gooseberry in tamil-சொல்லிக்கிற மாதிரி வாழணுமா?நெல்லிக்காய் சாப்பிடுங்க..! அல்சர் நோய் பயந்து ஓடும்..!

gooseberry in tamil-நெல்லிக்காய் மிக எளிதாக எல்லோருக்கும் கிடைக்கும் ஒரு சாதாரண கனியாகும். ஆனால், அதில் அடங்கியுள்ள ஆரோக்யம் பெரிதாகும்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
gooseberry in tamil-சொல்லிக்கிற மாதிரி வாழணுமா?நெல்லிக்காய் சாப்பிடுங்க..! அல்சர் நோய் பயந்து ஓடும்..!
X

gooseberry in tamil-நெல்லிக்காயின் பயன்களும் மருத்துவ குணங்களும்.(கோப்பு படம்)

gooseberry in tamil-அதியமான் நெடுமான் அஞ்சி தகடூரை ஆண்ட சங்ககால மன்னர்களுள் ஒருவர். எல்லோருக்கும் உதவும் வள்ளலாக இருந்தவர். அவருக்கு நீண்ட ஆயுளைத் தரவல்ல சிறப்பு வாய்ந்த நெல்லிக்கனி கிடைத்தது. , அரசனாகிய தான் உண்பதை விட அறிவில் சிறந்து விளங்கும், தனது நண்பரான ஒளவையார் உண்பது நாட்டின் முன்னேற்றத்திற்கு நல்லது என எண்ணி அந்த நெல்லிக்கனியை அதியமான் ஒளவையாருக்கு அளித்தான். நெல்லிக்காய் நீண்ட ஆயுளைத்தரக்கூடியது என்பது இதில் இருந்து நாம் புரிந்துகொள்ளலாம்.


மரணம் கூட அஞ்சும்

தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டால் மரணத்தைக் கூட தள்ளிப்போடலாம் என்றும் கூறுவது உண்டு. முடி பிரச்சனைகள், சரும பிரச்னைகள் மட்டுமின்றி, ஆரோக்கியமும் மேம்படும். ஞாபக சக்தி அதிகரிக்கும். நெல்லிக்கனியில் சிறு நெல்லி, பெரு நெல்லி என்று இரண்டு வகை இருக்கிறது இதில் பெருநெல்லி தான் அதிக மருத்துவ குணம் கொண்டது.

gooseberry in tamil

உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் டாக்ஸின்கள் வெளியேற்றப்பட்டு, உடல் எடையைக் குறைக்க உதவும். நெல்லிக்காயில் உள்ள நார்ச்சத்து குடலியக்கத்தை சீராக்கி, மலச்சிக்கல் ஏற்படுவதைத் முற்றிலுமாக தடுக்கும்.

அல்சர்

நெல்லிக்காயில் வைட்டமின் சி, கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் போன்ற ஊட்டச்சத்துகள் அதிகமாக நிறைந்துள்ளன. அல்சர் இருக்கா? கவலையே வேண்டாங்க..தினமும் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிங்க அல்சர் காணாமல் போய்டும். ஆமாங்க அல்சரைக் குணப்படுத்தலாம்.

இதய ஆரோக்கியம்

நெல்லிக்காயில் உள்ள இயற்கை உட்பொருட்கள் இதய தசைகளை வலிமைப்படுத்தி, இரத்த ஓட்டத்தை இதயத்தில் மென்மையாக ஓடச் செய்கிறது. இதனால் இதயத்தின் ஆரோக்யம் மேம்படும். மேலும் இதில் உள்ள இரும்புச்சத்து, இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை தூண்டிவிட்டு, உடலில் தங்கு தடையின்றி இரத்த ஓட்டம் சீராக இருக்கச் செய்யும்.

gooseberry in tamil


கொலஸ்ட்ரால்

நெல்லிக்காயில் உள்ள பெக்டின் என்னும் உட்பொருள், கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைத்து, உடலில் நல்ல கொலஸ்ட்ராலின் அளவை ஊக்குவிக்கும். இயற்கையாகவே இதில் அடங்கி உள்ள வைட்டமின் சி மற்றும் அமினோ அமிலங்கள், உடலில் கொலஸ்ட்ரால் அளவை சீரமைக்கிறது .இதனால் கொலஸ்ட்ரால் பிரச்னைகளைத் தடுத்து சரியான அளவில் பராமரிக்கிறது.

