/* */

மதுரையில் புரோட்டா மாஸ்டர் பயிற்சி பள்ளி..! சர்வதேச உணவான புரோட்டா..!

வேலை கிடைக்கலையா..? அட மதுரைக்கு வாங்க. புரோட்டா மாஸ்டர் பயிற்சி பள்ளியில் சேருங்க. ஒரு நாளைக்கு ரூ.ஆயிரம் வரை சம்பாதீங்க.

HIGHLIGHTS

மதுரையில் புரோட்டா மாஸ்டர் பயிற்சி பள்ளி..! சர்வதேச உணவான புரோட்டா..!
X

மதுரை புரோட்டா பயிற்சி மையத்தில் பயிற்சியில் ஈடுபட்டுள்ள மாணவர்கள்.(கோப்பு படம்)

Parotta master Training in Tamil, Madurai Parotta Training School

வேலை தேடி வேலை தேடி ஒஞ்சுபோய்ட்டோம் என்று சொல்லும் இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் மதுரையில் ஒரு சம்பவம் நடந்துவருகிறது. மதுரையில் இட்லிக்கு அடுத்தபடியாக நம்ம மக்கள் குறிப்பாக இளைஞர்கள் விரும்பி சாப்பிடும் உணவு புரோட்டா.

அறிவிக்கப்படாத தேசிய உணவாகவே புரோட்டா மாறிவிட்டது. புரோட்டாவில் அத்தனை வெரைட்டி கண்டுபிடிக்கும் அளவுக்கு தமிழ்நாட்டில் புரோட்டா பிரியர்கள் உள்ளனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அதிலும் குறிப்பாக மதுரை புரோட்டான்னா ஒரு தனி சிறப்பிடம் உண்டு.


Parotta master Training in Tamil,

பன் புரோட்டா, நூல் புரோட்டா, வாழை இலை புரோட்டா, கொத்து புரோட்டா, பொரிச்ச புரோட்டா, வீச்சு புரோட்டா என வகை வகை புரோட்டாவுக்கு ரசிகர்கள் அடிமை சாசனம் எழுதி வைத்துள்ளனர். மாலை நேரங்களில் மதுரை டவுனுக்கு அருகே உள்ள கிராமத்து இளைஞர்கள் ஒன்று கூடி 'வாங்கடா புரோட்டா சாப்பிட்டுவிட்டு வரலாம்' என்று இரு சக்கர வாகனங்களில் ரெக்கை கட்டி பறந்து வந்து ஹாயாக.. சாப்பிட்டு ஏப்பம் விட்டுச் செல்வதையும் நாம் காணமுடியும்.

Parotta master Training in Tamil,

இப்படியான ரசிகர் கூட்டம் இருப்பதாலேயே மதுரையில் பரோட்டாக்கடைகள் ஏராளமாக உள்ளன. நம்ம புரோட்டா சூரி கூட மதுரையில் ஒரு புரோட்டா கடை வைத்துள்ளதாக நாம் கேள்விப்பட்டுள்ளோம். இப்படி நாம் புரோட்டா புராணம் பாடிக்கொண்டு இருக்கும் இந்த சின்னகேப்பில் மதுரையில் ' செல்ஃபி புரோட்டா ஸ்கூல்' என்ற பெயரில் புரோட்டா தயாரிப்பு பயிற்சிப்பள்ளி ஒன்று துவங்கப்பட்டு, இப்போதுவரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாஸ்டர்கள் உருவாக்கிவிட்டுள்ளார்களாம்.

இப்படி இந்த பள்ளிக்கூடத்தில் பயிற்சி பெட்ரா புரோட்டா மாஸ்டர்களில் சிலர் பல்வேறு நாடுகளில் புரோட்டா மாஸ்டர்களாக பணிக்குச் சேர்ந்து ரூ.1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை சம்பளம் வாங்குகிறார்களாம். கேக்கவே சந்தோசமா இருக்கில்ல..? இருக்கா..இல்லையா..? இருக்குய்யா மேல சொல்லு.


நம்ம மதுரையில தபால்தந்தி நகர் அருகே கலை நகர்னு ஒன்னு இருக்கு. ஆமா இருக்கு. அந்த கலை நகர் 2-வது தெருவில் இந்த புரோட்டா பள்ளிக்கூடம் நடந்து வருது. இப்ப நாம் அங்கதான் போறோம்.

