நல்வாழ்வு மையங்களில் சுகாதாரப்பணியாளர்: நீங்களும் விண்ணப்பிக்கலாம்

நல்வாழ்வு மையங்களில் சுகாதாரப்பணியாளர்:  நீங்களும் விண்ணப்பிக்கலாம்
X
நல்வாழ்வு மையங்களில் பல்நோக்கு சுகாதார பணியாளர் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்; இதற்கு வரும் 15-ம் தேதி கடைசி நாள்.

இதுதொடர்பாக, கிருஷ்ணகிரி கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 69 துணை சுகாதார நிலையங்கள் மற்றும் நல்வாழ்வு மையங்களில், தற்காலிக பல்நோக்கு சுகாதார பணியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

தகுதியுடைய ஆண்கள், மாதம் ரூ.11 ஆயிரம் ஊதியத்தில், மாவட்ட சுகாதார நலச்சங்கத்தின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த பணிக்கு பிளஸ்-2 தேர்ச்சி மற்றும் 10-ம் வகுப்பில் தமிழைப்மொழி பாடமாக படித்திருக்க வேண்டும். 2 ஆண்டு பல்நோக்கு சுகாதார பணியாளர், சுகாதார ஆய்வாளர், துப்புரவு ஆய்வாளர் படிப்பினை, அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், காந்தி கிராமிய நிறுவனங்கள் மூலம் பெற்றிருக்க வேண்டும்.

பல்நோக்கு சுகாதார பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்க, வரும் 15-ம் தேதி கடைசி நாள் ஆகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, அன்றைய தினம் (15-ம் தேதி) மாலை 5 மணிக்கு, துணை இயக்குனர், சுகாதார பணிகள் அலுவலகம், ராமபுரம் அஞ்சல், கிருஷ்ணகிரி என்ற முகவரியில், நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!