Bonafide Certificate Meaning-உறுதிச்சான்றிதழ் என்பது என்ன? தெரிஞ்சுக்கங்க..!

Bonafide Certificate Meaning-உறுதிச்சான்றிதழ் என்பது என்ன? தெரிஞ்சுக்கங்க..!
X

bonafide certificate meaning-உறுதிச்சான்று (கோப்பு படம்)

Bonafide சான்றிதழ் என்பது என்ன? அதன் பயன்பாடு என்ன? அதற்கான மாதிரி கடிதம் மற்றும் மாதிரி சான்றிதழ் போன்றவை தரப்பட்டுள்ளன.

Bonafide Certificate Meaning

நாம் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும்போது இந்த Bonafide சான்றிதழ் பற்றி கேள்விபட்டிருப்போம். ஆனால் பலருக்கும் இந்த சான்றிதழ் எதற்காக பயன்படுத்தபடுகிறது? இதன் அர்த்தம் என்னவென்று புரியாமல் இருக்கலாம். அதனால் இந்த கட்டுரையில் இருந்து Bonafide Certificate குறித்த விபரங்களைத் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Bonafide Certificate Meaning

போனஃபைட் சான்றிதழ் என்பதற்கு உறுதியான சான்றிதழ் என்று பொருள்.

அதாவது ஒரு நபர் ஒரு குறிப்பிட்ட பள்ளி அல்லது ஒரு குறிப்பிட்ட அமைப்பைச் சேர்ந்தவர் என்பதற்கான சான்று.

உதாரணமாக நீங்கள் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் பணி செய்கிறீர்கள் என்பதைக் காட்ட இந்த Bonafide சான்றிதழ் வழங்கப்படுகிறது.

Bonafide சான்றிதழின் பயன்கள்

  • மாணவர்களுக்கு இந்த ஆவணம் உதவித்தொகை கிடைக்க பயன்படுகிறது.
  • போது போக்குவரத்து நிறுவனங்களால் சலுகைகள் வழங்கபடுவதற்கு உதவுகிறது.
  • பாஸ்போர்ட், விசா போன்ற விண்ணப்பங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
  • ஓட்டுநர் உரிமம் வாங்குவதற்கு, சில நிறுவனங்கள் மாணவர்களுக்கு சலுகை விலையில் கடன்களை வழங்குவதற்கு உதவுகிறது. கருத்தரங்கு, மாநாடு அல்லது அதுபோன்ற மற்றொரு நிகழ்வில் கலந்து கொள்ள உதவுகிறது
  • ஒரு சில நிறுவனங்களில் ஊழியர்களின் தகுதியை நிருபிக்க பயன்படுத்தபடுகிறது.

Bonafide Certificate Meaning

உறுதிச் (போனஃபைட்) சான்றிதழ்:

உறுதியான சான்றிதழ் இரண்டு வகைகளில் உள்ளது அவை

  • தற்காலிக உறுதியான சான்றிதழ்
  • நிரந்தர உறுதியான சான்றிதழ்

தற்காலிக உறுதியான சான்றிதழை நீங்கள் ஆறு மாதத்திற்கு மட்டுமே பயன்படுத்த முடியும். நிரந்தர உறுதியான சான்றிதழ் ஒரு நபர் நிறுவனத்தில் இருந்து வெளியேறும் வரை உபயோகபடுத்த முடியும்.

Bonafide Certificate Meaning

உறுதிச்சான்றிதழ் பெறுவது எப்படி ?

பெறுநர்:

முதல்வர்,

பள்ளி அல்லது கல்லூரியின் முகவரி

தேதி :

பொருள்: உறுதிச் சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பக் கடிதம்

மதிப்பிற்குரிய ஐயா,

வணக்கம் எனது பெயர் க. மாதவி. நான் நமது கல்லூரியில் (பள்ளியில் படிப்பவர்கள் வகுப்பினை குறிப்பிடலாம்) வேதியியல் பிரிவில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறேன். என்னுடைய ரோல் எண் : 145233CC நான் இந்த ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை பெற வேண்டும்.

உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கான உறுதிச்சான்று எனக்குத் தேவைப்படுகிறது, அதனால் நமது கல்லூரியில் நான் படித்து வருவதற்கான சான்றிதழை வழங்கும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி,

இப்படிக்கு தங்கள் உண்மையுள்ள,

(கையெப்பம்)

க.மாதவி

..........

Bonafide Certificate Meaning

மாதிரி உறுதிச்சான்றிதழ்


உறுதிச்சான்றில் கீழே தரப்பட்டுள்ள குறிப்புகள் இடம்பெற வேண்டும்.

  • நிறுவனத்தின் பெயர் மற்றும் முகவரி
  • மாணவரின் பெயர் மற்றும் பட்டியல் எண்
  • பாடநெறி காலம்
  • வழங்கப்பட்ட தேதி மற்றும் செல்லுபடியாகும் காலம்
  • வழங்கும் அதிகாரத்தின் கையொப்பம்
  • ஊழியரின் விவரங்கள்

Tags

Next Story
Weight Loss Tips In Tamil