டிரைவிங் லைசென்ஸ் வாங்க எதுக்கு 8 போடச் சொல்றாங்க..?? தெரிஞ்சுக்கங்க..!

டிரைவிங் லைசென்ஸ் வாங்க எதுக்கு 8 போடச் சொல்றாங்க..?? தெரிஞ்சுக்கங்க..!
X

8 driving test in tamil-ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு 8 போடுதல் (கோப்பு படம்)

லைசென்ஸ் வாங்க ஆர்டிஓ ஆபீசுக்கு போறீங்களா..? அப்ப இந்த செய்தியை படிச்சுட்டுப் போங்க. உங்களுக்கு யூஸ்புல்லா இருக்கும்.

8 Driving Test in Tamil, 8 Driving Test 2 Wheeler,8 Driving Test 4 Wheeler, Driving License

ஓட்டுநர் உரிமம் எடுப்பதற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு போய் இருக்கீங்களா..? அட ஆமாங்க அதுதான் ஆர்டிஓ ஆபீஸ்னு சொல்லுவோம் இல்லை. தமிழில் சொன்னா உங்களுக்கெல்லாம் தெரியாத அளவுக்கு ஆர்டிஓ ஆபீஸ் பதிவாகிடுச்சி.

சரி..சரி விஷயத்துக்கு வருவோம். தொடக்க காலத்தில் சைக்கிள் ஒட்டினோம். சைக்கிள் ஒட்டியவங்களுக்கு அடுத்த கட்டமா பைக் ஓட்டணும், கார் ஓட்டணுமுன்னு ஆசை வராதா..? என்ன வராதா..? வரும். ஆமாமா..நான் ஒரு ஞான சூனியமுங்க. பைக் ஓட்ட ஆசை வரும். இப்ப சரியாங்க..?

8 Driving Test in Tamil,

அப்பிடி பைக் ஓட்டணும்னா மொதல்ல அதை ஓட்டுவதற்கு கத்துக்கணும். நாம் சைக்கிள் ஓட்டி பழகும்போதே சீமைக்கருவேல முள்ளில் வீழ்ந்த வீரத்தழும்புகள் எல்லாம் இன்னும் நம்ம பட்டெக்ஸ்ல இருக்குதுங்க. பைக்கு பழகணுமினா கொறைஞ்ச பட்ஷமா சைலன்சர் சுட்ட தழும்பு வேணாமாங்க.

இப்பிடியெல்லாம் பைக்கு ஓட்ட பழகிட்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு உங்க பாஷையிலே ஆர்டிஓ ஆபீசுக்குப் போனா...நெஞ்செல்லாம் ஒரே பதற்றமா இருக்கு. அவ்ளோ நல்லாதானே பழகினோம். அப்புறம் ஏன் பயப்படணும்னு பரிட்சை எழுதப்போற மாணவனாட்டம் மனசு பதறுது.

இதில வேற பப்ளிக்ல ஓட்டணும்னா லைசென்ஸ் எடுத்தா மட்டும்தான் பைக்கு ஓட்ட முடியும்னு வேற சொல்லிப்பிட்டாய்ங்க.

8 Driving Test in Tamil,

ஆனால் நாம பொது இடத்தில் வாகனம் ஓட்டணும்னா, அது எந்த வாகனமா இருந்தாலும் சரி.. பைக்கு, காரு, லாரின்னு எதா வேணுன்னாலும் இருக்கலாம். பொது இடத்தில் வாகனம் ஓட்ட, ஓட்டுநர் உரிமம் இருக்கணும். அப்படி ஓட்டுனர் உரிமம் பெற குறிப்பாக 8 போடணும்னு சொல்லுவாங்க.

8 ஏன் போடச் சொல்றாங்க..?

அது எதற்கு 8 போடச் சொல்றாங்க? அதுக்கு பதிலை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

கணிதத்தில் அதாங்க மேத்ஸ்-ல் பல எண்கள் இருக்கு. லைசென்ஸ் எடுக்கும்போது மட்டும் ஏன் 8 போடச் சொல்கிறார்கள் என்ற கேள்வி பலருக்கும் மனதில் தோன்றும்.

ஆனால் இன்னும் சிலர் குறுக்கு வழியில் சென்று 8 போடாமலேயே லைசென்ஸ் வாங்கிடணுமுன்னு முட்டி மோதுறாங்க. அதனால்தான் அடிப்படை விதி தெரியாமல் வீதியில் விழறாங்க. அதனால 8 போடுறது நல்லதுங்க.

8 Driving Test in Tamil,

8 ஐத் தவிர, 1 முதல் 9 வரையிலான எல்லா எண்களுக்கும் தொடக்கமும் முடிவும் கட்டாயம் இருக்கும். அதாவது, எடுத்துக்காட்டாக, எண் 7 ஐ எடுத்துக் கொள்வோம். இது மேலிருந்து தொடங்கி கீழே முடிகிறது. மற்ற எண்களும் அதேபோலத்தான் ஒரு புள்ளியில் தொடங்கி ஒரு புள்ளியில் முடிகிறது.

ஆனால் 8 அப்படி இல்லை. தொடக்கப்புள்ளியும் முடிவுப்புள்ளியும் இல்லாமல் மீண்டும் மீண்டும் சுற்றி வரும். அதனால்தான் எட்டுக்குள்ளே உலகம் இருக்கு தெரிஞ்சுக்கோன்னு நம்ம வைரமுத்து எழுதினாரோ..? எழுத தொடங்கிய புள்ளி தெரியும். ஆனால் முடிவு இல்லை.

எண் 8 என்பது தொடரும் எண் வடிவமாகும்.

ஆர்டிஓ ஆபீஸுக்குப்போனால் ஓட்டுநர் உரிமம் பெறும்போது 8 வடிவத்தில் வாகனத்தை ஓட்ட வேண்டும் என்கிறார்கள். ஆனால் காலை ஊன்றிவிடக்கூடாது. நிதானமாக வலதுபுறம் திரும்பும்போது வலது இண்டிகேட்டர் போட்டு, இடதுபுறம் திரும்பும்போது இடது இண்டிகேட்டர் போட்டு 8ஐயும் முடிக்கணும். காலும் ஊன்றிவிடக்கூடாது. ஊன்றிவிட்டால் அம்புட்டுத்தான் 15 நாட்கள் கழித்து மறுபடியும் போகணும்.

8 Driving Test in Tamil,

அப்படித்தான் கால்களை தரையில் வைக்காமல் 8 வடிவில் வாகனத்தை ஓட்டுகிறோம்.

அதேபோல், 8ன் வடிவத்தில் வாகனத்தை ஓட்டும்போது வலதுபுறம் திரும்புவது, இடதுபுறமாகத் திரும்புவது மற்றும் U-டர்ன் (கொண்டை ஊசி வளைவு ) மூலம் பரந்த வளைவுகளில் கடப்பது போன்ற செயல்கள் சவாலானதாக இருக்கும். ஏற்கனவே படபடப்பில் இருக்கும் நமக்கு எந்த நேரமும் காலை ஊன்றிவிடுவோமா என்ற பதைபதைப்பும் இருக்கும்.

இந்த வளைவுகள் சாலைகளிலும் இருக்கும். எப்படி பார்த்தீர்களா..? நமது கல்வித்திட்டம் வேண்டுமானால் வாழ்க்கைக் கல்வியை கற்றுத்தராமல் இருக்கலாம். ஆனால் நமது சாலை விழிப்புணர்வுக் கல்வி வளைவுகளை வைத்து உங்கள் வாழ்க்கைக்கல்வியை உங்களுக்கு கற்றுத்தருகிறது.

வாகனம் ஓட்டும் போது சாலைகளில் வளைவுகள் இருக்கும்.அந்த வளைவுகளை சாதுர்யமாக கடந்தால் மட்டுமே வாகனம் ஓட்ட லைசென்ஸ் தரப்படுகிறது.

8 Driving Test in Tamil,

நாம் அதை பாதுகாப்பாகவும் சாதுர்யமாகவும் கடந்து செல்ல வேண்டும். அதற்காகத்தான் வாகனங்களை ஓட்டுவதற்கு உரிமத்தைப் பெற 8 ஐப் போடச் சொல்கிறார்கள். நமது நிஜ வாழ்க்கைச் சாலைகளில் இந்த 8 போல பல வளைவுகளை நாம் கடக்க நேரிடுகிறது. இந்த 8 வடிவ சவால்களில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்படுகிறது.

அதுபோல ஓட்டுனர் உரிமம் பெற்று வாகனம் ஓட்டுவது நல்லது. ஓட்டுநர் உரிமம் பெறாமல் பல இளைஞர்கள் இன்று உயிரிழக்கும் துர்பாக்கிய நிலையும் ஏற்படுகிறது. ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கும்போது சாலை விதிகள் கற்றுக்கொடுக்கப்படுகிறது. சாலை ஓரங்களில் எத்தனையோ சிக்னல் பலகைகள் வைக்கப்படுகின்றன. அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு அர்த்தம் உள்ளது. அதை நாம் முறையாக கற்று வாகனங்கள் ஓட்டுவதே பாதுகாப்பானதாக இருக்கும். அது நமக்கு மட்டுமல்ல பிறருக்கும் பாதுகாப்பாக அமையும்.

8 Driving Test in Tamil,

எட்டுக்குள் உலகம்

எட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா..சுப்பையா, வேலய்யா, கந்தையா, சுரேஷ், கனிஷ். இளமதி, சுமித்ரா..இப்படி எல்லாத்துக்கும் சொல்றேங்க...8 போட்டு லைசென்ஸ் வாங்குங்க. 8 என்பது நமக்கானது என்பதை உணர்ந்து, விபத்துகள் இன்றி சாலையில் வாகனத்தை ஓட்ட முறையாக 8-ஐ போட்டு ஓட்டுனர் உரிமம் பெற வேண்டும்.

8 Driving Test in Tamil,

ஓட்டுநர் சோதனையில் 8 இன் விட்டம் என்ன?

இந்திய மோட்டார் வாகன விதிமுறைகளின்படி, '8' டிராக்கின் இறுதி முதல் இறுதி வரை நீளம் 32 அடியாக இருக்க வேண்டும். ஆனால் இந்த வசதியில் அமைக்கப்பட்ட பாதை 45.6 அடி நீளம் கொண்டது. பாதையின் விட்டம் 26 அடி, அது 16 அடியாக இருக்க வேண்டும் என்று விதி கூறுகிறது. மேலும் சவாரி செய்யும் போது ரைடர் தரையில் கால்களை மிதித்தாலும் கணினியால் உணர முடியாது.

ஓட்டுநர் தேர்வில் 8 ஐ சாதுர்யமாக கடப்பது எப்படி ? படிப்படியான வழிகாட்டி

இரு சக்கர வாகனத்தில் 8ஐ கடக்கும் செயல்முறையானது குறிப்பிட்ட "தொழில்நுட்பங்களை" செயல்படுத்துவதால் மட்டும் கடந்துவிடமுடியாது. இது சமநிலை மற்றும் கட்டுப்பாட்டை மட்டுமே சார்ந்துள்ளது. இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது 8 ஐ எடுக்க பின்பற்ற வேண்டிய படிகள் கீழே தரப்பட்டுள்ளன :

படி 1: ஓட்டுநர் சோதனை பாதையை கட்டுப்படுத்தப்பட்ட வேகத்தில் அணுகவும், படிப்படியாக உங்கள் வேகத்தை குறைக்கவும்.

படி 2: உங்கள் முன்னோக்கி வேகத்தை பராமரிக்கும் போது உங்கள் உடல் எடையை திருப்பத்தின் உட்புறத்தை நோக்கி மாற்றிக்கொள்ளவும்.

படி 3: த்ரோட்டிலைக் கட்டுக்குள் வைத்திருக்கும் போது சைக்கிளை மெதுவாக திருப்பும் திசையை நோக்கி சாய்க்கவும்.

8 Driving Test in Tamil,

படி 4: 8 இன் முதல் பகுதியை முடித்தவுடன், உங்கள் எடையை எதிர் பக்கமாக மாற்றும் போது பைக்கை நேராக்கத் தொடங்குங்கள்.

படி 5: த்ரோட்டில் கட்டுப்பாட்டை பராமரிக்கும் போது படிப்படியாக பைக்கை சாதுர்யமாக இரண்டாம் பாதியில் சாய்க்கவும்.

படி 6: 8ஐ வெற்றிகரமாக முடிக்கும் வரை மேலே உள்ள படிகளை மீண்டும் மீண்டும் செய்து பார்க்கவும்.

லைசென்ஸ் வாங்கி வெற்றி பெற வாழ்த்துகிறோம்.

Tags

Next Story
future ai robot technology