Annai Teresa Quotes Tamil-மனிதம் வளர்த்த மாணிக்கம், அன்னை தெரசா..!

Annai Teresa Quotes Tamil-மனிதம் வளர்த்த மாணிக்கம், அன்னை தெரசா..!
X

annai teresa quotes tamil-அன்னை தெரசா பொன்மொழிகள் (கோப்பு படம்)

சக மனிதர்களாலேயே புறக்கணிக்கப்பட்ட ஆன்மாக்களுக்கு அடைக்கலம் தந்தவர் அன்னை தெரசா ஆவார்.பலரும் வெறுத்து ஒதுக்கிய தொழுநோயாளிகளுக்கு அன்பையும் ஆதரவையும் தந்தவர்.

Annai Teresa Quotes Tamil

இந்த உலகை மாற்ற நமக்கு அதிகம் தேவைப்படுவது பணமோ தொழில்நுட்பமோ, இராணுவ பலமோ, விஞ்ஞான அதிசயமோ அல்ல

அன்பும் நேசமும் பாசமும் கருணையும் தான் என இத்தனைக்கும் ஒட்டுமொத்த இலக்கணமாக வாழ்ந்து கோடிக்கணக்கான உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் அன்பின் ஒட்டுமொத்த உருவம் அன்னை தெரசா ஆவார்.

Annai Teresa Quotes Tamil

இவரது வாழ்க்கை உலகில் பலபேருக்கு முன்னுதாரணமாகும். அநாதைகளுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் தாயாக இருந்து தனது வாழ்வை மகா உன்னதமாக மாற்றியவர் அன்னை தெரசா ஆவார்.

அவரது பொன்மொழிகளை பார்ப்போம் வாங்க.

ஆழமான அன்பிற்கு

அளவுகோல் கிடையாது.

அன்பின் சின்னம் புன்னகை

ஒன்றே.. மற்றவர்களுக்கு

அன்பினை பரிசாக வழங்க

நினைத்தால் புன்னகையை

கொடுங்கள்.

கருவுற்று இருந்தால்

ஒரு குழந்தைக்கு

தாய் ஆகலாம்.. அதுவே

கருணை உள்ளம் இருந்தால்

உலகிற்கே தாய் ஆகலாம்.

Annai Teresa Quotes Tamil

அனைவரும் இறக்க தான்

பிறந்தோம் அதுவரை

அனைவரோடும் இரக்கத்தோடு

இருப்போம்.

வெறுப்பது யாராக இருந்தாலும்

நேசிப்பது நீங்களாக இருங்கள்.

சிறிய விஷயத்திலும்

உண்மையாக இருங்கள்.

ஏனெனில் அதில் தான்

உங்கள் வலிமை

இருக்கின்றது.

மற்றவர்களுக்காக வாழாத

வாழ்க்கை வாழ்க்கையே

இல்லை.

Annai Teresa Quotes Tamil

கடவுளுக்கு அருகில்

செல்ல நினைத்தால்

வழிபாடு செய்யுங்கள்..

ஆனால் நீங்கள் மற்றவர்களுக்கு

உதவினால் அந்த கடவுளே

உங்களிடம் இறங்கி வருவார்.

உங்களால் நூறு பேருக்கு

உணவளிக்க முடியவில்லை

என்றால் பரவாயில்லை

ஒருவருக்காவது உணவளியுங்கள்.

மற்றவர்களை எடை

போடுவதில் காலத்தை

வீணாக்காதீர்கள். ஏனெனில்

அவர்களை நேசிப்பதற்கு

உங்களுக்கு நேரமில்லாமல்

போகும்.

நான் கடவுளின் கையில்

இருக்கும் சிறிய பேனா..

என் கடமை உலகிற்கு அன்பு

கடிதங்கள் எழுதுவது.

Annai Teresa Quotes Tamil

நீங்கள் மற்றவர்களின்

குணங்கள் மற்றும்

நடத்தைகளை கவனிக்க

தொடங்கிவிட்டால் மற்றவர்களிடத்து

அன்பு செலுத்துவதற்கு நேரம்

இல்லாமல் போய்விடும்.

இரண்டு கரங்களையும்

கூப்பி இறைவனை

வணங்குவதை விட..

ஒரு கரத்தால் உதவி செய்..

உன்னை இறைவனாக

இரண்டு கரங்களையும்

கூப்பி வணங்குவார்கள்

Annai Teresa Quotes Tamil

கண்ணுக்கு எதிரே

நிற்கும் மனிதரை மதிக்க

தெரியாவிட்டால்.. கண்ணுக்கு

தெரியாத இறைவனை

மதித்து எந்த பயனும்

கிடைக்க போவதில்லை.

ஒருவரை ஒருவர் பார்க்கும்

போது புன்னகைத்துக்

கொள்ளுங்கள்.. அன்பின்

தொடக்கமே புன்னகை தான்.

ஒரு சிறிய புன்னகை

எத்தகைய நல்ல மாற்றங்களை

கொண்டு வரும் என்று

நமக்கு தெரியாது.

உணவு பசியை

போக்குவதை விட கடினமானது

அன்பின் பசியைப் போக்குவது.

ஒருவருக்கு பணத்தை

கொடுப்பதுடன் திருப்தி

அடைந்து விடாதீர்கள்..

அன்பைக் கொடுத்து பழகுங்கள்.

Annai Teresa Quotes Tamil

அனைவரிடமும் அன்பாய்

இருங்கள் அவர்கள் உங்களை

மகிழ்ச்சியாக வைத்து

கொள்வார்கள்.

தனிமையும் நிராகரிப்பும் தான்

மிகக் கொடுமையான வறுமை.

நாம் ஒவ்வொருவரும்

ஒருவொருக்கொருவர்

சொந்தமானவர்கள் என்பதை

மறப்பதே அமைதியின்மைக்கு

காரணம்.

ஒருவருக்கு எவ்வளவு

கொடுக்கின்றோம் என்பது

முக்கியம் இல்லை..

எந்த மனநிலையோடு

கொடுக்கின்றோம் என்பதே

முக்கியம்.

வட்டியுடன் வாங்க

வேண்டுமானால் அன்பை

மட்டும் கடனாக கொடுங்கள்..

அன்பு மட்டுமே

அதிக வட்டியுடன் உங்களுக்கு

திரும்ப கிடைக்கும்.

Annai Teresa Quotes Tamil

அன்பிற்கு தடை என்றால்

அந்த வேலியை தாண்டவே

விரும்புகிறேன்.

காயத்தை குணமாக்குவது

மற்றும் உதவுவது

இவ்விரண்டையும்

உன் குடும்பத்தாரரிடம்

இருந்து தொடங்கு.

வீழ்ந்தவருக்கு உதவுவதே

உலகில் மிக அன்பான

செயல்.

Annai Teresa Quotes Tamil

பிறரின் தவறை நீங்கள்

மன்னித்தால் இறைவன்

உங்கள் தவறுகளை மன்னிப்பார்

பகைமையை வளர்க்காதீர்கள்

மன்னியுங்கள்.!

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு