Be Calm Quotes in Tamil-அமைதி என்பது ஞானத்தின் கோவில்..!

Be Calm Quotes in Tamil-அமைதி என்பது ஞானத்தின் கோவில்..!
X

be calm quotes in tamil-அமைதி மேற்கோள்கள் (கோப்பு படம்)

அமைதி என்பது ஞானம் குடியிருக்கும் கோவில். அது நம்பிக்கை வளர்க்கும் ஆலயம். வாழ்வினை நிர்ணயம் செய்ய திட்டமிட வைக்கும் அறிவளர் கல்வி.

Be Calm Quotes in Tamil

அமைதியான நிலை என்பது தியானத்தின் அடையாளம். அமைதி ஒருவகை ஆளுமையின் வெளிப்பாடு. இந்த அமைதி நிலை நம்பிக்கையை வலுப்படுத்தும் உரம். அது சாதனைக்கான தடத்தில் பயணம் செய்ய கிடைத்த வரம். அதுவே பல வெற்றிகளைத் தரும்.

பிரச்சினைகளை கண்டு பயந்து

பின் வாங்காதீர்கள்

காற்றை எதிர்த்தே

பட்டங்கள் மேலே

செல்கின்றன


தோல்விகளால் அடிபட்டால்

உடனே எழுந்து விடு

இல்லையேன்றால் இந்த உலகம்

உன்னை புதைத்துவிடும்

சோதிப்பது காலமாக இருந்தாலும்

சாதிப்பது நீங்களாக இருங்கள்

தடைகள் பல வரலாம்

தட்டிப்பறிக்க கூட்டமும் சில வரலாம்

எதை கண்டும் அஞ்சாதே

துணிந்து நில்

முன் வைத்த காலை பின் வைக்காதே

நீ எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும்

வெற்றியின் படிகள் தான்

Be Calm Quotes in Tamil

வெற்றி என்பது உன்னை

உலகிற்கு அறிமுகம் செய்வது

தோல்வி என்பது உன்னை

உனக்கே அறிமுகம் செய்வது

தோல்வி உன்னை

துரத்தினால்

நீ வெற்றியை

நோக்கி ஓடு

உன் மதிப்பை

முடிவு செய்ய

வேண்டியது நீ தான்

உன்னை சுற்றி

இருப்பவர்கள் அல்ல

உன்னையே நீ நம்பு

ஓர் நாள் உயர்வு நிச்சயம்

பணிந்து போ

உன் தகுதியை உயர்த்தும்

துணிந்து போ

உன் திறமையை

உயர்த்தும்

தைரியம் பயத்தை விட

ஒரு படி மேலே உள்ளது

Be Calm Quotes in Tamil

தோல்வியிடம்

வழி கேட்டு தான்

வந்து சேர முடியும்

வெற்றியின் வாசற்படிக்கு

நாளைய வாழ்க்கையை சிறப்பாக மாற்றுவது,

இன்றைய எண்ணங்களும் செயல்களும் தான்

சவால்கள் இல்லை என்றால்

வாழ்க்கையில் நீங்கள்

முன்னேறவில்லை

என்று தான்

அர்த்தம்

எதுவாக இருந்தாலும் சரி

மூழ்கிவிடாதே

மிதக்க கற்றுக்கொள்

விட்டுவிடாதீர்கள்

ஆரம்பம் எப்போதும்

கடினமானது

கூராக தீட்டப்படாத ஆயுதமும் அறிவும்

எதையும் வெட்டப் போவதில்லை

போராடி தோற்பதும்

வெற்றிக்கு சமம்

Be Calm Quotes in Tamil

எடுத்து வைப்பது

சிறிய அடியாக

இருந்தாலும்

எட்டுவது சிகரமாக

இருக்க வேண்டும்

எதையும் சாதிக்க விரும்பும் மனிதனுக்கு

நிதானம் தான் அற்புதமான ஆயுதமே தவிர

கோபம் இல்லை

வெற்றி கவிதைகள்

வெற்றி கவிதை வரிகள்

ஓடிக்கொண்டே இரு

எல்லைக்கோட்டை அடையாவிட்டாலும்

உன் கால்கள் உறுதிப்படும்

நீ செல்லும் பாதைகளில்

எதுவும் தடைகள் இல்லை என்றால்

அது நீ போகும் பாதையே அல்ல

வேறு யாரோ போன பாதை

தளராத இதயம் உள்ளவனுக்கு

இவ்வுலகில் முடியாதது என்று

எதுவுமே இல்லை

நம்மை உடைத்த நாள்களே

நம்மை உருவாக்கிய நாள்கள்

நம்பிக்கை வெற்றியோடு வரும்

ஆனால் வெற்றி

நம்பிக்கை உள்ளோரிடம்

மட்டுமே வரும்

முயற்சி செய்ய தயங்காதே

முயலும் போது முட்களும்

உன்னை முத்தமிடும்

Be Calm Quotes in Tamil

விழுந்து விடுவேன்

என்ற பயத்துடன் ஓடாமல்

விழுந்தாலும் எழுந்து ஓடுவேன்

என்ற நம்பிக்கையில் ஓடுங்கள்

வாழ்க்கையில் தடுமாற்றமே இருக்காது

நீ பட்ட

துன்பத்தை விட

அதில் நீ பெற்ற

அனுபவமே சிறந்தது

நம்மால் முடிந்த வரை செய்வதல்ல முயற்சி

நினைத்ததை முடிக்கும் வரை செய்வதே

உண்மையான முயற்சி.

முடிவே இல்லாத

ஒரு வார்த்தை

முயற்சி

கவலையை உன்

காலுக்கு கீழ்

கொண்டு வா

தூக்கி சுமக்காதே

இங்கு உழைக்காமல் வாழ்பவர்களை விட

வாழாமல் உழைப்பவர்களே அதிகம்

ஓடும்போது பின்னே பார்க்காதே

பார்த்தால், பின்னே இருப்பவன்

முன்னே இருப்பான்

Be Calm Quotes in Tamil

வார்த்தையால் பேசுவதை

விட வாழ்ந்து

காட்டுவதே சிறப்பு

வாழ்க்கை என்றால்

வரும் ஆயிரம் துயர்

அதை பொருட்படுத்தாமல்

நீ தொடர்ந்து உயர்

நம்மால் நேற்றை

சரிசெய்ய முடியாது

ஆனால் நாளையை

உருவாக்க முடியும்

ஒரு நாள் விடியும் என்று காத்திருக்காமல்

இன்றே முடியுமென முயற்சி செய்

வேதனைகளும் வெற்றிகளாக மாறலாம்

விழுவதெல்லாம்

எழுவதற்குத்தானே தவிர

அழுவதற்காக அல்ல

நம் நிலை கண்டு கை கொட்டி சிரித்தவர்களை

கை தட்டி பாராட்ட வைப்பதே

வெற்றிகரான வாழ்க்கையின் அடையாளம்

தனித்திரு

அதுவே உன் தனித்திமிர்

குறிக்கோளை முடிவு

செய்த பின் அதற்கான

முயற்சிகளில் மட்டுமே

கவனம் செலுத்துங்கள்

கடந்த காலம் நமக்கு

பாடமாக இருக்கவேண்டுமே

ஒழிய பாரமாக இருக்க

நாம் அனுமதிக்கக்கூடாது

Be Calm Quotes in Tamil

தினமும் ஓய்வில்லாமல்

உழைப்பதால் தான்

எல்லா இடத்திலும்

உயரத்தில் உள்ளது

கடிகாரம்

தடைகளைத் தட்டிக்கழிப்பதை

விடத் தகர்த்து விடுவது

தான் புத்திசாலித்தனம்

எழுவதற்கே வீழ்ச்சி

வெல்வதற்கே தோல்வி

ஆயிரம் பேரிடம்

யோசனைக் கேள்

ஆனால் முடிவை

நீ மட்டுமே எடு

ஒருவனின் தெளிவான

குறிக்கோளே வெற்றியின்

முதல் ஆரம்பம்

குறி தவறினாலும்

உன் முயற்சி

அடுத்த வெற்றிக்கான

பயிற்சி

காயங்கள் குணமாக

காலம் காத்திரு

கனவுகள் நினைவாக

காயம் பொறுத்திரு

வெற்றியை விட

சில சமயங்களில்

முயற்சிகள் மிகவும்

அழகானவை

என் பாதையில் ஆயிரம்

தடுமாற்றம் வரலாம்

ஆனால் என் பயணம்

என்றும் தடம்மாறாது

Be Calm Quotes in Tamil

தன்னால் முடியும் என்ற

நம்பிக்கை உள்ள மனிதன்

தன் முயற்சியை

நாடுவான் அடுத்தவர்

உதவியை நாடுவதில்லை

விதைத்து கொண்டே இரு

முளைத்தால் மரம்

இல்லையேல் உரம்

அனுபவம் மெதுவாக

தான் வாழ்க்கையை

கற்றுக் கொடுக்கும்

சரித்திரம் ஒரு முறை

உன் பேரைச் சொல்ல

வேண்டும் என்றால் நீ

பல முறை என்னிடம்

வர வேண்டும் இப்படிக்கு

முயற்சி

Tags

Next Story
ஈரோட்டில் தங்கம், வெள்ளி விலை இன்றைய நிலவரம் தெரியுமா?