'நம்பிக்கை' என்றால் அது 'கலாம்' ஐயா தான் ..! நம்பிக்கை நட்சத்திரம்..!
Positive Abdul Kalam Quotes in Tamil-ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் என்பதே ஏ.பி .ஜெ. அப்துல் கலாம் என்று அவரது பெயரானது. கலாம் 1931ம் வருடம் அக்டோபர் மாதம்15ம் தேதி பிறந்தார். அவர் பொதுவாக டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் என்று குறிப்பிடப்படுகிறார். இவர் இந்தியாவின், 11வது குடியரசு தலைவராக இருந்தார். இந்திய அறிவியலாளரும், நிர்வாகியும் ஆவார். இவர் ததமிழகத்தில் உள்ள இராமேஸ்வரத்தில் பிறந்து வளர்ந்தார். திருச்சிராப்பள்ளியில் உள்ள தூய வளனார் கல்லூரியில் இயற்பியலும், மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் விண்வெளி பொறியியலும் படித்தார்.
கலாம், குடியரசுத் தலைவராக பதவி ஏற்பதற்குமுன், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும் (DRDO) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும், (ISRO) விண்வெளி பொறியாளராக பணியாற்றினார். ஏவுகணை மற்றும் ஏவுகணை ஏவுதல் வாகன தொழில்நுட்ப வளர்ச்சியில் கலாமின் ஈடுபாட்டினால் அவர் இந்திய ஏவுகணை நாயகன் என்று எல்லோராலும் பிரபலமாக அறியப்பட்டவர். 1974 ம் ஆண்டில் நடந்த முதல் அணு ஆயுத சோதனைக்கு பிறகு 1998 ம் ஆண்டில் நடந்த போக்ரான் - II அணு ஆயுத பரிசோதனையில் நிறுவன, தொழில்நுட்ப ரீதியாக அவர் முக்கிய பங்காற்றினார்.
கலாம், இந்தியாவின் முக்கியக் கட்சிகளான இந்திய தேசிய காங்கிரசு மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவுடன், 2002ம் ஆண்டில் லட்சுமி சாகலை தோற்கடித்து, இந்தியக் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பாட்னா, அஸ்தினாபூரில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனங்களில் ஒரு வருகைப் பேராசிரியர் ஆகவும், திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் வேந்தர் ஆகவும், சென்னை அண்ணா மற்றும் ஜே எஸ் எஸ் மைசூர் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் ஆகவும் பணியாற்றியதோடு, சோமாலியாவில் உள்ள பல கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் துணை மற்றும் வருகைப் பேராசிரியர் ஆகவும் பணியாற்றினார்.
அவர் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா உட்பட, பல மதிப்புமிக்க விருதுகளை பெற்றுள்ளார். கலாம் தனது ஊக்குவிக்கும் முறையிலான பேச்சுக்களாலும், இந்திய மாணவர் சமூகத்துடன் கலந்துரையாடல்களாலும் மாணவ சமூகத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர்.
அவரது நம்பிக்கைத்தரும் மேற்கோள்கள் இதோ உங்களுக்காக தரப்பட்டுள்ளன.
positive abdul kalam quotes in tamil
உனது கற்பனையை முதலீடாக நீ முன்வைத்தால் அது உனக்கு வாழ்க்கையில் பல வெற்றிகளைத் தேடித் தரும்..!
உன் கை ரேகையைப் பார்த்து எதிர்காலத்தை நிர்ணயித்து விடாதே. ஏனென்றால் கையே இல்லாதவனுக்குக் கூட எதிர்காலம் உண்டு..!
கனவு காணுங்கள், ஆனால் கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது இல்லை. உன்னை தூங்க விடாமல் பண்ணுவது எதுவோ அதுவே கனவு..!
நமது பிறப்பு சம்பவமாக இருக்கலாம். ஆனால், இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும்..!
வெற்றி பெறவேண்டும் என்ற பதற்றம் இல்லாமல் இருப்பதுதான். வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி..!
positive abdul kalam quotes in tamil
கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே..! அது உன்னை கொன்றுவிடும். கண்ணைத் திறந்துபார். நீ அதை வென்று விடலாம்..!
ஒரு நல்லப் புத்தகம் நூறு நல்ல நண்பர்களுக்கு சமம். ஆனால் ஒரு நல்ல நண்பன். ஒரு நூலகத்திற்கே சமம்..!
ஆண்டவன் சோதிப்பது எல்லோரையும் அல்ல. உன்னைப் போல சாதிக்கத் துடிக்கும், புத்திசாலிகளை மட்டுமே..!
துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்துவிடு. ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்துவிடாதே..!
உலகம் உன்னை அறிவதைவிட உன்னை உலகிற்கு அறிமுகம் செய்..!
positive abdul kalam quotes in tamil
ஒருமுறை வந்தால் கனவு. இருமுறை வந்தால் ஆசை. பலமுறை வந்தால் இலட்சியம்..!
நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை. நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும் உன் உழைப்பால் நீ எண்ணியது உன்னை வந்து சேரும்..!
வாய்ப்புக்காக காத்திருக்காதே, உனக்கான வாய்ப்பை நீயே ஏற்படுத்திக்கொள்..!
தோல்விகளை எதிர்கொள்ள கற்றுக் கொள்ளுங்கள். அதுதான் வெற்றிக்கான மிக முக்கியமான திறமை..!
உங்களுக்குள் இறக்கைகள் உள்ளன. தவழ முயற்சிக்காதீர்கள். பறக்க கற்றுக் கொள்ளுங்கள். உச்சத்திற்கு பறந்து செல்லுங்கள்..!
positive abdul kalam quotes in tamil
மரியாதை இல்லாத இடத்தில் சற்று ஒதுங்கியே இரு. நாளை உன் மதிப்பு தெரிந்த பின் அவர்களே உன்னை தேடி வருவார்கள், அதுவரை சற்று பொறுமையாய் இரு..!
அழகைப் பற்றி கனவு காணாதீர்கள். அது உங்கள் கடமையை பாழாக்கி விடும். கடமையை பற்றி கனவு காணுங்கள். அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கிவிடும்..!
நம் தவறுகளில் இருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடமே. உயர்வான வாழ்க்கைக்கு நம்மை இட்டுச் செல்லும்..!
கனவுகளை எண்ணங்களாக மாற்றுங்கள். எண்ணங்களைச் செயல்களாக மாற்றுங்கள்..!
முதல் வெற்றிக்குப் பிறகு ஓய்வெடுத்துவிடாதே. அடுத்தமுறை தோல்வியுற்றால் உன் முதல் வெற்றி அதிர்ஷ்டத்தால்தான் கிடைத்தது என்பர்..!
positive abdul kalam quotes in tamil
நாட்டின் மிக சிறந்த மற்றும் திறைமை மிக்க மூளைகள் பள்ளியறையின் கடைசி பெஞ்சில் இருக்கதான் வாய்ப்பு அதிகம்..!
நீங்கள் சூரியனைப் போல பிரகாசிக்க வேண்டுமானால் முதலில் சூரியனைப் போல எரிய வேண்டும்..!
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu