விவசாயி சின்னத்திற்கு நாம் தமிழர் கட்சி வாக்கு சேகரிப்பு

விவசாயி சின்னத்திற்கு நாம் தமிழர் கட்சி வாக்கு சேகரிப்பு
X
விவசாயி சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பிரசாரம்.

அரியலூர் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் சுகுணா குமார் கீழப்பலூர் பேருந்து நிலையம் மற்றும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் தனித்து நிற்கும் நாம் தமிழர் கட்சியின் அரியலூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிடும் சுகுணா குமார் கடந்த ஒரு வாரமாக கிராமங்கள் தோறும் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். இதில் கீழப்பலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயி சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.

மேலும் அரியலூர் பேருந்து நிலையத்தில் உள்ள பயணிகளிடம் துண்டுப்பிரசுரங்களை வழங்கி தனக்கு வாக்குகள் சேகரித்தார். இதனை அடுத்து அருகில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை பார்த்த முதியவர்கள் பெண்களிடம் தனது தேர்தல் அறிக்கையை துண்டுப்பிரசுரங்களாக வழங்கி விவசாயி சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். இவருடன் நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!