ஆடிக்காற்றில் அம்மியும் நகருமா? அர்த்தத்தை புரிந்து கொள்வோம்..!

ஆடிக்காற்றில் அம்மியும் நகருமா?  அர்த்தத்தை புரிந்து கொள்வோம்..!
X

கோப்பு படம் 


ஆடிக்காற்று மட்டுமல்ல... எந்த காற்றும் அம்மியை அசைக்காது. அதன் டிசைன் அப்படி. பின் ஏன் அப்படி ஒரு சொலவடை வந்தது. படிங்க.

ஆடிக்காற்றில் அம்மியும் நகரும் என்பது அனைவரும் அறிந்த ஒரு பழமொழி. ஆனால் ஆடிக்காற்றில் அம்மி நகருமா? ஆடி மாதத்தில் அதிவேகமாகக் காற்று அடித்தாலும் அம்மி இம்மி அளவுக்கும் நகராது. ஆடிக்காற்று மட்டுமல்ல. எந்த காற்றும் அம்மியை அசைக்காது. அதன் டிசைன். அப்படி.

இதற்கு வேறு பொருள் உண்டு. ஆடிக்கு முன் மாதங்கள் கோடை வெயில் வீசும் மாதங்கள். சித்திரை, கத்திரி வெயில் என்பார்கள். அம்மாதங்களில் அடிக்கிற வெயிலின் தாக்கத்தால் பலருக்கு அம்மை நோய் வரும். ஆடியில் வரும் காற்றும், சாரல் மழையும் ,குளிர்ச்சியை ஏற்படுத்தி பூமியின் சூட்டைத் தணிக்கும். அதனால் அம்மை கண்டவர்கள் முழுமை அடைந்து குணம் பெறுவார்கள். ஆடிக்குப் பின் அம்மை நோய் போய் விடும்.

அதனால் தான் 'ஆடிக்காற்றில் அம்மையும் நகரும்' என்கிறார்கள். ஆனால் அச்சொற்றொடர் திரிந்து, 'ஆடிக் காற்றில் அம்மியும் நகரும்' என்றாயிற்று. இந்த சொலவடையின் அர்த்தம் இப்ப புரியுதா? இனிமேலாவது பழமொழிகளின் சரியான அர்த்தத்தை அறிந்து கொள்வோம்.

இப்படி தமிழில் பல பழமொழிகள் பொருள் மாறி அர்த்தம் கொள்ளப்படுகின்றன. கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்ற பழமொழிக்கு நாம் கழுதைக்கு கற்பூர வாசனை தெரியாது என்று பொருள்கோள்வோம் ஆனால் அதன் உண்மையான பொருள் கழுதைக்கு கற்பூர வாசம் தெரியாது. 'கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசனை'. கழு என்பது ஒரு வகை கோரைப்புல். அதில் பாய் தைத்து படுத்து பார்த்தால் கற்பூர வாசனை தெரியும் என்பதே சரியான விளக்கம்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா