சூரியன் உதிக்கும் மாநிலம் எது தெரியுமா..?
சபுதாரா பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ தொலைவில், குஜராத்தின் சபுதாராவில் அமைந்துள்ள சூரியன் மறையும்இடம்.
சூரியன் உதிப்பதும், அஸ்தமனம் ஆவதும் இயற்கையானது தான். ஆனால் இந்தியாவின் எந்த மாநிலத்தில் கடைசியாக சூரியன் அஸ்தமனம் ஆகிறது என்பது பலருக்கும் தெரியாது.
புவியியல் பார்வையில், இந்தியாவின் வரைபடத்தில் பல்வேறு வகைகளுக்கு முடிவே இல்லை. எங்கோ சூரியன் முதலில் உதிக்கும், எங்கோ சூரியன் கடைசியாக மறைகிறது.
அதே நேரத்தில் எங்கோ மிகவும் குளிராகவும், எங்கோ வெப்பமாகவும் இருக்கும். நாட்டின் ஒரு பகுதியில் மழை பெய்யும் போது, மற்றொரு பகுதியில் வெயிலாக இருக்கலாம். இத்தகைய பன்முகத்தன்மை கொண்ட நாட்டின் பல உண்மைகள் இன்னும் நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன. இந்தியாவின் முதல் சூரிய உதயம் அருணாச்சலப் பிரதேசத்தில் நிகழ்கிறது என்பது பலருக்குத் தெரியும். அதனால்தான் அருணாச்சலப் பிரதேசம் சூரியன் உதிக்கும் நாடு என்றும் அழைக்கப்படுகிறது. அருணன் என்றால் சூரியன், சால என்றால் உதயம். இதனால் அருணாச்சலம் என்று பெயர் சூட்டப்பட்டது. எவ்வளவு பொருத்தமான பெயர் பார்த்தீர்களா?
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு இடம் தான் குஹர்மோதி, இது இந்தியாவின் மேற்கு பகுதியாகும். இங்கு தான் சூரியன் இறுதியாக மறைகிறது. அதிலும் குறிப்பாக கோடை காலத்தில் இரவு 7.30 மணிக்கு பிறகு தான் சூரியன் மறைகிறது. அதே போல் குஜராத்தில் தான் இறுதியாகவும் சூரியன் அஸ்தமானகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu