காத்திருங்கள் காற்று எத்திசையிலும் வீசும்..! புதைக்கப்படுவதால் விதை முளைத்து எழுகிறது..!
அடையவேண்டிய இலக்கு தூரமாக இருக்கலாம்.ஆனால் முயற்சி தொலைவை அருகாமையாக்கும்.
புதைக்கப்படவில்லை என்று உணர்ந்த விதை இருளுக்கு அஞ்சாது. ஒதுக்கப்படவில்லை செதுக்கப்படுகிறோம் என்று உணர்ந்த மனம் தோல்விக்கு அஞ்சாது. பொய் பக்கம் பக்கமாகவும் உண்மை ஒரு வரியுலுமே சொல்லப்படுகிறது.
பொய் தன்னை தக்க வைத்துக்கொள்ள போராடும். உண்மை என்றாவது புரியும் என ஓரமாய் இருந்து கொள்ளும். உண்மையாக இருப்பது போல் நடிக்கிறார்கள் என்றால் அதை நமது நம்புவது போல் நடிப்பதில் தவறில்லை.
நடந்த காரணத்தை மீண்டும் மீண்டும் கேட்காதீர்கள். மரியாதை நிமித்தமாக அதற்கும் பொய் சொல்லப்படலாம். காத்திருங்கள் எல்லாருடைய வேஷமும் ஒரு நாள் கண்டிப்பாக கலையும்.
வாழ்க்கையில் திருப்தியாய் இருக்கிற வரை வாழ்க்கையைப் பற்றி ஒன்னும் தெரிந்து கொள்ள முடியாது. அதற்கு சோதனை ஏற்படும் போது தான் மனசு யோசிக்கத் தொடங்குகிறது. ஒரு விஷயத்தில் திருப்தி ஏற்பட்டா... இன்னொரு திருப்திக்கு மனசு ஏங்குது. வாழ்க்கையில் அதிருப்தி ஏற்பட ஏற்படத்தான் வாழ்க்கையைப் பற்றிய ஞானமே புரியும்.
பாலினை எவ்வளவு காய்ச்சினாலும், அது தனது இனிய சுவையில் குறைவதில்லை. சங்கினை எவ்வளவு சுட்டாலும், நீராக்கினாலும் அது வெண்ணிறத்தையே கொடுக்கும். அதைப் போலவே, மேலோர் வறுமையுற்றாலும் மேலோராகவே விளங்குவர். நட்பின் குணம் இல்லாத கீழோர் இடத்தில் எவ்வளவு தான் கலந்து நட்புச் செய்தாலும் அவர் நண்பராகார்.
பால் சங்கு எனும் இரண்டுமே மேன் மக்களுக்கு உவமைகளாக வந்தன. மேலோர் வறுமையுற்ற பொழுது முன்னையிலும் சிறந்து விளங்குவர் என்பது இந்த உவமைகளால் பெறப்படுகிறது. அட்டாலும் பால்சுவையில் குன்றாது; அளவளாய் நட்டாலும் நண்பு அல்லர். கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே; சங்கு சுட்டாலும் வெண்மை தரும். அழகான நாட்கள் எப்போதும் அமைந்திடாது. அமையும் நாட்களை அழகாக வாழ்ந்திடல் நல்லது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu