ரூ.40 ஆயிரம் சம்பளத்தில் வேலை - நீங்களும் விண்ணப்பிக்கலாம்

ரூ.40 ஆயிரம் சம்பளத்தில் வேலை - நீங்களும் விண்ணப்பிக்கலாம்
X
புதுக்கோட்டை, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் ரூ.40 ஆயிரம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு காத்திருக்கிறது.

புதுக்கோட்டை, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக இருக்கும், சமூக பணியாளர் (Social Worker) பணிக்கு தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ரூ.40 ஆயிரம் சம்பளத்தில் தயாராக உள்ள வேலைக்கு எப்படி விண்ணப்பிக்கலாம். இதோ முழு விவரம்:

விண்ணப்ப அறிவிக்கை வெளியான இணையதளம்: https://pudukkottai.nic.in/

அறிவிப்பு வெளியான நாள்: 25 நவம்பர் 2021

விண்ணப்பிக்க கடைசி நாள்: 10 டிசம்பர் 2021.

நிறுவனத்தின் பெயர்: புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் (Pudukkottai District Child Protection Unit)

பதவி : சமூகப் பணியாளர் (Social Worker)

காலியிடங்கள்: 02

கல்வித்தகுதி: B.Sc, BL

சம்பளம்: மாதம் ரூ.40,000/-

வயது வரம்பு: 35-65 years

பணியிடம்: புதுக்கோட்டை

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் முறை

விண்ணப்ப கட்டணம்: கிடையாது

முகவரி

The District Child Protection Officer,

District Child Protection Unit,

Ex-Serviceman Welfare Office Campus,

Kalyanaramapuram 1st Street,

Thirugokarnam Post,

Pudukkottai-622002.


விண்ணப்பிக்கும் முறை (ஆப்லைன்) :

அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://pudukkottai.nic.in/ இல் இருந்து, விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, படிவத்தை நிரப்ப வேண்டும். அனைத்து விவரங்களையும் எந்த தவறும் இல்லாமல் நிரப்பி, தேவையான அனைத்து ஆவணங்களையும் (ID proof, Educational Qualification, Recent Photograph, Resume, if any Experience etc,.) பதிவேற்றம் செய்யலாம்.

புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் அதிகாரிகள், உங்களை தொடர்புகொள்ள ஏதுவாக, சரியான மின்னஞ்சல் மற்றும் மொபைல் எண்ணை (Email ID and Mobile Number) விண்ணப்பத்தில் குறிப்பிடவும். பின்னர், விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, மேலே உள்ள முகவரிக்கு ஆஃப்லைன் / ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!