உங்க மூளைக்கு சவால்விடும் ஆப்..! ரிலாக்X பண்ணுங்க..! ரியலைZ பண்ணுங்க..!
top brain training apps-மூளை பயிற்சிக்கு உதவும் ஆப்.(மாதிரி படம்)
Brain Training Apps- மூளைதான் இந்த முழு பிரபஞ்சத்தின் மிகப்பெரிய சக்தி என்று சவால் விட முடியும். இது மிகவும் விந்தையான, ஆச்சர்யமான மற்றும் சிக்கலான உறுப்பு என்றும் கூறலாம். இது அத்தனை உடல் உறுப்புகளின் இயக்கங்களைக் கட்டுப்படுத்துகிறது. நீங்கள் எப்படி நடந்துகொள்கிறீர்கள், ஒவ்வொன்றையும் எப்படி உணர்கிறீர்கள் என்பதை தீர்மானிக்கும் விசைப்பலகை அதுவே. மூளைதான் உடற் புலன்களின் மொழிபெயர்ப்பாளர்.
ஆனால் இங்கே உங்கள் மூளைக்குப் பின்னால் உள்ளவைகள் பற்றி நாம் பேசப்போவதில்லை.வாழ்க்கையின் நீண்டநெடிய பயணத்தில் உங்களுக்கு உதவும் ஒன்றைப் பற்றி இங்கே பேசப் போகிறோம்.
நிச்சயமாக நீங்கள் அனைவரும் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துகிறீர்கள். அதில் ஏற்கனவே பல பயன்பாட்டு ஆப்களை நிறுவியுள்ளீர்கள். மூளைக்கு உதவாத அல்லது வாழ்க்கைக்குப் பயன்பாடாத ஆப்களை நிறுவி என்ன பயன்? சில ஆப்களை பயன்படுத்தி நம் மூளையை வலுப்படுத்த ஏன் சிறிது நேரம் ஒதுக்கக்கூடாது? அதற்கு உங்களுக்கு வழிகாட்டுகிறோம். மூளையை கூர்மையாக்கும் ஆப்கள் இங்கு சில தரப்பட்டுள்ளன.
1. Brain Game App
பிரைன் கேம் ஆப் என்பது உங்கள் மூளையைப் பயிற்றுவிப்பதற்கும் அதைக் கூர்மையாக்குவதற்கும் ஒரு வேடிக்கையான வழியாகும். பல்வேறு பணிகள் மூலம், உங்கள் மூளைக்கு உடற்பயிற்சி தேவைப்படலாம். இந்த ஆப்-ல் உங்கள் சுயவிவரத்தை உள்ளிட்டு கணக்கைத் தொடங்கலாம்.பின்னர் பல்வேறு வேடிக்கையான செயல்பாடுகளில் இறங்கலாம், மகிழ்ச்சியாக மூளையை வைத்திருக்கலாம்.
இதை ஏன் பயன்படுத்த வேண்டும்?
- பயன்பாட்டாளருக்கு இது பயன்படுத்த எளிதானது.
- இது உங்களைப் பணிச் சுமைகளில் இருந்து விடுவித்து சரியான திசைக்கு இட்டுச் செல்கிறது.
- உங்கள் சிந்தனை, நினைவுத்திறன்,கவனம்,வாசிப்பு போன்ற பல அம்சங்களை மேம்படுத்த உதவும்.
2. Lumosity
top brain training apps-ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்களுக்குக் கிடைக்கும், இந்த ஆப் நிபுணர்களால் வடிவமைக்கப்பட்ட ஆப் வகையாகும். இதில் பயிற்சி பெறுவதன் மூலம் மூளைக்கு சவால் விடும் அளவுக்கு சிந்திக்கவைக்கும் திறன் இந்த ஆப்ஸ்-க்கு உள்ளது. சில நேரங்களில் உங்கள் அறிவாற்றல் திறன்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காணும் வகையில் இந்த ஆப் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதை ஏன் பயன்படுத்த வேண்டும்?
- ஒவ்வொரு நாளும் நீங்கள் ஒரு புதிய செயல்பாடுகளுடன் உங்களை பயிற்றுவித்துக்கொள்வீர்கள்.
- உங்கள் மன நிலைக்கு ஏற்ப கட்டமைக்கப்பட்ட பயிற்சிகள்
- உங்கள் விருப்பப்படி வேகத்தையும் சிரமத்தையும் அளவீடு செய்யுங்கள்
- உங்கள் முன்னேற்றம் பற்றிய விரிவான நுண்ணறிவு
3. Elevate
இந்த ஆண்டின் புதிய பயன்பாடாக Apple நிறுவனத்தால் Elevate உருவாக்கப்பட்டு பல பாராட்டுகளைப் பெற்றுள்ளது என்று சொல்வதன் மூலம், செயலியின் சிறப்பு என்ன என்பதை அறிய விரும்புவீர்கள். மேலும், மிக முக்கியமாக, மூளைப் பயிற்சியை தொடங்குவதற்கு, பயனர்கள் வாரத்திற்கு மூன்று முறை இந்த ஆப்-ஐ பயன்படுத்துவதன் மூலம் வியத்தகு முன்னேற்றங்களை காண முடியம்.
இந்த பயன்பாட்டை ஏன் பயன்படுத்த வேண்டும்?
- கவனித்தல், செயலாக்க வேகம், பேசும் திறன், நினைவுத்திறன், கணிதம் போன்றவற்றை மேம்படுத்த உதவுகிறது.இந்த ஆப் உங்களுக்கு மிகவும் தேவைப்படும் திறன்கள் மற்றும் அதற்கேற்ப திட்டங்களை வடிவமைக்கிறது.
- 40க்கும் அதிகமான மூளை விளையாட்டுகள்
- விரிவான அறிக்கைகளின் உதவியுடன் உங்கள் முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும்
- நேர்த்தியான இடைமுகம்
4. Peak – Brain Training
Android மற்றும் iOS இரண்டிலும் நீங்கள் காணக்கூடிய சிறந்த மூளை விளையாட்டு பயன்பாடுகளில் Peak-ம் ஒன்றாகும். ஒவ்வொரு நாளும் உங்களுக்கு தோராயமாக கேம்கள் ஒதுக்கப்படுகின்றன, மேலும் பல்வேறு புள்ளிவிவரங்கள் பற்றிய அடிப்படை நுண்ணறிவுகளும் வழங்கப்படுகின்றன. இதில் உள்ள கேம்கள் உங்கள் அறிவுத்திறனை பல வழிகளில் சோதனை செய்யும் திறன்களை பெற்றுள்ளது.
இதை ஏன் பயன்படுத்த வேண்டும்?
- top brain training apps-சிக்கலைத் தீர்ப்பது, கவனம் செலுத்துதல், மன சுறுசுறுப்பு, நினைவாற்றல் மற்றும் பல போன்ற திறன்களில் நீங்கள் சோதிக்கப்படுகிறீர்கள்
- தனிப்பட்ட பயிற்சியாளர் உங்கள் முன்னேற்றத்தை மேம்படுத்தவும் கண்காணிக்கவும் உதவுகிறார்.
- கேம்கள் NYU மற்றும் கேம்பிரிட்ஜ் போன்ற உலகின் சில முன்னணி பல்கலைக்கழகங்களுடன் இணைந்து உருவாக்கப்படுகின்றன.
- மேம்பட்ட பயிற்சி தொகுதிகள் மூலம், நீங்கள் ஒரு குறிப்பிட்ட திறனில் கவனம் செலுத்தலாம்.
- இந்த ஆப் ஆஃப்லைனில் கூட வேலை செய்கிறது.
5. NeuroNation
உங்களை ஆயத்தப்படுத்துவது தொடங்கி, மூளையைத் தூண்டிவிடுவது வரையிலான சிறந்த மூளைப் பயிற்சியை வழங்குவதில் நியூரோநேஷன் ஆப் ஒன்றாகும். நான்கு வெவ்வேறு பகுதிகளில் பலம் மற்றும் பலவீனம் என்ற சோதனை அடிப்படையில் உங்களுக்கு வழிகாட்டுவதன் மூலம் உங்களுக்கான இலவச மூளை பயிற்சியைத் தொடங்குகிறது. அங்கிருந்து உங்கள் முன்னேற்றம் தொடங்குகிறது.
இதை ஏன் பயன்படுத்த வேண்டும்?
- தனிப்பயனாக்கப்பட்ட பயிற்சித் திட்டம்
- 20 க்கும் மேற்பட்ட பயிற்சிகள் மற்றும் 250 நிலைகள்
- சிந்தனை வேகத்தை அதிகரிக்கவும் மற்றும் மனச்சோர்வுக்கான வாய்ப்புகளை குறைக்கவும்
- நண்பர்களுடன் பயிற்சி செய்து ஒருவருக்கொருவர் முன்னேற்றத்தைப் பகிர்ந்து கொள்ளலாம்.
- பொது உளவியல் துறை (Freie Universität -Berlin) மூலம் உறுதிசெய்யப்பட்ட ஆப் செயல்திறன்
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu