நோய் எனப்படுவது யாது..?
Disease Meaning In Tamil-நோய் என்றால் என்ன? (கோப்பு படம்)
Disease Meaning In Tamil
நோய் என்பது வியாதி அல்லது பிணி என்று கூறலாம். அது உயிரினங்களின் உடலிலோ, மனதிலோ ஏற்படும் அசாதாரணமாக ஏற்படும் ஒரு நிலைகளைக் குறிக்கும். இதனை நலமற்ற நிலை, சீரழிந்த நிலை எனவும் கூறலாம்.
நோய் மனித வாழ்வின் நிலையான துன்பங்களில் ஒன்று. நோய் பொதுவாக அறிகுறிகள் (signs) மற்றும் உணர்குறிகளுடன் (symptoms) தொடர்புடைய மருத்துவ நிலை எனலாம். நோய் ஏற்படும்போது, நோய்வாய்ப்படும் உயிரினம் சில அசெளகரியங்களை, சீரற்ற நிலையை அல்லது அசாதாரண நிலையை உணர்தல் உணர்குறி என்றும், மருத்துவருக்குத் தெரியக்கூடிய அசாதாரண நிலைகள் அறிகுறிகள் எனவும் அழைக்கப்படுகின்றன.
Disease Meaning In Tamil
நோயானது உள்ளகக் காரணிகளாலும், வெளிக் காரணிகளாலும் தோற்றுவிக்கப்படலாம். நோய்க்காரணிகளால் ஏற்படக்கூடிய தொற்றுநோய்கள் வெளிக்காரணிகளால் ஏற்படும் நோய்களாகும். உடலின் செயற் பிறழ்வுகளால் ஏற்படும் தன்னெதிர்ப்பு நோய்கள் உள்ளகக் காரணிகளால் ஏற்படும் நோய்களாகும்.
வலியை உண்டாக்கும் நிலைகள், உடலின் செயற் பிறழ்வுகள், கடுந்துன்பம் ஏற்படுத்துபவை, சமூகப் பிரச்சனைகளை உண்டாக்குபவை, ஒருவருக்கு மரணத்தை விளைவிக்கக்கூடியவை அல்லது நோய்வாய்ப்பட்டவருடன் உள்ளத் தொடர்பால் பிறருக்கு மரணத்திற்கு இணையாக நிகழும் பிரச்சனைகள் என மனிதர்களில் நோய் என்பது விரிவானதொரு பொருளில் உபயோகப்படுத்தப்படுகிறது.
இத்தகு விரிவானதொரு பொருளில் சிலநேரங்களில், பிற சூழல்கள் அல்லது நோக்கங்களுக்காகத் தனித்துவமாக வகைப்படுத்தக்கூடியவையாக உள்ள காயங்கள், உடல் ஊனங்கள், நலச் சீர்கேடுகள், நோய்க்கூட்டறிகுறிகள், நோய்த்தொற்றுகள், தனிப்பட்ட நோய் உணர்குறிகள், பொது நிலையிலிருந்து விலகிய நடத்தைகள், மனித வடிவம் மற்றும் செயல்களில் உள்ள அசாதாரணமான வேறுபாடுகள் ஆகிய அனைத்தையும் நோய் என்றே குறிப்பிடுகின்றோம்.
Disease Meaning In Tamil
சாதாரணமாக பிணிகள் உடலளவில் மட்டுமல்லாது உணர்வுப்பூர்வமாகவும் மனிதர்களைப் பாதிக்கின்றன. பலவிதமான வியாதிகளுடன் நோய்வாய்ப்பட்டு வாழ்வது வாழ்வைப் பற்றிய ஒருவரின் கண்ணோட்டத்தினை, மனோபாவத்தினை முற்றிலுமாக மாற்றியமைக்கக்கூடியதாகும்.
நோய்வாய்ப்பட்டு இறப்பது இயற்கையான மரணமாகக் கருதப்படுகிறது. நோய்களை நோய் விளைவிக்கின்றவை, குறைபாட்டு நோய், பரம்பரை வியாதி, உடலியக்கப் பிறழ்வுகள் என நான்கு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். நோய்களைத் தொற்று நோய்கள், தொற்றா நோய்கள் என்றும் பிரிக்கலாம். மனிதர்களில் கொடிய வியாதியாகக் குருதியோட்டத்தைத் தடுக்கும் வளி குறைபாட்டு இதயநோயையும் (ischemic heart disease), இதற்கு அடுத்ததாகப் பெருமூளை குருதிக்குழல் நோய் (cerebrovascular disease), கீழ் சுவாசக்குழாய்த் தொற்றுகள் (lower respiratory infections) ஆகியவற்றைக் கூறலாம்.(நன்றி : விக்கிபீடியா)
Disease Meaning In Tamil
மக்கள், விலங்குகள், தாவரங்கள், போன்றவற்றில் ஏற்படக்கூடிய ஒரு நோய், ஒரு விபத்தினால் ஏற்படுவதற்கு மாறாக நோய்தொற்றால் அல்லது உடல்நலக் குறைபாட்டினால் ஏற்படும் நோய்.
a contagious/infectious disease
ஒரு தொற்று / தொற்று நோய்
a common/rare/incurable/fatal disease
ஒரு பொதுவான / அரிதான/குணப்படுத்த முடியாத/அபாயகரமான நோய்
They reported a sudden outbreak of the disease in the south of the country.
நாட்டின் தெற்கில் திடீரென இந்த நோய் அதிக அளவில் பரவ தொடங்கியது என அவர்கள் தெரிவித்தனர்.
The first symptom of the disease is a very high temperature.
Disease Meaning In Tamil
She has caught/contracted (= begun to have) a lung disease/disease of the lungs.
Starvation and disease have killed thousands of refugees.
பட்டினியும் நோயும் ஆயிரக்கணக்கான அகதிகளைக் கொன்றுவிட்டன.
குறைவான உதாரணங்கள்
Chickenpox is a very common disease among children.
Regular exercise reduces the risk of coronary heart disease.
Disease Meaning In Tamil
There is no known cure for this disease .
The children were vaccinated against the major childhood diseases.
The disease is spread by the contamination of food and water by faeces.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu