இயல்பு என்பது அவரவருக்கான தனித்தன்மை..! எப்படீங்க..? படீங்க..!

Attitude Quotes in Tamil
X

Attitude Quotes in Tamil

Attitude Quotes in Tamil-நீங்க நல்லவரா கெட்டவரா..அப்டிங்கறதை எது தீர்மானிக்கிறது தெரியுமா? தெரிஞ்சுக்கங்க.

Attitude Quotes in Tamil

நமது மனப்பான்மையே நாம் யார் என்பதை தீர்மானிக்கிறது. நம்பிக்கை உள்ளவன் பிறரைப்பற்றி பேசுவதையோ அல்லது பிறரை எதிர்பார்ப்பதையோ வைத்துக்கொள்ளமாட்டான். அவனது நம்பிக்கை மட்டுமே அவனை வழிநடத்தும். ஒருவரது இயல்பை நிர்ணயம் செய்வதும் இந்த மனப்பான்மையே. ஒருவர் இனிமையாக பழகுவார். இன்னொருவர் பழகுவதற்கு கடினமானவராக இருப்பார். இது அவரவர் இயல்பு. ஆனால் யாரும் கெட்டவர் இல்லை.

ஒருவர் தனது இயல்பு நிலையில் எப்படி வாழவேண்டும் என்பதை இங்கு வாழ்க்கையின் மேற்கோள்களாக பார்ப்போம் வாருங்கள்.

Attitude Quotes in Tamil

உந்தன் கேள்வியில் அதிகாரச் சாயல் இருக்குமானால் நிச்சயமாக என்னுடைய பதிலில் திமிருக்கான வீச்சே இருக்கும்.

தரம் தாழ்ந்த சிந்தனைகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. நாய் குறைக்கிறது என்று சிங்கமும் குறைத்தால், அது அசிங்கமாகிவிடும், சிங்கத்திற்கு..!

நீ என்னை புரிந்து கொள்ளவில்லை என்று நான் கவலைப்பட மாட்டேன் என்னை புரிந்து கொள்ளும் அளவிற்கு அவர்கள் இன்னும் தகுதி பெறவில்லை என்று போய்க் கொண்டே இருப்பேன்.

பையன் ஆணவமாக இருந்தால் கம்பீரன் என்று கூப்பிடும் இந்த உலகம் பெண்கள் கம்பீரமாக நடந்துகொண்டால்,அவர்களை திமிர் பிடித்தவள் என்று கூப்பிடுவார்கள். அப்படிக் கூப்பிட்டாலும் நாங்கள் இப்படித் தான் இருப்போம்.

Attitude Quotes in Tamil

நீ எனக்கு மரியாதை கொடுப்பதும் கொடுக்காமல் இருப்பதும் உன் விருப்பம். ஆனால், நீ எனக்கு மரியாதை கொடுக்காமல் நான் உனக்கு கொடுக்க மாட்டேன் என்பதை மட்டும் நீ தெரிந்து கொள்.

இந்த உலகமே உனக்கு எதிராக நின்றால், நீ அப்படியே திரும்பி நில். இப்போது இந்த உலகமே உனக்கு பின்னால் நிற்கும்.

எனக்குப் பின்னாடி பேசுகின்றவர்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். ஏனெனில் அவர்களுக்கு முன்னாடி போறது நான்.

தனிமையில் இருக்கிறாய் என்பதை நினைத்து தளர்ந்து விடாதே.. உனது பலம் தனிமைதான்..!

Attitude Quotes in Tamil

சிங்கத்துக்கு எப்போதுமே எந்த இடத்திலும் தனி இடம் உண்டு. அதுபோல் தான் நானும்.

நண்பர் முன் அன்பைக் காட்டு, முதியவர் முன் பணிவைக் காட்டு. எதிரியின் முன் துணிவைக் காட்டு, துரோகியின் முன் வாழ்ந்து காட்டு..!

நீ வலிமையாக இருக்க வேண்டுமென்றால் துண்டுகளை தனியாக எதிர்கொள்ள கற்றுக்கொள்.

உருவத்துக்குத் தான் முக்கியத்துவம் என்றால் யானை தான் காட்டுக்கு ராஜா ஆகியிருக்கும்.

Attitude Quotes in Tamil

கோபத்தால் சாதிப்பதை விட பொறுமையால் ஒருவன் அதிகம் சாதிக்கிறான்.

ஒரு சிங்கம் ஆடுகளின் கருத்துகளைப் பற்றி பொருட்படுத்துவதே இல்லை.

முடிந்தது அவன் கதை என்று நினைக்கும் போது போராடி எழுந்து நில். பின் எதிரியும் எழுந்து நிற்பான், கை கட்டி பணிந்து நிற்பான், உன் முன்..!

அடுத்தவனைப் போல் இருக்க ஆசைப் படாதே உனக்கென்று தனித்துவம் உண்டு. நாயைப் பார்த்து சிங்கமும் குறைத்தால் அவமானம்தான் மிஞ்சும்..!

Attitude Quotes in Tamil

ஆயிரம் பேரைக் கூட எதிர்த்து நில். ஆனால், எப்போதும் ஒருவரைக்கூட எதிர்பார்க்காதே. முடியுமானால் பிறரை விட அறிவாளியாய் இரு ஆனால் அதையும் அவர்களிடம் கூறாதே.

கம்பீரம் என்பது உண்மைக்கு உரித்தானது. அதை போலிகளிடம் எதிர்பார்க்க முடியாது. சிங்கத்திற்கு உரித்தானதை நாய்களிடம் எதிர்பார்க்காதே..!

தனித்து விடப்படும் போது தான் நம் பலமும் பலவீனமும் நமக்குத் தெரியவரும்.

இவ்வுலகில் அனைவரும் உன்னை திரும்பிப் பார்க்க வேண்டும் என்றால், நீ யாரையும் திரும்பி பார்க்காதே.

சிரிக்க வைத்து ரசித்தவன் நான். ஆனால், உலகம் அழவைத்து ரசிக்கின்றது என்னை. நல்லவனாக இரு தவறில்லை. ஆனால், நல்லவன் என்று காட்டிக் கொள்ளாதே...!

Attitude Quotes in Tamil

நீ உன்னை நம்பினால் இந்த உலகம் உந்தன் காலடியில்.

நீ யாராக இருந்தாலும் உனக்கென ஒரு தன்மானம் திமிரு எப்பொழுதும் வைத்துக்கொள். யாருக்காகவும் எதற்காகவும் அதை எப்போதும் இழக்காதே. அதற்குப் பெயர்தான் சுயமரியாதை..!

ஒரு சிலருக்கு நாம் முக்கியமாக இருக்கலாம். ஆனால், பலருக்கு அவர்கள் காரியம் முடியும் வரை தான். அதன் பின் நமக்கு காரியமே நடந்தாலும், அவர்களுக்கு கவலையில்லை.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
Sudden Halt in Pongal Package Distribution at Erode East Ration Shops..!