இளமையைப் பேணும்

நெல்லிக்கனிகளை அதிகம் சாப்பிட்டு வருபவர்களுக்கு தோலில் உள்ள செல்கள் புத்துணர்வு பெற்று, இரத்த ஓட்டத்தை நன்கு தூண்டிவிடுகிறது. இதனால் தோலில் சுருக்கங்கங்கள் ஏற்படுவதை தடுத்து, இளமையான தோற்றத்தை நீட்டிக்கச் செய்கிறது. நெல்லிக்காய் முதுமைத் தோற்றத்தைத் தரும் சரும சுருக்கங்கள், முதுமைக் கோடுகள் மற்றும் முதுமைப் புள்ளிகளைக் குறைக்கும். இதில் உள்ள அதிகளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்துப் போராடி, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும். எனவே எளிய வழியில் இளமையைத் தக்க வைக்க நினைத்தால், தினமும் ஒரு நெல்லிக்காயை சாப்பிடும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

அறிவாற்றல் வளர்ச்சி

நெல்லிக்காய் சாறு நரம்பு மற்றும் மூளைக்கு மிகச்சிறந்த டானிக். இதனை ஒருவர் அடிக்கடி உட்கொண்டால், அறிவாற்றல் செயல்பாடு மற்றும் நினைவாற்றல் சக்தி அதிகரிக்கும். இதில் உள்ள வளமான வைட்டமின் சி மற்றும் இதர ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், மூளைக்கு ஊட்டமளித்து ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். எனவே, உங்கள் குழந்தைகளுக்கு மூளையின் சக்தியை அதிகரிக்க நினைத்தால், தினமும் ஒரு நெல்லிக்காயை சாப்பிடக் கொடுங்கள்.

gooseberry in tamil


நோயெதிர்ப்பு மண்டல ஆரோக்கியம்

நெல்லிக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நோயெதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும். இது ப்ரீ-ராடிக்கல்களால் உடலினுள் ஏற்படும் பாதிப்புகளை எதிர்த்துப் போராடும் ஆற்றல்கொண்டது. முக்கியமாக நெல்லிக்காய் இரத்த வெள்ளையணுக்களின் உற்பத்தியை அதிகரித்து, உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களில் இருந்து நல்ல பாதுகாப்பை வழங்கும் சக்திகொண்டது. எனவே அடிக்கடி நோய் வாய்ப்படுபவர்கள், தினமும் ஒரு நெல்லிக்காயை சாப்பிட்டு வர, நோய் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பு பெறலாம்.

கண்பார்வை

தோல் வளர்ச்சி மற்றும் தலைமுடி வளர்ச்சிக்கும் நெல்லிக்கனி பெரிதும் உதவக்கூடியதாகும். கண் பார்வை - நெல்லிக்காய் கண்களில் உள்ள செல்களின் இயக்கத்தை மேம்படுத்தும். இதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள், கண்களில் நீர் வடிதல், கண் அரிப்பு போன்றவற்றைத் தடுத்து, பார்வையை கூர்மையாக்கும். ஆகவே பார்வை பிரச்னைகளில் இருந்து விடுபட நினைத்தால் நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வாருங்கள்.

சர்க்கரை நோய்

நெல்லிக்காயில் உள்ள குரோமியம், உடலில் கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்றத்தை சீராக்கி, இன்சுலின் செயல்படத் தூண்டும். இதன் விளைவாக சர்க்கரை நோய்க்கு முக்கிய காரணியான இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும். அதோடு இதில் உள்ள வைட்டமின் சி, கணையத்தின் செயல்பாட்டை மேம்படுத்தி, இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ள உதவும்.

gooseberry in tamil

சிறுநீரக கோளாறுகள்

நெல்லிக்காய் மிகச்சிறப்பான சிறுநீர் பெருக்கி மூலிகையாக கருதப்படுகிறது. ஒருவர் இந்த நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால், அது உடலில் உள்ள நச்சு கழிவுப்பொருட்களை உடலில் இருந்து சிறுநீரின் வழியே வெளியேற்றும். மேலும் இது பாக்டீரியாக்களை அழித்து, சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்றுக்களையும் சரிசெய்யும்.


வாய் ஆரோக்கியம்

உயிர்ச்சத்துக் குறைவால் பல்லில் இரத்தம் வரும். அவ்வாறு இரத்தம் வந்தால், நெல்லிக்கனி சாப்பிட பல்லில் இரத்தம் கசிவது கட்டுப்படுத்தப்படும். நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி, வாயில் உள்ள பாக்டீரியல் தொற்றுக்களை எதிர்த்துப் போராடி, பல் வலி மற்றும் பல் சொத்தையாவதைத் தடுக்கும். மேலும் நெல்லிக்காய் ஈறு நோய்களுடன், வாய் துர்நாற்றத்தையும் தடுக்கும். எனவே, உங்களுக்கு வாயில் பிரச்னைகள் இருந்தால், மலை நெல்லிக்காயை தினமும் ஒன்று சாப்பிட்டு வாருங்கள்.

தலைமுடி வளர்ச்சி

நெல்லிக்காய் பல்வேறு தலைமுடி பிரச்னைகளுக்கான மிகச்சிறந்த மருந்து. எப்போது ஒருவரது உடலில் வைட்டமின் சி குறைவாக உள்ளதோ, அப்போது தான் தலைமுடியில் பிரச்னைகளை சந்திக்க நேரிடும். இத்தகைய வைட்டமின் 'சி' நெல்லிக்காயில் ஏராளமான அளவில் உள்ளது. உங்களுக்கு தலைமுடி பிரச்னை இருந்தால், நெல்லிக்காயை தினமும் ஒன்று சாப்பிடுங்கள். நெல்லிக்காயை அரைத்து பேஸ்ட் செய்து, எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, சொட்டையான இடங்கள் மற்றும் தலைமுடியில் தடவி மசாஜ் செய்து, 1-2 மணிநேரம் ஊற வைக்கவேண்டும். பின்னர் மென்மையான ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலசிவிடலாம்.

gooseberry in tamil

மூட்டு பிரச்னைகள்

நெல்லிக்காயில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் எலும்பு மூட்டு பிரச்னைக்கு நல்ல தீர்வளிக்கும். இது எலும்புகளில் உள்ள வீக்கம் மற்றும் மூட்டு இணைப்புக்களில் உள்ள வலியைத் தடுக்கும். எனவே உங்களுக்கு எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் இருந்தால்,நெல்லிக்காயை அல்லது அதன் சாற்றினை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வாருங்கள்.

சீரான வளர்ச்சி

நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிடுவதால் ஆரோக்கியமான வளர்சிதை மாற்றம் ஏற்பட்டு உடல் எடையைக் குறைக்கும் செயல்பாட்டை எப்போதும் சிறப்பாக வைத்துக் கொள்ளும். நெல்லிக்காயில் உள்ள இயற்கைப் பண்புகள், புரோட்டீன் செறிவை மேம்படுத்தி, விரைவில் உடல் எடை குறைய உதவியாக இருக்கும். ஆகவே உடல் எடையைக் குறைக்க முயற்சிப்போர் தினமும் நெல்லிக்காயை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட, நல்ல பலன் கிடைக்கும்.

பித்தக்கற்கள்

பித்தப்பையில் அதிகப்படியான கொலஸ்ட்ரால் சேர்வதன் மூலம், அவை கற்களாக உருவாகின்றன. நெல்லிக்காய் உடலில் கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, அந்த கொலஸ்ட்ராலை பித்த அமிலமாக மாற்றி, பித்தக்கற்கள் உருவாகும் அபாயத்தைக் குறைக்கிறது. இது ரொம்ப எளிமையான வழிங்க. பித்தக்கல் அபாயத்தைத் தடுக்க நினைச்சீங்கன்னா, தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுங்கள்.


அசிடிட்டி பிரச்னைகள்

நெல்லிக்காயில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், வயிற்றில் ஏற்படும் வயிற்று உப்புசம் மற்றும் வாய்வுத் தொல்லை போன்றவற்றில் இருந்து விடுவித்துவிடும். குறிப்பாக அசிடிட்டி பிரச்னை இருப்பவர்கள், நெல்லிக்காய் அல்லது அதன் சாற்றினை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட, அசிடிட்டி குணமாகும்.

gooseberry in tamil

சரும ஆரோக்யம்

நெல்லிக்காய் சருமத்திற்கு ஊட்டமளித்து, பல்வேறு வகையான சரும பிரச்சனைகளில் இருந்து விடுவிக்கும். இதில் உள்ள வைட்டமின் 'சி' மற்றும் இதர சத்துகள், சருமத்திற்கு நல்ல நிறத்தையும் வழங்கும். எனவே, சரும பிரச்னைகள் வராமல் இருக்க வேண்டுமானால், தினமும் ஒரு நெல்லிக்காயை சாப்பிடுங்கள். இதனால் சருமம் ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருக்கும்.

ஊறுகாய்,ஜாம்

நெல்லிக்காயில் ஊறுகாய் செய்து பக்குவப்படுத்தி உண்ணலாம். தேனில் ஊறவைத்து சாப்பிடலாம். ஜாம் செய்து சப்பாத்தி, தோசையில் பூசி குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

Updated On: 2 Feb 2023 9:42 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
  2. இராஜபாளையம்
    ராஜபாளையம் அருகே, காட்டு யானைகளால் தென்னை மரங்கள் சேதம்
  3. வணிகம்
    Bitcoin Crosses $40000 Mark-எகிறிய கிரிப்டோ சந்தை..! காரணம் என்ன..?
  4. லைஃப்ஸ்டைல்
    Milk Meaning In Tamil பிறப்பு முதல் இறப்பு வரை பயன்படும் பொருள்...
  5. கந்தர்வக்கோட்டை
    கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் மாற்றுத் திறனாளி தினத்தை முன்னிட்டு...
  6. திருவள்ளூர்
    புழல் ஏரியில் 3000 கனஅடி தண்ணீர் திறப்பு..! வெள்ள அபாய எச்சரிக்கை..!
  7. தொழில்நுட்பம்
    2024 Instagram Trend Talk-இன்ஸ்டாகிராமை கட்டமைக்கும் இந்திய 'ஜென்...
  8. கல்வி
    Canada Student Visa Latest News-கனடாவில் படிக்க இந்திய மாணவர்கள்...
  9. சினிமா
    அர்ச்சனா அப்செட்...! காண்டேத்திய பூர்ணிமா..!
  10. தஞ்சாவூர்
    தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 31,169 நபர்களுக்கு தேசிய அடையாள...