பொறியியல், தொழில்நுட்ப பட்டதாரியா? ரூ.2 லட்சம் சம்பளத்துடன் அரசு வேலை!

பொறியியல், தொழில்நுட்ப பட்டதாரியா?  ரூ.2 லட்சம் சம்பளத்துடன் அரசு வேலை!
X

சித்தரிப்பு காட்சி

மத்திய அரசின் தேசிய மின்னணு மற்றும் தகவல் தொடர்பு மையத்தில் காலியாக உள்ள, விஞ்ஞானி (Scientist) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

நீங்கள் பொறியியல், தொழில்நுட்ப பட்டதாரி? அப்படியென்றால், நீங்களும் இந்த வேலைக்கு முயற்சி செய்யலாம். இப்பணிக்கான தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் என்றால், கீழ்காணும் முறையில் நீங்கள் விண்ணப்பித்து பயனடையலாம். அது குறித்த விவரம் வருமாறு:

நிர்வாகம் : தேசிய மின்னணு மற்றும் தகவல் தொடர்பு மையம் மேலாண்மை / மத்திய அரசு

பணி : Scientist 'C' and Scientist 'D'

மொத்த காலிப் பணியிடங்கள் : 33

கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற நிறுவனங்களில் பொறியியல் அல்லது தொழில்நுட்ப துறையில், இளநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அவற்றுடன் Research மற்றும் Development பணிகளில், 4 ஆண்டுகள் வரை, முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 35 முதல் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.67,700 முதல் ரூ.2,09,200 வரை

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு, https://recruitment-delhi.nielit.gov.in/ எனும் இணையதளத்தின் மூலம், வரும் 07.12.2021 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் : பொது விண்ணப்பதாரர்களுக்கு ரூ.800; எஸ்சி / எஸ்டி, பெண் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.400 கட்டணம்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் Screening Test, Person al Interaction, Interview மூலம் தேர்வு செய்து பணி அமர்த்தப்படுவார்கள்.

Tags

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings