success quotes in tamil-வெற்றி என்பது தானே முளைக்காது..! முயற்சிகளில் விளைந்த கனியே வெற்றி..!

success quotes in tamil-தோல்விகளை நினைத்து துன்பப்படுபவன் எத்தனை வேள்விகள் செய்தாலும் வெற்றி வாராது.

HIGHLIGHTS

success quotes in tamil-வெற்றி என்பது தானே முளைக்காது..! முயற்சிகளில் விளைந்த கனியே வெற்றி..!
X

success quotes in tamil-வெற்றிக்கான மேற்கோள்கள்.(கோப்பு படம்)

success quotes in tamil-முயற்சி என்பது ஒரு முத்துக்குளியல். கரையில் நின்றுகொண்டே கனவு காண்பது, வெற்று ஊருக்கு வழிகேட்பது போலாகும். முயற்சி எனும் உழைப்பு இருந்தால்தான் வெற்றி எனும் முத்து கைக்கு வரும். கனவு காண்பது தூங்கிக்கொண்டு அல்ல. விழித்துக்கொண்டு காண வேண்டும். லட்சியங்களை குறிக்கோள் ஆக்கவேண்டும். வெற்றி..வெற்றி என்கிற ஒரே மூச்சுடன் பயணிக்கவேண்டும். சறுக்கினாலும், வழுக்கினாலும்..முயற்சியைமட்டும் கைவிடக்கூடாது. வெற்றி கிட்டும் ஒருநாள்..! நமது வாசகர்களுக்காக வெற்றியின் ரகசியம் சுமந்த வாசகங்கள்.இதோ..!

 • தோழா! தூக்கி எறிந்தால், விழுந்த இடத்தில் மரம் ஆகு..! எறிந்தவன் அண்ணாந்து பார்க்கட்டும் உன்னை..!
 • தளர்ந்து நிற்காதே, சோர்ந்து இருக்காதே, வளர்ச்சியில் வீழ்ச்சி என்பது ஒரு நிகழ்ச்சி மட்டும் தான்.
 • முயன்றால் எட்டும் உயரம் தான் உன் வெற்றி..!
 • நண்பா எந்த அளவுக்கு உயரம் செல்ல வேண்டும் என்று நினைக்கிறாயோ..அந்த அளவுக்கு கடுமையான சோதனைகளை கடந்து செல்ல உன்னை தயார் படுத்திக்கொள்.உன் வெற்றியை தடுக்க யாரும் இல்லை இங்கு..!
 • சோதனைகள் இல்லாமல் சாதனைகள் இல்லை தோழா..தோழா! சாதித்தவன் எல்லாம் சோதனைகளை கடந்தவன் தான்..!

success quotes in tamil

 • தடைகளையும், எதிர்ப்புகளையும் துணிவுடன் எதிர்கொண்டு முன்னேறும் போது, வெற்றிகள் மலராவும், மாலையாகவும், மகுடமாகவும் வந்து சேரும்..!
 • சாதிக்கும் எண்ணம் ஆழ்மனதில் தோன்றி விட்டால்,எது இருந்தாலும் இல்லை என்றாலும் சாதிக்க முடியும்.
 • உன் விடா முயற்சியால்..!
 • உனக்கான அடையாளத்தை உலகம் உணரும் வரை,உன்னை சுற்றி வரும் விமர்சனம் ஒவ்வொன்றும் உனக்கு எதிராகத்தான் இருக்கும். எண்ணி வருந்தினால், வருந்திக்கொண்டே தான் இருக்க வேண்டும். ஏறி மிதித்து விமர்சனங்கள் மீது நிமிர்ந்து நில். காலம் மாறும் முயற்சி கைகொடுக்கும். கனவு நனவாகும். உலகம் உன்னை உணரும்..!
 • ஒவ்வொரு தோல்வியும் உன்னை புது வெற்றிக்கு தயார் செய்யும். கனவுகள் கலைந்து போகலாம். நம்பிக்கையை தகர்ந்து போகவிடாதே. நண்பா.. வெற்றி உனதே.. வெற்றி உனதே..!
 • தயக்கம் தடைகளை உருவாக்கும். இயக்கம் தடைகளை உடைக்கும்..!
 • முயற்சி செய்து கொண்டே இரு. ஒரு நாள் தோல்வி தோற்றுப்போகும்,உன் முயற்சியிடம்..!

success quotes in tamil


 • இலைகள் உதிர்வதால் மரங்கள் வாடுவது இல்லை. மீண்டும் புதிய இலைகளை தோற்றுவிக்கும். தோல்வி வந்தால் வாடாதே. புதிய இலக்கை நோக்கி பயணம் செய்..1
 • ஒரு வருடம் என்பது, 365 நாட்களை கொண்டதல்ல. 365 வாய்ப்புகளை கொண்டது. வாய்ப்புகளை பயன்படுத்தி வெற்றியை நமதாக்குவோம்..!
 • வெற்றி பெற விரும்பினால், தடைகளை உடைத்து செல். நம்பிக்கையை விதைத்து செல்..!
 • பார்த்திருந்தால், எதிர்பார்த்திருந்தால், காத்திருந்தால், எதுவும் நடக்காது, கிடைக்காது, இறங்கி போராடு.
 • சோதனைகள் சாதனைகள் ஆகும். வெற்றி உன் மகுடம் ஆகும்..!
 • முதலில், உங்களால் முடியும் என்று நம்புங்கள். பின் முயற்சி செய்யுங்கள். பிறகு எல்லாம் வெற்றி தான் உங்களுக்கு. முடியாதது ஏதும் இல்லை இங்கு. முயன்றால் எல்லாம் சாத்தியமே..!

success quotes in tamil

 • நண்பா! நீ அடைய நினைத்த இலக்கை அடையும் வரை. கல் வந்தாலும் சொல் வந்தாலும் கலங்காமல் நீ முன்னேறு,நண்பா..அனைத்துக்கும் பதில் சொல்லும் உன் வெற்றி..!
 • துன்பங்கள் துரத்தினாலும், சோர்ந்து போகாமல், எதிர்த்து நின்று வெற்றி பெறுவதே மனிதனுக்கு அழகு.
 • சந்தோஷமாக வாழ்வதை விட சவால்கள் மேல் சவாரி செய்து வாழ்வதே கெத்து..!
 • அவமானப் படும்போது அவதாரம் எடு. வீழ்கின்ற போது விஸ்வரூபம் எடு. புண்படுகிற போது புன்னகை செய்.
 • வாதாடுவதை விட்டு விட்டு வாழ்ந்துகாட்டு..!
 • ஊனம் ஒரு தடையல்ல. ஊன்றுகோலாய் உன் தன்னம்பிக்கை இருக்கும்போது..!
 • மரியாதை கிடைத்தால் மதித்து நில். அவமானம் கிடைத்தால் மிதித்து செல். இலக்கை நோக்கிய பயணத்தில்
 • வீழ்ந்து விடுவேன் எனும் பயம் வேண்டாம். தாங்கி தூக்கி விட ஒரு கரமாவது இருக்கும்..!

Updated On: 11 Sep 2022 10:21 AM GMT

Related News

Latest News

 1. Trending Today News
  Leap Year- லீப் வருடம் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவது ஏன் தெரியுமா?
 2. டாக்டர் சார்
  Symptoms Of Heart Attack மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகள்...
 3. வீடியோ
  தொண்டர்கள் கரகோஷத்தில் ஆரவாரம் | | தட்டிகொடுத்து பாராட்டிய Modi |...
 4. குமாரபாளையம்
  குமாரபாளையம் பாலிடெக்னிக் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு...
 5. நாமக்கல்
  கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்து கட்டுனர் சங்கம்...
 6. ஈரோடு
  ஈரோட்டில் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்த ஆட்சியர்
 7. ஈரோடு
  கூட்டுறவு நிறுவனங்களில் தானிய ஈட்டுக்கடன் உச்சவரம்பு ரூ.25 லட்சமாக...
 8. டாக்டர் சார்
  Stomach Cancer Symptoms In Tamil இரைப்பை புற்றுநோய் ஏற்பட காரணங்கள்...
 9. நாமக்கல்
  தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் ஸ்டிரைக்: பொதுமக்கள்
 10. ஈரோடு
  மொடக்குறிச்சி தொகுதியில் ரயில்வே பாலங்கள் திறப்பு: பிரதமருக்கு எம்எல்ஏ...