Parotta master Training in Tamil,

பள்ளிக்கூடத்துக்குள்ளே எட்டிப்பார்த்தால் ஒரு பெரிய ஓட்டல் சமையற் கூடம்போல சுறுசுறுப்பாக வேலை நடக்கிறது. ஒருத்தர் மாவு பிசைகிறார். ஒருத்தர் புரோட்டாவை அடிக்கிறார். ஒருத்தர் அடுப்பில் வேகவைக்கிறார். இப்படி சுமார் இருபத்தைந்து பேர் பயிற்சியில் இருந்தனர்.

"செல்ஃபி புரோட்டா பயிற்சி மைய" நிறுவனராக இருப்பவர் கைதேர்ந்த புரோட்டா மாஸ்டர். அவர்தான் இந்த பயிற்சிப்பள்ளியை தொடங்கி நடத்தி வருகிறார். அவர் பெயர் முகமது காசிம். அவர் கூறும்போது , ”புரோட்டா மாஸ்டர்களுக்கான பிரத்தியேக பயிற்சி மையம் கடந்த ஆறு ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. சுமார் இதுவரை மூவாயிரம் பேருக்காவது பயிற்சி அளித்திருப்போம்.

சில ஓட்டல் நடத்தும் உரிமையாளர்கள் கூட வந்து பயிற்சி எடுத்துச் செல்கின்றனர். இப்போது இந்த தொழிலில் பெண்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அவர்களும் பயிற்சிக்கு வருகின்றனர். புரோட்டா மாஸ்டருக்கான தேவை அதிகம் உள்ளது. நிறைய பேர் வெளிநாடுகளிலும் நல்ல சம்பளத்தில் வேளையில் உள்ளனர்.


Parotta master Training in Tamil,

இங்கு அளிக்கப்படும் பத்து நாள் பயிற்சியில் புரோட்டாவில் உள்ள வெவ்வேறு வகை புரோட்டா, சால்னா, கிரேவி, சப்பாத்தி, தோசை என கல்லில் சுடும் உணவு வகைகள் எப்படி செய்வது என்று பயிற்சி அளிக்கப்படுகிறது. கூடவே சிக்கன் ரைஸ், நூடுல்ஸ், சில்லி புரோட்டா, சில்லி சிக்கன் என சைனீஸ் உணவு வகைகள் தயாரிப்பதற்கும் கூடுதல் பயிற்சிகள் வழங்குகிறோம்.

வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு இது சுய தொழில் செய்யவோ அல்லது வேலைக்குச் செல்லவோ முடியும். பயிற்சி முடித்தவுடன் சான்றிதழும் கொடுக்கிறோம் என்கிறார் மிகச் சாதாரணமாக.

Updated On: 26 May 2024 7:36 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலத்தின் மகத்துவம் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  2. லைஃப்ஸ்டைல்
    மருதாணி அரைச்சேனே... உனக்காக பதமா!
  3. Trending Today News
    ஐஏஎஸ் மகளுக்கு போலீஸ் அதிகாரி அப்பா சல்யூட்..! மகிழ்ந்த தருணம்..!
  4. அரசியல்
    50 வயதிற்கு மேற்பட்டோருக்கு ஓய்வூதியம்: இங்கல்ல எங்கு என தெரியுமா?
  5. இந்தியா
    தந்தை இறந்தது தெரியாமல் குரல் மெசேஜ் அனுப்பும் குட்டி மகன்..! தாயின்...
  6. கல்வி
    ஜெஇஇ மெயின் தேர்வு 2025: உங்கள் படிப்பு நேரத்தை மேம்படுத்துவதற்கான சில...
  7. இந்தியா
    கஞ்சன் ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் 8 பேர்...
  8. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே கோவில் உண்டியல் உடைத்து ரூ.1 லட்சம் திருட்டு
  9. கல்வி
    பாலைவனமாக்கல்,பாலைவனமாதல்- என்ன வேறுபாடு..?
  10. அரசியல்
    பீகாரிலும் வாரிசு அரசியல்: அரசியலில் குதிக்கிறார் நிதிஷ்குமாரின் மகன்...