/* */

definition of maturity-'உனக்கு மெச்சூரிட்டி பத்தாது' அப்படீன்னு சொல்றாங்களே அப்டீன்னா என்னங்க..? பாவம் வடிவேல்..!

definition of maturity-'மெச்சூரிட்டி என்பது எந்த அளவுகோல்களில் கூறப்படுகிறது? அதற்கான விளக்கம் உங்களுக்காக. படீங்க.

HIGHLIGHTS

definition of maturity-உனக்கு மெச்சூரிட்டி பத்தாது அப்படீன்னு சொல்றாங்களே அப்டீன்னா என்னங்க..? பாவம் வடிவேல்..!
X

definition of maturity-மன முதிர்ச்சி (கோப்பு படம்)

definition of maturity-'ஆங்கிலத்தில் பலர் இந்த வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துவார்கள். 'உனக்கு அதுக்கெல்லாம் மெச்சூரிட்டி பத்தாது'என்பார்கள். அதென்னங்க மெச்சூரிட்டி? மெச்சூரிட்டி என்பதைத் தான் தமிழில் மனமுதிர்ச்சி என்கிறோம். மனமுதிர்ச்சி என்பது என்ன? அதை எப்படி பின்பற்றுவது அல்லது எப்படி ஏற்படுத்திக்கொள்வது என்பது சமூக வாழ்வில் முக்கியமாகும்.

மனமுதிர்ச்சி (மெச்சூரிட்டி) என்பதற்கு விளக்கம் தேவை. ஒரு சிலர் நன்றாக வளர்ந்திருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு வயது குறைவாக இருக்கும்.ஆனாலும் பெரிய ஆள் மாதிரி தெரிவார்கள். உருவ அளவில் மட்டுமே அவர்கள் மெச்சூரிட்டி. ஆனால் பிசிகலா அவர்கள் சிறியவர்களுக்கான நடவடிக்கையாகத்தான் இருப்பார்கள். இந்த மெச்சூரிட்டி உடல் அளவு இருக்கக்கூடிய முதிர்ச்சி.

உண்மையாகவே நாம் மனதளவில் (மெச்சூராய்) முதிர்ச்சியாக இருக்கவேண்டும். அதற்காக நாம் தாத்தா பாட்டியாகத்தான் இருக்கவேண்டும் என்று அவசியம் இல்லை. சிலர் சிறிய வயதிலேயே அனுபவம் வாய்ந்த மனிதர்போல முதிர்ச்சியாக (மெச்சூராய் )நடந்துகொள்வார்கள்.

ஆனால், ஒரு சிலர் வயதில் பெரியவர்களாக இருப்பார்கள். ஆனால், அவர்களது நடவடிக்கைகள் அத்தனையும் சிறிய குழந்தை போல இருக்கும். ஆக, இந்த முதிர்ச்சி என்பதை சில அளவுகோல்கள் மூலமாக நாமே உருவாக்கிக்கொள்ள முடியும். எப்படி? பார்ப்போம் வாங்க.

definition of maturity

மன முதிர்ச்சி (Maturity of Mind) என்றால் என்ன?

1. மற்றவர்களை திருத்த முற்படுவதை விட்டுவிட்டு முதலில் நாம் நம்மை திருத்திக்கொள்வது.

2. யாரிடம்தான் குறைகள் இல்லை? அதனால், அவர்களிடம் உள்ள குறைகளுடன் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

.3. ஒவ்வொருவருக்கும் தான் பேசுவதில் ஒரு பொருள் இருக்கும். ஆகவே, மற்றவர்களின் கருத்துகளை அவர்கள் கோணத்திலிருந்து புரிந்துகொள்ளுதல் அவசியமாகும்.

4. நம்மை அறியாமல் நம்மிடமும் ஏதாவது குறைகள் இருக்கும். அதனால், எதை விட வேண்டுமோ அதை விட பழகிக் கொள்ளுதல் அவசியம்.

5. நம் குடும்பத்தினராக இருந்தாலும் சரி அல்லது நாம் பழகும் நெருங்கிய நண்பர்களாக இருப்பினும் சரி மற்றவர்களிடமிருந்து எதையும் எதிர்பார்ப்பதை விட்டுவிடவேண்டும்.

6. எந்த செயலை செய்தாலும் அப்படி செய்வதை மன அமைதியுடன் செய்வது அவசியமாகும்.

7. மிக முக்கியமாக நமது புத்திசாலித்தனத்தை மற்றவர்களிடம் நிரூபிக்க முற்படுவதை தவிர்க்கவேண்டும்.

8. நமது பணியிலோ அல்லது ஏதாவது ஒரு செயலிலோ நமது செயல்களை மற்றவர் ஏற்க வேண்டும்

என்ற மனநிலையை விட்டுவிட வேண்டும்.

9. நமக்கான திறமைகள் மீது நம்பிக்கை வைத்து, மற்றவர்களுடன் நம்மை ஒப்பிடுவதை ஒருக்காலும் செய்யக்கூடாது.

10. ஒரு செயலில் இறங்கும்போதோ அல்லது ஒரு செயலை செய்யும்போதோ அப்போதே அதன் விளைவுகள் இப்படி ஆகுமோ? அப்படி ஆகுமோ என்று சஞ்சலப்படாமல் மனதை அமைதியாக வைத்துக்கொண்டு செயல்களை செய்ய முயற்சித்தல் வேண்டும்.

11. நமது அடிப்படைத் தேவைக்கும், நாம் அடைய விரும்புவற்றிற்கும் (ஆசை)உள்ள வேறுபாட்டினை உணர்ந்துகொள்ளுதல் வேண்டும். அதாவது உணவு, தண்ணீர், உடை, உறைவிடம் என்பன நமக்கான அடிப்படைத்தேவைகள். இது உயிர்வாழ்வதற்கான அடிப்படை.

ஆனால், ஆசைகள் என்பது ஒரு நபர் வைத்திருக்க விரும்பும் பொருட்களாக இருக்கலாம். உதாரணம் ஒரு பொம்மை, விலையுயர்ந்த கடிகாரம் அல்லது லேட்டஸ்ட் செல்போன் போன்றவை. இப்படி தேவைக்கும் ஆசைக்குமான வேறுபாட்டை உணர்வது முக்கியமாகும்.

12. சந்தோசம் என்பது பொருள் சம்பந்தப்பட்டது அல்ல. அது உள்ளம் சார்ந்தது என்ற உயர் நிலையை அடைதல். மகிழ்ச்சி என்பது உள்ளிருந்து வருவது.

definition of maturity

இப்படி ஒரு முதிர்ச்சியடைந்த (மெச்சூரிட்டி) ஒருவர் எப்படி நடந்துகொள்வார் என்பது உங்களுக்கு தெளிவாகி இருக்கும். இந்த 12 குறிப்புகளில் குறைந்தது 8 விஷயங்களை கடைபிடிக்க முயற்சித்தால் வாழ்க்கை எளிதாகிவிடும். நீங்கள் முதிர்ச்சியானவர் அதாவது மெச்சூரிட்டி ஆனவர் என்று சான்றிதழ் தரலாம்.

முதிர்ச்சியின் அறிகுறிகள் என்ன?

  • அதிகமாகக் கேட்டு, குறைவாகப் பேசுதல்
  • எந்த பொறுப்புகளையும் ஏற்பதில் தயக்கம் இல்லாமல் இருத்தல்
  • வாதம் செய்வதை விட்டுவிட்டு அதிக இணக்கம் காட்டுதல்
  • எல்லா காலநிலையையும் (season)முழுமையாக அனுபவித்து உணர்தல்
  • முகத்தில் எப்போதும் புன்னகையோடு இருத்தல்
  • குழந்தைகள் மற்றும் பெரியவர்களை நேசித்தல்
  • செலவழிப்பதை விட அதிகமாக சேமித்தல்
  • புத்தகங்கள் வாசிப்பில் அதிகம் ஈடுபாடு காட்டுதல்
Updated On: 25 Dec 2022 9:46 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீதியின் பக்கம் நில்லுங்கள்..! நீதி கிடைக்கும்..!
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை தொடர் உயர்வு
  3. வீடியோ
    🔴LIVE : வைரமுத்து இளையராஜா விவகாரம்! பொங்கி எழுந்த பாடலாசிரியர்...
  4. ஈரோடு
    சென்னிமலை எம்.பி.என்.எம்.ஜெ. பொறியியல் கல்லூரியில் தேசிய தொழில்நுட்பக்...
  5. வீடியோ
    கோவிலுக்கு செல்வதால் யாருக்கு லாபம்! #mysskin|#hinduTemple|#hindu |...
  6. லைஃப்ஸ்டைல்
    தோல்வி கண்டு துவளாதீர்..! வீழ்ச்சி எழுச்சிக்கான முயற்சி..!
  7. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  8. ஈரோடு
    வெளிநாட்டில் வேலை: கொங்கு கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு
  9. வீடியோ
    சினிமா படத்தில்ல இருக்கிறது எல்லாம் நல்லவா இருக்கு? ...
  10. லைஃப்ஸ்டைல்
    குடும்ப உறவாகும் நட்பு..! இருபக்க மகிழ்ச்சி..!