குமாரபாளையம், JKKN மருந்தியல் கல்லூரியில் உலக மலேரியா தினம் அனுசரிப்பு
நிகழ்ச்சியில் பங்கேற்ற JKKN பார்மசி கல்லூரியின் பேராசிரியரும் முதல்வருமான டாக்டர். சம்பத்குமார் மற்றும் பேராசிரியர்கள்.
JKKN காலேஜ் ஆஃப் பார்மசி கல்லூரியில் நேற்று (ஏப்ரல் 25ம் தேதி) உலக மலேரியா தினம் அனுசரிக்கப்பட்டது.
உலகின் கொடிய உயிர்க்கொல்லி நோய்களில் ஒன்றான மலேரியாவை உலகம் முழுவதும் முடிவுக்குக் கொண்டு வருவதற்கு முயற்சிகளை அதிகரிப்பதற்கான நோக்கமாக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
JKKN பார்மசி கல்லூரியின் மருந்தியல்துறை இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. மூன்றாம் செமஸ்டர் B.Pharm முத்துப்பிரியா தலைமையிலான மாணவிகளின் பிரார்த்தனை பாடலுடன் நிகழ்ச்சி துவங்கியது. நிகழ்ச்சியை JKKN பார்மசி கல்லூரியின் பேராசிரியரும் முதல்வருமான டாக்டர். சம்பத்குமார் துவக்கி வைத்து வரவேற்றுப் பேசினார்.
கல்லூரியின் இணைப்பேராசிரியர் ஜெகநாதன் விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு தேனி அரசு மருத்துவக்கல்லூரி தொற்றுநோயியல் நிபுணர் மற்றும் உதவிப் பேராசிரியர் டாக்டர்.ஏ.சக்திவேல், தலைமை விருந்தினராக ஆன்லைன் வாயிலாக கலந்துகொண்டார். அவர் "மலேரியா மற்றும் அதன் தடுப்பு" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
மருந்தியல்துறை பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் டாக்டர்.பாமா நன்றி கூறினார். தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu