விடாம ஏப்பம் வருதா? மருத்துவர பாக்றதுக்கு முன்னாடி இதெல்லாம் தெரிஞ்சிக்கோங்க!
நாம் சாப்பிடும்போது உணவுடன் சேர்த்து சிறிது காற்றையும் விழுங்குகிறோம். அந்தக் காற்றை இரைப்பை வெளியேற்றும் போது தான் ‘ஏப்பம்’ (Belching)உண்டாகிறது. ஒரு நாளில் ஒருமுறை ஏப்பம் (Belching) வருவது இயல்பானது. ஆனால், தொடர் ஏப்பம் வரும்போது நமக்கு எரிச்சலையும், அருகில் இருப்பவர்களை முகம் சுளிக்கவும் வைக்கும். அதுபோன்று வேகமாகச் சாப்பிடுவது, தண்ணீர் குடிப்பது, கார்பனேற்றம் செய்யப்பட்ட பானங்களைப் பருகுவது போன்ற பல காரணங்களாலும் ஏப்பம்(Belching) வரும். அடிக்கடி ஏப்பம் வருவதற்கு காரணம் என்ன? adikadi eppam vara karanam enna
இரவில் தாமதமாகச் சாப்பிடும்போதும், மசாலா சேர்த்த உணவுகளை அதிகமாக உண்ணும்போதும் இரைப்பையில் அமிலத்தன்மை அதிகரிக்கும். இதனால் நெஞ்செரிச்சலுடன் புளிப்பான ஏப்பம் உண்டாகும். அதுபோன்று, சாப்பிட்டவுடன் படுத்தால் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு ஏப்பம் வரும். அடிக்கடி, அதிக சத்தத்துடனும், ஒருவித வாடையுடனும் வரும் ஏப்பம் அஜீரணம், நெஞ்செரிச்சல், வயிற்று புண் ஆகியவற்றின் அறிகுறி ஆகும். ஏப்பத்தைக் கட்டுப்படுத்த என்ன கை வைத்தியம் உள்ளது என்பதைப் பற்றி தெரிந்துகொள்வோம்:
ஏப்பத்தைக் கட்டுப்படுத்தும் உணவு முறைகள் | Dietary habits to control bloating
இரைப்பையில் தேவைக்கு அதிகமாக சுரக்கும் அமிலத்தன்மையைக் குறைக்கக் கூடிய கீரை வகைகள், இஞ்சி, சோம்பு, சீரகம் போன்றவற்றை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளும்போது அடிக்கடி வரும் ஏப்பத்தைத் (Belching) தடுக்க முடியும்.
பழங்கள்:
ஆரஞ்சு, எலுமிச்சை, பப்பாளி பழங்களைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஏப்பம் (Belching) வருவது குறையும்.
புதினா மற்றும் ஏலக்காய் டீ:
கொதிக்கும் தண்ணீரில் புதினா இலைகளைப் போட்டு ஐந்து நிமிடங்கள் நன்றாகக் கொதிக்க வைக்கவும். பின்பு அந்த நீரை வடிகட்டி அதனுடன் நாட்டுச் சர்க்கரை கலந்து குடித்து வரலாம்.
வாயுத் தன்மை அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடும்போது ஏலக்காய் டீ குடிப்பது செரிமானத்தைத் துரிதப்படுத்த உதவும். இதனால் ஏப்பம்(Belching) வருவது குறையும்.
பெருங்காயம்:
சூடான நீரில் சிறிது பெருங்காயத்தைக் கலந்து உணவு சாப்பிடுவதற்கு முன்பு குடித்தால், ஏப்பம் (Belching) உள்ளிட்ட வயிறு தொடர்பான பிரச்சனைகள் குணமாகும்.
தயிர்:
தயிரில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் வயிற்று கோளாறுகளை குணமாக்கும் திறன் கொண்டவை.
பூண்டு:
பூண்டில் இருக்கும் ரசாயன மூலக்கூறுகள், வாயு தொடர்பான கோளாறுகளை நீக்கும். எனவே இதை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu