Apj Abdul Kalam Quotes In Tamil- 'கலாம்' ஐயாவுக்கு ஒரு 'சலாம்'..!

Apj Abdul Kalam Quotes In Tamil- கலாம் ஐயாவுக்கு ஒரு சலாம்..!
X

Apj Abdul Kalam Quotes In Tamil-கலாம் பொன்மொழிகள் (கோப்பு படம்)

பிரதமர் வாஜ்பாய் அவர்களின் வேண்டுகோளை ஏற்று 2002 ஆம் ஆண்டு இந்திய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

Apj Abdul Kalam Quotes In Tamil

“இளைஞர்களே கனவு காணுங்கள், இந்திய எதிர்காலம் உங்கள் கைகளில் தான் உள்ளது” என்கிற இந்த உத்வேக வரியை நம் நாட்டு இளைஞர்களுக்கு வழங்கியவர் மறைந்த ஏவுகணைத் தொழில் நுட்ப விஞ்ஞானியும், இந்திய நாட்டின் முன்னாள் ஜனாதிபதியுமான ஏ.பி.ஜே. அப்துல் கலாம். இன்றளவும் இந்திய இளைஞர்களின் ஆதர்ச நாயகனாக விளங்கும் அவர் கூறிய பொன்மொழிகளை பார்க்கலாமா?


கலாம் கூறிய அர்த்தமுள்ள பொன்மொழிகள்

நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதும் மண்டியிடுவது இல்லை.

வாய்ப்புக்காக காத்திருக்காதே உனக்கான வாய்ப்பை நீயே ஏற்படுத்திக்கொள்

உன் கை ரேகையை பார்த்து எதிர்காலத்தை நிர்ணயத்துவிடாதே ஏனென்றால் கையே இல்லாதவனுக்கு கூட எதிர்காலம் உண்டு

உங்கள் குறிக்கோளில் வெற்றியடைய வேண்டுமானால் உங்கள் இலக்கில் இம்மியும் பிசகாமல் குறிவைத்து அதே சிந்தனையுடன் செயல்படவேண்டும்.


Apj Abdul Kalam Quotes In Tamil

கனவுகளை எண்ணங்களாக மாற்றுங்கள்.எண்ணங்களை செயல்களாக மாற்றுங்கள்

வெற்றி பெற வேண்டும் என்னற்ற பதற்றம் இல்லம் இருப்பதுதான் வெற்றி பெறுவதற்கு சிறந்த வழி

நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதுமே மண்டி இடுவது இல்லை

வெற்றி என்பது உன் நிழல் போல, நீ வெளிச்சத்தை நோக்கி நடக்கும் போது அது உன்னுடன் வரும்

Apj Abdul Kalam Quotes In Tamil


கனவு காணுங்கள். ஆனால், கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது இல்லை. உன்னை தூங்க விடாமல் பண்ணுவது எதுவோ அதுவே கனவு.

நமது பிறப்பு சம்பவமாக இருக்கலாம் ஆனால் இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும்.

ஆண்டவன் சோதிப்பது எல்லோரையும் அல்ல உன்னை போன்ற சாதிக்க துடிக்கும் புத்திசாலிகளை மட்டும்

கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே. அது உன்னை கொன்று விடும்.கண்ணை திறந்து பார். நீ அதை வென்று விடலாம்


Apj Abdul Kalam Quotes In Tamil

பிரச்னைகளை சகித்துக் கொள்ளாமல் எதிர்கொள்ளத் துணியுங்கள். பயந்தால் வரலாறு படைக்க முடியாது

அதிகம் பயணிக்காத பாதைகளில் செல்லும் துணிவை வளர்த்தெடுங்கள். அதுதான் உண்மையான தலைமைப்பண்பு

மரியாதை இல்லாத இடத்தில் சற்று ஒதுங்கியே இரு. நாளை உன் மதிப்பு தெரிந்த பின், அவர்களே உன்னை தேடி வருவார்கள். அதுவரை சற்று பொறுமையாய் இரு.

ஒரு முறை வந்தால் கனவு. இருமுறை வந்தால் ஆசை. பலமுறை வந்தால் அது இலட்சியம்.


Apj Abdul Kalam Quotes In Tamil

வெற்றி பெறவேண்டும் என்ற பதற்றம் இல்லாமல் இருப்பதுதான் வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி

நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை. நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும் உன் உழைப்பால் நீ எண்ணியது உன்னை வந்து சேரும். நீ நீயாக இரு.

ஒரு மனிதனை ஜெயிப்பதை விட அவன் மனதை கொள்ளை கொள்வதே சிறந்தது

சிந்திக்க தெரிந்தவனுக்கு ஆலோசனை தேவை இல்லை. துன்பங்களை சந்திக்க தெரிந்தவனுக்கு வாழ்க்கையில் தோல்வியே இல்லை


Apj Abdul Kalam Quotes In Tamil

முதல் வெற்றிக்குப் பிறகு ஓய்வெடுத்துவிடாதே. அடுத்தமுறை தோல்வியுற்றால், உன் முதல் வெற்றி அதிர்ஷ்டத்தால்தான் கிடைத்தது என்பார்கள்.

உன்னால் மாற்ற முடியாததை அப்படியே ஏற்றுக் கொள்ள பழகிக் கொள்.

நீ கடைசியாய் செய்த தவறு தான் இப்போது உன்னுடைய முதன்மையான ஆசான்.

உலகம் உன்னை அறிவதைவிட, உன்னை உலகிற்கு அறிமுகம் செய்துகொள்


Apj Abdul Kalam Quotes In Tamil

நீங்கள் சூரியனைப் போல பிரகாசிக்க வேண்டுமானால், முதலில் சூரியனைப் போல எரிய வேண்டும். ஒருநாள் நிச்சயம் விடியும். அது உன்னால் மட்டும் முடியும்.

நீ செல்லும் பாதைகளில் தடைகள் ஏதும் இல்லை என்றால் அது நீ செல்லும் பாதை அல்ல, யாரோ ஒருவர் சென்ற பாதை.

இந்த‌ உலகத்தில் பிறந்த‌ அனைவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த‌ பக்கத்தை இந்த‌ உலகையே படிக்க‌ வைப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது.

உலகிற்கு ஏற்றாற் போல் தன்னை மாற்றிக்கொள்கின்றனர் பலர்; ஆனால் தனக்கு ஏற்றாற் போல், உலகையே மாற்றிக்கொள்கின்றனர் சிலர்.


Apj Abdul Kalam Quotes In Tamil

அற்ப சந்தோஷங்களுக்காக ஓடுவதைவிட உயர்ந்த இலட்சியங்களுக்காகப் பாடுபடுவது சாலச் சிறந்தது

என்னால் முடியும், நம்மால் முடியும், இந்தியாவால் முடியும் இந்த வாசகத்தை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.

புதிய விஷயங்களை படைக்க வேண்டும் என இலட்சியம் உள்ளவர்களுக்கு அவர்களது வேட்கையே ஊக்கமாக அமையும். மற்றவர்களை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணம் தேவையில்லை.

மிக உயர்ந்த லட்சியம், மனிதர்களுக்கான எல்லை என்ற சுவர்களைத் தகர்க்கிறது.


Apj Abdul Kalam Quotes In Tamil

வெற்றி பெற்றவர்களின் கதைகள் உங்களுக்கு வெறும் தகவல்களை மட்டுமே அளிக்கும். தோல்வி அடைந்தவர்களின் கதை தன் வெற்றி பெறுவதற்கான வழிகளை சொல்லும்.

நம் அனைவருக்கும் ஒரே மாதிரி திறமை இல்லாமல் இருக்கலாம் ஆனால் அனைவருக்கும் திறமையை வளர்த்துக் கொள்ள ஒரே மாதிரி வாய்ப்புகள் உள்ளன.

எங்கே இதயத்தில் அறம் ஒழுக்கம் இருக்கிறதோ, அங்கே செயல்பாட்டில் அழகு இருக்கும். எங்கே செயல்பாட்டில் அழகு இருக்கிறதோ, அங்கே வீட்டில் ஒத்திசைவு இருக்கும். எங்கே வீட்டில் ஒத்திசைவு இருக்கிறதோ, அங்கே தேசத்தில் ஒழுங்கு இருக்கும். எப்போது தேசத்தில் ஒழுங்கு இருக்கிறதோ, அப்போது உலகில் அமைதி நிலவும்.


Apj Abdul Kalam Quotes In Tamil

வாரிசு அடிப்படையில் ஒருவர் தலைமை இடத்துக்கு வரலாம். ஆனால் தலைவருக்கான தகுதிகளை ஒருவர் சொந்தமாக மட்டுமே உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

வெற்றி என்பது உன் நிழல் போல. நீ அதைத் தேடிப்போக வேண்டியதில்லை. நீ வெளிச்சத்தை நோக்கி நடக்கும்போது, அது உன்னுடன் வரும்.

நமது பிறப்பு ஓர் சம்பவமாக இருக்கலாம், ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்.

தவறான காரியங்களை ஒரு போதும் செய்யக்கூடாது. ஒரு இலக்கை நோக்கி செல்ல பலவழிகள் இருந்தாலும் நேர்மையான வழியே மிகச்சிறந்த வழி என்பதுடன் அது மட்டுமே வழியாக இருக்க வேண்டும்.


Apj Abdul Kalam Quotes In Tamil

ஒவ்வொரு இந்தியனுக்குள்ளும் உறைந்து கிடக்கும் அக்னிக் குஞ்சுகள் சிறகு முளைத்து பறக்கட்டும்! இந்திய புண்ணியத் திருநாட்டின் புகழ் ஜூவாலை விண்ணிலும் பேரொளி வீசி பரவட்டும்!

தெளிவான கண்ணோட்டம் இல்லாத தடுமாற்றம்; திசை தெரியாத குழப்பம். இதுதான் இந்திய இளைஞர்களை வாட்டும் மிகப் பெரிய பிரச்னை.

முடியாது என்று நீ சொல்வதையெல்லாம் யாரோ ஒருவன் எங்கோ செய்துகொண்டிருக்கிறான்.

நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதுமே மண்டியிடுவது இல்லை.

தன்னம்பிக்கையும் தளராத உழைப்பும்தான் தோல்வி எனும் நோயைக் கொல்வதற்கான மருந்துகள்.

Tags

Next Story