மனவாசலை திறக்கும் 5 வழிகள்..!
தேவையற்றவற்றைத் தேடி ஓடிக்கொண்டிருக்கும் ஓட்டத்தில் மனநலனைப் பாதுகாக்க மறந்து விட்டோம். முடிவில், மனமகிழ்ச்சியின்றி இருக்கின்றோம். வாழ்வின் பொருள் மற்றும் இலக்கு என்பது மனமகிழ்ச்சி தான். மன மகிழ்ச்சியோடு இருப்பது தான் நல்ல மனநலனுக்கான அறிகுறி, நம்மைச் சுற்றிலும், நமக்குள்ளேயும் மனமகிழ்ச்சி மற்றும் மனநலனுக்கான வாசல்கள் திறந்தே இருக்க அந்த 5 வழிகள்.
1-இயற்கை
இயற்கையோடு இணையலாம் பூங்கா, காடு, வயல் போன்ற பச்சை நிறம் கொண்ட இடங்களில் மற்றும் ஏரி, கடல் போன்ற நீலநிறம் கொண்ட இடங்களில் நம்முடைய நேரத்தைச் செலவிடும் போதோ, வசிக்கும் போதோ மன அழுத்தம் (stress) மற்றும் மனச்சோர்வு (depression) ஆகியவை குறைவதாகவும் மேலும், கவலையும் அச்சமும் கலந்த மனநிலை (anxiety) கொண்டவர்கள் தெளிவான மனநிலையைப் பெறுகிறார்கள்.
2-அக்கறை
உங்களிடம் நீங்களே அக்கறை காட்டுங்கள். மனித வாழ்க்கை என்பது சவால்கள் நிறைந்தது. அத்தகைய சவால்களை எதிர்கொண்டு பாதிக்கப்படும் போது, சிக்கலுக்கு ஆளாகின்ற போதும் நம்மை நாமே குறை விமர்சனம் கூறிக்கொண்டு சுருங்கி விடக் கூடாது. வாழ்க்கைப் பாடங்கள் தான் நம்மை முழு முனிதனாக ஆக்குகின்றன என்பதை அறிந்து, நீங்கள் தெரியாமல் தவறு செய்து விட்டாலோ, உங்களிடம் குறைகளைக் கண்டறிந்தாலோ அடுத்தமுறை இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
3-உதவிகள்
மற்றவர்களுக்கு உதவலாம். தன்னார்வ சேவை செய்யும் போதும், பிறருக்கு உதவி செய்யும் போதும் மூளையின் குறிப்பிட்ட பகுதிகள் தூண்டப்பட்டு மனமகிழ்ச்சியை நமக்கு கொடுப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. மேலும், அன்பு மற்றும் உதவி செய்யும் குணத்துடன் இருப்பதால் நாம் வாழ்வின் நோக்கமான நற்பெயரையும் அடையலாம்.
4-நிகழ்காலத்தில் வாழ்வோம்
நேற்றிலிருந்து கற்றுக்கொள், இன்றைய நாளில் வாழ், நாளை மீது நம்பிக்கைகொள் என்பது ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறிய பொன்மொழி. கடந்தகால தவறுகள், கசப்புகளை நினைத்துப் பார்க்காமல், எதிர்காலம் பற்றி பயப்படாமல், தேவையில்லாமல் பிரச்னைகளை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்காமல் இருப்பதன் மூலம், நிகழ்காலத் தருணங்களை அனுபவித்து மகிழ்ச்சியுடன் வாழமுடியும்.
5-உறவுகள் இனிமை தரும்
நமக்கு எது மகிழ்ச்சியும், உடல் நலனும் தருகின்றது என்று 80 ஆண்டுகளுக்கு மேலாக நடந்த அறிவியல் ஆய்வின் முடிவுகள் கூறும் ஒரே பதில் என்ன தெரியுமா இனிமையான உறவுகள் என்பது தான். அந்த ஆய்வு முடிவுகள் தி குட் லைஃப் என்ற நூலாகவும் வெளி வந்துள்ளது. இனிய உறவுகளுடன் நாம் நேரம் செலவிடும் போது மகிழ்ச்சியைப் பெறுகின்றோம். அப்படி மகிழ்ச்சியுடன் இருப்பதால் நல்ல உடல் நலம் கிடைக்கின்றது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu