JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் மகளிர் தின கொண்டாட்டம்

JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் மகளிர் தின கொண்டாட்டம்
X

JKKN செவிலியர் கல்லூரி முதல்வர் டாக்டர். ஜமுனாராணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

குமாரபாளையம், JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினம், கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த ஏப்ரல் 22 ம் தேதி அன்று JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர்.தமிழரசு விழாவைத் தொடங்கி வைத்தார். JKKN செவிலியர் கல்லூரி முதல்வர் டாக்டர். ஜமுனாராணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.

விழாவில் கலந்துகொண்ட மாணவிகளின் ஒரு பகுதியினர்.

தலைமை விருந்தினரான டாக்டர்.ஜமுனாராணி, அனைத்து சிறந்த பெண் ஆளுமைகளையும் பாலின சமத்துவத்தையும் பகிர்ந்து கொண்டார். அவர் தனது உரையில் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதன் அவசியம் மற்றும் முக்கியத்துவம் குறித்தும், நாட்டின் வளர்ச்சியில் பெண்களின் மகத்தான பங்களிப்பு குறித்தும் பேசினார்.

விழாவில் கலந்துகொண்ட மாணவிகள்.



இந்நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்களும், ஆசிரியர்களும் உற்சாகத்துடனும், ஆர்வத்துடனும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil