45 வயதுக்கு மேற்பட்டவரா நீங்கள்? விமான ஆணையத்தில் வேலை இருக்கு!

45 வயதுக்கு மேற்பட்டவரா நீங்கள்?  விமான ஆணையத்தில் வேலை இருக்கு!
X

கோப்பு படம் 

பி.இ., பி.டெக், எம்.பி.ஏ., முடித்து, 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, விமான ஆணையத்தில் உள்ள காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

இதன் விவரம் வருமாறு

Air India Assets Holding Limited எனப்படும், AIAHL விமான ஆணையத்தில் காலியாக உள்ள மேலாளர், அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : Air India Assets Holding Limited (AIAHL) மேலாண்மை பொதுத்துறை நிறுவனம்

மொத்த காலிப் பணியிடங்கள் : 10

பணி : Manager, Officer

கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் BE, B.Tech, CA சட்டத்துறையில் முதுநிலை பட்டம், MBA, டிப்ளமோ இவற்றில் பணிக்கேற்ப தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், அந்தந்த பணிக்கேற்ப 5 முதல் 10 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 45 முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.60,000 முதல் அதிகபட்சம் ரூ.1,50,000 வரை.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடங்களுக்கு, 07.12.2021 தேதிக்குள் http://aiaha.in என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு, தங்களது விண்ணப்ப படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம் : ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் Pre-Employment Medical Examination மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!