நேரத்தை மேலாண்மை செய்து எப்படி படிப்பது..? காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் கவனிங்க..!

best time management tips for college students-சிறப்பாக படிப்பதற்கு கல்லூரி மாணவர்கள் எதை செய்யவேண்டும்? எதை செய்யக்கூடாது என்பதற்கு விளக்கம் தரப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நேரத்தை  மேலாண்மை செய்து எப்படி படிப்பது..? காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் கவனிங்க..!
X

best time management tips for college students-நேர மேலாண்மை (மாதிரி படம்)

1. அட்டவணையில் தேதி மற்றும் நேரம் பதிவு செய்தல்

best time management tips for college students-மூன்று நாட்களுக்குரிய வீட்டுப்பாடம் மற்றும் ஒரு வாரத்தில் நடக்கவுள்ள தேர்வு போன்றவைகளை வகுப்பு முடியும் நேரத்தில் ஆசிரியர் அறிவிக்கிறார். அதை மனதில் வைத்துக்கொண்டு வெளியேறுகிறீர்கள். அது வெறும் மனக்குறிப்பாகமட்டும் உள்ளது. ஆனால் அதை மறந்துவிட வாய்ப்புள்ளது. அதனால், எத்தனைமுறை ஆசிரியர் உங்களை கண்டிப்பு செய்துள்ளார் என்பதை நினைவுப்படுத்தி பாருங்கள். அதனால் உங்கள் சொற்படி மனம் நடக்கவேண்டுமெனில் ஆசிரியர் கூறுவதை குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள். எந்த தேதியில் என்ன நடக்கப்போகிறது என்பதை மீள்பார்வை செய்து கொள்ளலாம்.

நீங்களே ஒரு திட்டம் வைத்திருந்தாலும் அதை முடிக்கவேண்டிய தேதி போன்றவைகளை எழுதி வையுங்கள்.

செமஸ்டரின் தொடக்கத்தில் தேதிவாரியாக தேர்வு நடக்கும் பாடங்களை தேதிவாரியாக காலண்டறில் குறிப்பிடுங்கள். அதை உங்கள் அறையில் கண் பார்வையில் படும்படி வையுங்கள். எந்த தேதியில் என்ன பாடம் வரப்போகிறது என்பதை அறிவது உங்களை சிறப்பாக தயார்செய்துகொள்ள உதவும்.

2. ஒரு வழக்கத்தை உருவாக்கல்

சில வரைமுறைகளை உருவாக்கிக்கொண்டு அந்த வரைமுறையை வழக்கமாக்கிக்கொள்வது வாழ்க்கையையும் செழுமையாக்கிக்கொள்ள உதவும். குறிப்பாக காலை படுக்கையில் இருந்து எழுவது தொடங்கி, காலைக்கடன்கள் முடித்தல், உடற்பயிற்சி செய்தல், குளிப்பது, காலை உணவு, கல்லூரி செல்லுதல்,கல்லூரி முடிந்து வீட்டுக்கு வருதல், ரிலாக்ஸ் படுத்துவது, உற்சாகத்துக்கு விளையாட்டு, வீட்டுப்படங்கள் எழுதுதல், படிக்கவேண்டிய பாடங்களை படித்தல், இரவு உணவு, மீண்டும் கொஞ்ச நேரம் படிப்பு, பின்னர் தூங்கப் செல்வது என்ற ஒரு நெறிமுறையை வகுத்துக்கொண்டால் தினமும் அதன் படியே நடப்பது உங்கள் வெற்றியை உறுதிசெய்யும். குறிப்பாக எந்த நேரம்? என்ன செய்ய வேண்டும்? என்பதை நெறிமுறையாக குறிப்பிட்டிருக்கவேண்டும். ஆகவே அந்தந்த நேரத்தில் செய்யவேண்டியவைகள் நடக்கும்.

இந்த வழிமுறையால் செமெஸ்டர் தொடங்கும்போது மட்டுமே படிக்கவேண்டும் என்கிற நிலை மாறும். உங்கள் நெறிமுறைகளின்படி பாடங்களை படித்து முடித்திருப்பீர்கள். அதனால் கூடுதல் நேரம் தேவையில்லை. பாடங்களை மீள்பார்வை செய்வது மட்டுமே உங்களுக்கான தயாரிப்பாக இருக்கும்.

3.தொழில்நுட்ப பயன்பாடு

best time management tips for college students-மில்லியன் கணக்கான ஆப்ஸ் மற்றும் கேம்கள் உங்கள் விரல் நுனியில் இருப்பதால், உங்கள் ஸ்மார்ட்போன் நேரத்தை வீணடிப்பதை மறுக்கமுடியாது. இருப்பினும், சில சுய-கட்டுப்பாடு மற்றும் ஒழுங்குடன், உங்கள் மொபைல் சாதனத்தை உங்கள் படிப்பிற்கு திட்டமிடலுக்கான சாதனமாக மாற்றலாம். உங்கள் மொபைல் போனில் சில நினைவூட்டுவதற்கான குறிப்புகளை தேதி மற்றும் நேரத்தை பதிவிட்டு வைக்கலாம். உரிய நேரத்தில் உங்களுக்கு மொபைல் போன் வழிகாட்டும்.

நீங்கள் படிக்கும் நேரத்தில் சமூக ஊடகங்களை தவறாமல் பார்க்க ஆசைப்படுகிறீர்களா? சமூக ஊடகங்கள் மற்றும் பிற கவனச்சிதறல்களைத் தடுப்பதற்கு வேறு பயனுள்ள ஒன்றில் உங்கள் கவனத்தை திசைதிருப்பலாம். உதாரணமாக உங்களுக்கு பிடித்த புத்தகங்களை வாசித்தல். ஏனெனில் உங்கள் மொபைல் போன் வெறும் சமூக ஊடகங்களை பார்க்கத் தூண்டுவதுடன் உங்கள் கவன சிதறலுக்கு அதுவே காரணியாகிறது.

கற்பதற்கு நேரமேலாண்மை முக்கியம். அதை நிர்வகிப்பது ஒருவகையான தலைமைப் பண்பை உங்களுக்குள் உருவாக்கும்.கவன சிதறல் குறைந்தாலோ உங்கள் நேர மேலாண்மை சிறப்பாக இருக்கும்.


4. வகுப்பிலும் குறிப்பு எடுப்பதை வழக்கமாக்குங்கள்

கல்லூரியில் பேராசிரியர் பாடங்கள் நடத்தும்போது எல்லாவற்றையும் விரிவாக எழுதவேண்டும் என்று தடுமாறவேண்டாம். அவர் சொல்வதை காதில் வாங்கி தேவையான முக்கிய குறிப்புகளை குறித்து வைத்துக்கொண்டால், மீண்டும் அதை மாலையில் மீள்பார்வை செய்யும்போது உங்களுக்குள் ஒரு புரிதல் மனதில் எழுவதை எளிதில் உணர்வீர்கள்.

ஆகவே மாணவர்கள் தங்கள் விரிவுரைக் குறிப்புகளை தோராயமான அவுட்லைன் அல்லது முதல் வரைவாக நினைத்துப் பார்க்குமாறு எடுத்துக்கொள்ளவேண்டும். "வகுப்பின் போது, ​​நேர்த்தியாக எழுதவேண்டும், வடிவம் அல்லது எழுத்துப்பிழை பற்றி கவலைப்படத் தேவை இல்லை. நீங்கள் அந்த குறிப்புகளுடன் அதே நாளில் இரண்டாவது முறையாக அதை எதிர்கொள்ளும்போது ஒரு மாய மந்திரம்போல உங்களுக்கு எல்லாம் புரிந்துபோகும்.

பொதுவாகவே ஒரு பொருள் குறித்து பேசினால் அந்த பொருள் நமக்கு அறிமுகமான முதல் 24 மணி நேரத்திற்குள் பெரும்பாலானவர்களுக்கு மறதியாகிவிடுகிறது. ஆனால் அந்த குறிப்புகளை மீண்டும், மீண்டும் நகலெடுப்பது போல மனதுக்குள் வாங்கி மறுசீரமைப்பது அந்த பொருள் குறித்த தகவலை புரிந்து தக்கவைத்துக்கொள்ள உதவுகிறது.இதன்மூலம் பேராசிரியரின் விரிவுரையின்போது தேவையற்றவைகளை ஒதுக்கி தேவையானவைகளை மட்டும் உள்வாங்கிக்கொள்ள முடிகிறது.

best time management tips for college students-பாடப்புத்தகத்தில் ஒரு சந்தேகத்திற்கான தீர்வுக்கு நேரத்தை செலவு செய்வதைவிட குழப்பத்தைத் தீர்க்க Google -ல் தேடுங்கள். உடனடி தீர்வு கிடைக்கும். எழுத்துப்பிழை உள்ளதா என்பதை ஒருமுறைக்கு இருமுறை சரிபார்க்க வேண்டும். இந்த நடைமுறை வைக்கோலை தங்கமாக மாற்றுவது போன்றது. பரீட்சைக்கு படிக்கும் நேரம் வரும்போது, ​​நோட்டுகள் அழகாக அப்படியே புதிதாக இருக்கும். படிப்புக்கான நேரம் குறைகிறது.

5. கவனச்சிதறல்களை ஆராய்ந்து கட்டுப்படுத்தல்

கவனச் சிதறலுக்கான காரணங்களை ஆராய்ந்து அவற்றை களைய முற்படுதல் வெற்றிக்கான முதல் திறவுகோல். உங்கள் பழக்கவழக்கங்கள் மற்றும் விருப்பங்களை யதார்த்தமாக வைத்துக்கொண்டு அதற்குள் ஒரு வரைமுறையை நிறுவ முயல்வது வெற்றிக்கான அடுத்த படி. அந்த வரைமுறைப்படி நீங்கள் நடந்துகொள்ள ஒரு வழக்கத்தை நிறுவுவது மட்டுமல்லாமல், கவனச்சிதறல்கள் வரும்போது அது உங்களுக்கு உதவி வழிகாட்டும்.

இரவில் மட்டுமே படிப்பதால் பயன் இல்லை. திட்டமிட்ட நேரமேலாண்மையில் நெறிமுறை ஒன்றை வகுத்துக்கொள்வது உங்களை வெற்றிப்படிக்கட்டில் உயர உயர அழைத்துச் செல்லும். வெற்றிபெற வாழ்த்துக்கள்.

Updated On: 29 July 2022 5:59 AM GMT

Related News