Self Motivation Quotes in Tamil-நம்பிக்கை மட்டுமே வெற்றிக்கான விளக்கு..!

Self Motivation Quotes in Tamil-நம்பிக்கை மட்டுமே வெற்றிக்கான விளக்கு..!
X

self motivation quotes in tamil-நம்பிக்கை வளர்க்கும் ஊக்கமளிக்கும் மேற்கோள்கள் (கோப்பு படம்)

எதை இழந்தாலும் வாழ்ககையில் துன்பமுற்று இருப்பவர்கள் தன்னம்பிக்கையை மட்டும் இழந்துவிடக்கூடாது. அது வீழ்ச்சியில் கட்டி எழுப்பும் ஊன்றுகோல்.

Self Motivation Quotes in Tamil

ஒருவர் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு பல காரணங்கள் தடையாக இருக்கலாம்.ஆனால் எத்தனை தோல்விகள் வந்தாலும் முயற்சியை கைவிடாமல் இருந்தால் வெற்றி நிச்சயம். வெற்றி பெற்றவர்களிடம் நாம் கேட்டால் இதுதான் பதிலாக வரும். கடினமாக உழைக்கவேண்டும்,அதேவேளையில் புத்திசாலித்தனமாகவும் உழைக்கவேண்டும்.

இதோ உங்களை மெருகேற்றிக்கொள்ள சில நம்பிக்கை வரிகள்

Self Motivation Quotes in Tamil

எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று

நீயும் பின்தொடராதே

உனக்கான பாதையை

நீயே தேர்ந்தெடு...

எத்தனை கைகள்

என்னை தள்ளிவிட்டாலும்

என் நம்பிக்கை

என்னை கை விடாது


இருளான வாழ்க்கை என்று

கவலை கொள்ளாதே

கனவுகள் முளைப்பது இருளில் தான்

சந்தேகத்தை எரித்துவிடு நம்பிக்கையை

விதைத்துவிடு

மகிழ்ச்சி தானாகவே

மலரும்...

Self Motivation Quotes in Tamil

ஒளியாக நீயிருப்பதால்

இருளைபற்றிய கவலை எனக்கில்லை...

பறப்பதற்கு வசதிகள் இருந்தாலும்

தரையில் இருக்கவும் கற்றுக்கொள்...

சிறகுகளை இழந்தாலும் வருந்தமாட்டாய்...

நம்மை அவமானப்படுத்தும் போது

அந்த நொடியில் வாழ்க்கை வெறுத்தாலும்

அடுத்த நொடியில் இருந்துதான்

நம் வாழ்க்கையே ஆரம்பமாகுது...

துன்பம் நம்மை சூழ்ந்த போதும்

மேகம் கலைந்த வானமாய் தெளிவாகவே இருப்போம்...

தனித்து போராடி கரைசேர்ந்த பின்

திமிராய் இருப்பதில் தப்பில்லையே

எப்போதும் என்

அடையாளத்தை

யாருக்காகவும் விட்டு

கொடுக்க மாட்டேன்

முட்களையும் ரசிக்க கற்றுக்கொள்

வலிகளும் பழகிப்போகும்...

அடுத்தவரோடு ஒப்பிட்டு

உன்னை நீயே தாழ்த்திக்கொள்ளாதே

உலகத்தில் பெஸ்ட் உனக்கு நீயே...

Self Motivation Quotes in Tamil

பல முறை முயற்சித்தும்

உனக்கு தோல்வி என்றால்

உன் இலக்கு தவறு

சரியான இலக்கை தேர்ந்தெடு.


தோழா! தூக்கி எறிந்தால்!

விழுந்த இடத்தில் மரம் ஆகு!

எறிந்தவன் அண்ணாந்து

பார்க்கட்டும் உன்னை!

தளர்ந்து நிற்காதே!

சோர்ந்து இருக்காதே!

வளர்ச்சியில் வீழ்ச்சி

என்பது ஒரு நிகழ்ச்சி

மட்டும் தான்.

முயன்றால் எட்டும்

உயரம் தான்

உன் வெற்றி.

நண்பா எந்த அளவுக்கு உயரம் செல்ல

வேண்டும் என்று நினைக்கிறாயோ!

அந்த அளவுக்கு கடுமையான சோதனைகளை

கடந்து செல்ல உன்னை தயார் படுத்திக்கொள்.

உன் வெற்றியை தடுக்க யாரும் இல்லை இங்கு.

சோதனைகள் இல்லாமல்

சாதனைகள் இல்லை தோழா!

தோழா! சாதித்தவன் எல்லாம்

சோதனைகளை கடந்தவன் தான்.

தடைகளையும், எதிர்ப்புகளையும்

துணிவுடன் எதிர்கொண்டு

முன்னேறும் போது, வெற்றிகள்

மலராவும், மாலையாகவும்,

மகுடமாகவும் வந்து சேரும்.

Self Motivation Quotes in Tamil

சாதிக்கும் எண்ணம் ஆழ்மனதில்

தோன்றி விட்டால்.

எது இருந்தாலும் இல்லை என்றாலும்

சாதிக்க முடியும்.

உன் விடா முயற்சியால்.

உனக்கான அடையாளத்தை

உலகம் உணரும் வரை,

உன்னை சுற்றி வரும் விமர்சனம்

ஒவ்வொன்றும் உனக்கு எதிராகத்தான் இருக்கும்.

எண்ணி வருந்தினால், வருந்திக்

கொண்டே தான் இருக்க வேண்டும்

ஏறி மிதித்து விமர்சனங்கள் மீது நிமிர்ந்து நில்.

காலம் மாறும் முயற்சி கைகொடுக்கும்.

கனவு நனவாகும் உலகம் உன்னை உணரும்.


ஒவ்வொரு தோல்வியும் உன்னை

புது வெற்றிக்கு தயார் செய்யும்.

கனவுகள் கலைந்து போகலாம்.

நம்பிக்கையை தகர்ந்து போகவிடாதே.

நண்பா! வெற்றி உனதே! வெற்றி உனதே!

தயக்கம் தடைகளை உருவாக்கும்.

இயக்கம் தடைகளை உடைக்கும்.

முயற்சி செய்து

கொண்டே இரு.

ஒரு நாள் தோல்வி

தோற்றுப்போகும்

உன் முயற்சியிடம்.

இலைகள் உதிர்வதால் மரங்கள் வாடுவது இல்லை.

மீண்டும் புதிய இலைகளை தோற்றுவிக்கும்.

தோல்வி வந்தால் வாடாதே.

புதிய இலக்கை நோக்கி பயணம் செய்.

ஒரு வருடம் என்பது,

365 நாட்களை கொண்டதல்ல.

365 வாய்ப்புகளை கொண்டது.

வாய்ப்புகளை பயன்படுத்தி

வெற்றியை நமதாக்குவோம்.

வெற்றி பெற விரும்பினால்,

தடைகளை உடைத்து செல்.

நம்பிக்கையை விதைத்து செல்.

பார்த்திருந்தால், எதிர்பார்த்திருந்தால்,

காத்திருந்தால், எதுவும் நடக்காது,

கிடைக்காது, இறங்கி போராடு.

சோதனைகள் சாதனைகள் ஆகும்.

வெற்றி உன் மகுடம் ஆகும்.

முதலில், உங்களால் முடியும் என்று நம்புங்கள்.

பின் முயற்சி செய்யுங்கள்.

பிறகு எல்லாம் வெற்றி தான் உங்களுக்கு.

முடியாதது ஏதும் இல்லை இங்கு.

முயன்றால் எல்லாம் சாத்தியமே.

Self Motivation Quotes in Tamil

நண்பா! நீ அடைய நினைத்த

இலக்கை அடையும் வரை.

கல் வந்தாலும் சொல் வந்தாலும்

கலக்காமல் நீ முன்னேறு.

நண்பா! அனைத்துக்கும் பதில்

சொல்லும் உன் வெற்றி.


துன்பங்கள் துரத்தினாலும்,

சோர்ந்து போகாமல், எதிர்த்து நின்று

வெற்றி பெறுவதே மனிதனுக்கு அழகு.

சந்தோஷமாக வாழ்வதை விட

சவால்கள் மேல் சவாரி செய்து வாழ்வதே கெத்து.

அவமானப் படும்போது அவதாரம் எடு.

வீழ்கின்ற போது விஸ்வரூபம் எடு.

புண்படுகிற போது புன்னகை செய்.

வாதாடுவதை விட்டு விட்டு வாழ்ந்துகாட்டு.

ஊனம் ஒரு தடையல்ல.

ஊன்றுகோலாய்

உன் தன்னம்பிக்கை

இருக்கும்போது.

மரியாதை கிடைத்தால் மதித்து நில்.

அவமானம் கிடைத்தால் மிதித்து செல்.

இலக்கை நோக்கிய பயணத்தில்

வீழ்ந்து விடுவேன் எனும் பயம் வேண்டாம்.

தாங்கி தூக்கி விட ஒரு கரமாவது இருக்கும்.

Tags

Next Story