JKKN மருந்தியல் கல்லூரியின் சார்பில் உலக பாரம்பரிய தினம் அனுசரிப்பு
உலக பாரம்பரிய நிகழ்ச்சி அனுசரிப்பில் பங்கேற்ற மாணவ,மாணவிகள்.
JKKN மருந்தியல் கல்லூரியில் கடந்த ஏப்ரல் 26ம் தேதி அன்று உலக பாரம்பரிய தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நாள் கலாச்சாரம் மற்றும் பன்முகத்தன்மைக்கான முயற்சிகள் அதிகரிப்பதையும் அதனை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும் நோக்கமாகக் கொண்டு அனுசரிக்கப்படுகிறது. JKKN கல்லூரியின் மருந்தியல் துறை இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
3ம் ஆண்டு பார்ம்.டி மாணவி அஞ்சலி அசோக் -ன் பிரார்த்தனை பாடலுடன் நிகழ்ச்சி துவங்கியது. டாக்டர்.ஆனந்த தங்கதுரை வரவேற்புரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியின் மூல உரையை துணை முதல்வர் டாக்டர்.சண்முகம் சுந்தரம் வழங்கினார்.
3ம் ஆண்டு Pharm.D மாணவிகள் அஞ்சலி அசோக் மற்றும் ஜெயந்தி லலிதா ஆகியோரால் உலக கலாச்சார பாரம்பரிய தினம் மற்றும் தீம் பற்றிய விளக்கக்காட்சியும், உலக பாரம்பரிய தினம் குறித்து 4ம் ஆண்டு Pharm.D மாணவி அபிநயா மற்றும் அனிஷா சாரா அனில் ஆகியோரின் விளக்கக்காட்சியும் இடம் பெற்றன.
அதனைத் தொடர்ந்து, ஈஷா யோகா மையத்தில் பயண அனுபவங்கள் மற்றும் செயல்பாடுகள் கொண்ட காணொளி விளக்கக்காட்சியை 4ம் ஆண்டு மற்றும் 3ம் ஆண்டு பார்ம்.டி மாணவர்கள் தொகுத்து வழங்கினர். பயண அனுபவங்களை ஆசிரியர்களான தேன்மொழி மற்றும் சுப்ரமணி ஆகியோர் மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டனர். மாணவர்களின் பயண அனுபவங்களை மாணவர்கள் ஸ்ரீதர் மற்றும் யோகேஷ் ஆகியோர் பகிர்ந்து கொண்டனர்.
4ம் ஆண்டு பார்ம்.டி மாணவி வினோலா ஸ்ரீம் மிஷ்மா நன்றியுரை வழங்க, மூன்றாம் ஆண்டு பார்ம்.டி மாணவி அர்ச்சனா மற்றும் முகமது ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். நாட்டுப்பண்ணுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu