கு என்றும் அழைக்கப்படுகிறது. இந்த அகத்தி கீரைல நிறைய மருத்துவ குணங்கள் இருக்கு. இதில் ஏராளமான சத்துக்களும் நிறைந்துள்ளன. இதனை நாம் சூப்பாகவும் செய்து சாப்பிடலாம். இது நம்ம தோல் ஆரோக்கியத்துக்கும் , கண் பார்வைக்கும் ரொம்ப நல்லது.இதில் உள்ள சத்துக்கள் நம் உடலின் ஒவ்வொரு செல்லுக்கும் ஆரோக்கியத்தை அளிக்கின்றன.அகத்திக் கீரையில் இலையும், பூவும், காயும், பட்டையும், வேரும் மருந்தாகப் பயன்படுகின்றன.

அகத்தி கீரையின் நன்மைகள்| Agathi keerai benefits

சத்துக்கள் நிறைந்தது: அகத்தி கீரையில்(Agathi keerai benefits in tamil) புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இது உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் வழங்குகிறது.

இரத்த சோகையைத் தடுக்கிறது: அகத்தி கீரையில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இது இரத்த சோகையைத் தடுக்க உதவுகிறது.

எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது: அகத்தி கீரையில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளன. இது எலும்புகளை வலுப்படுத்துகிறது.


செரிமானத்தை மேம்படுத்துகிறது: அகத்தி கீரையில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்துகிறது.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது: அகத்தி கீரையில் (Agathi keerai) பொட்டாசியம் உள்ளது.இது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.

தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது: அகத்தி கீரையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது: அகத்தி கீரையில் வைட்டமின் ஏ உள்ளது. இது கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது: அகத்தி கீரையில் வைட்டமின் சி உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

மருத்துவப் பயன்கள் | Agathikeerai medicinal use

1.அகத்திக் கீரை காய்ச்சலைக் குறைத்து உடல்சூட்டை(Agathi keerai reduce body heat in tamil) சமன்படுத்தும்.

2.குடல்புண், அரிப்பு, சொறி சிரங்கு முதலிய தோல் நோய்களை அகத்திக் கீரை குணமாக்கும்.

3.ஆண் மலட்டு தன்மை, விந்தணுக்கள் குறைபாடு போன்றவைகளுக்கு அகத்திக் கீரை நல்ல தீர்வு தரும்.

4. அகத்தியில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பதோடு, சிறுநீரும் தடை இல்லாமல் செல்லவழி வகுக்கும்.

5.அகத்திக் கீரை வேர் மூட்டு வலிக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

6.இந்த கீரையில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது இருதயத்திற்கு ஆரோக்கியத்தை தருகிறது.


7.அகத்திக் கீரையை அரைத்து ஆறாத நாள்பட்ட புண்கள் மீது தடவினால் விரைவில் ஆறிவிடும்.

8.அகத்தி இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து, ஒரு ஸ்பூன் சாற்றோடு - அதே அளவு தேன் கலந்து உண்டு வர வயிற்று வலி நீங்கும்.

9.அகத்திக் கீரையுடன் சம அளவு தேங்காய் சேர்த்து அரைத்துச் சாறு எடுத்து, அதில் கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்த்து, கரும்பட்டை, தேமல், சொரி, சிரங்கு உள்ள இடத்தில் பற்றுப்போட்டால் முழுமையாக குணமடையும்.

10.அகத்திக் கீரை நுண்கிருமிகள் வளர்வதை தடுத்து நிறுத்துகிறது. எச்.ஐ.வி. போன்ற உயிர் கொல்லி கிருமிகளையும் தடுக்கிறது. நோய் தொற்று உள்ளவர்கள், அந்த கிருமி தொற்று இருப்பவர்களுக்கு அதன் வளர்ச்சி தடுக்கப்படுகிறது.

அகத்தி கீரையை எப்படி சாப்பிடலாம்?| Health benefits of agathi keerai

1.அகத்தி கீரையை பச்சையாக சாப்பிடலாம்.

2.அகத்தி கீரையை சூப்பாக (Agathi keerai soup in tamil) வைத்து சாப்பிடலாம்.

3.அகத்தி கீரையை கீரையாக சமைத்து சாப்பிடலாம்.

4.அகத்தி கீரையை பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிடலாம்.

அகத்தி கீரையை தினமும் சாப்பிடுவதன் மூலம் உங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!