என்ன படிக்கலாம்? வாங்க பி.எஸ்.சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கலாம்
பி.எஸ்.சி கம்ப்யயூட்டர் சயின்ஸ்
மீண்டும் இந்த சந்திப்பில் கம்ப்யூட்டர் மற்றும் IT Stream துறை சார்ந்த படிப்புகளை பார்ப்போம். இன்றைய காலத்தில் படிப்பிற்கான துறையை தேர்வு செய்வதில் குழப்பம் இல்லாமல் இருக்க வேண்டும். அதில் குறிப்பாக 3 விஷயத்தை மனதில் கொள்ளவேண்டும்.
1. சம்பாதிக்கவேண்டும் என்ற துடிப்பு
2. சவாலாக சாதித்து வளர்ச்சி அடையும் இலக்கு
3. தொழில்நுட்பத்தில் ஆழ்ந்த ஆர்வம்
இந்த மூன்றும் இருந்துவிட்டால் கண்ணை மூடிக்கொண்டு B.Sc., கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கலாம்.பொதுவாகவே கம்ப்யூட்டர்துறை ஒரு நல்ல தொழில் வாய்ப்பை வழங்கும்என்பது பலரும் அறிந்த தே. கம்ப்யூட்டர் கல்வியை திறமையோடு படிப்பவர்களுக்கு நல்ல சம்பளம் கிடைக்கும். திறமையின் அடிப்படையில் சம்பளம் மாறுபடும். படித்து முடித்தவுடன் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரையிலும் பெறலாம். நல்ல அனுபவம் பெற்ற பின் ரூ.25 ஆயிரம்முதல் ரூ.50 ஆயிரம் வரை சம்பளம் பெறலாம். இது அவரவர்திமைகளுக்கேற்ப மாறுபடும்.திறமையுடன் கம்ப்யூட்டர் பட்டம் பெற்றவர்களுக்கு எல்லாநிறுவனங்களிலும் நல்ல டிமாண்ட் உள்ளது. தமிழகத்தில் 2019ம் ஆண்டுமுதல் 2029ம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகளில் மற்ற எல்லாதுறைகளையும் விட கம்ப்யூட்டர் துறையில் 15 சதவீதம் வேலை வாய்ப்புஅதிகரிக்கும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இவைகளில் குறிப்பாக கம்ப்யூட்டர் துறையில் செயற்கை நுண்ணறிவு(ArtificialIntelligence). இது இன்னும் விரிவாக வளர்ச்சிபெறும் சாத்தியக்கூறுகள் உள்ளன.அறிவியல் சார்ந்த படிப்புகளில் கம்ப்யூட்டரோடு தொடர்புடைய சிறந்த பிரிவுஎன்றே கூறலாம்.
கம்ப்யூட்டர் படித்தால் வேலை வாய்ப்புகள் எப்படி?
1. சாஃப்ட்வேர் டெவலப்பர் ( Software Developer)
2. டேட்டாபேஸ் அட்மினிஸ்ட்ரேட்டர் (Database Administrator)
3. கம்ப்யூட்டர் சிஸ்டம்ஸ் அனலிஸ்ட் (Computer Systems Analyst)
4. கம்ப்யூட்டர் நெட்வொர்க் ஆர்க்கிடெக்ட் ( Computer Network Architect)
5. வெப் டெவலப்பர் ( Web Developer)
6. இன்ஃபர்மேஷன் செக்யூரிட்டி அனலிஸ்ட் ( Information Security Analyst)
7. கம்ப்யூட்டர் மற்றும் இன்ஃபர்மேஷன் ரீசர்ச் சயின்டிஸ்ட் ( Computer and
Information Research Scientist) என்று இன்னும் பல வேலை வாய்ப்புகள்
விரிந்து கிடக்கின்றன உங்கள் முயற்சி, அர்ப்பணிப்பு, தனித்திறமை, போன்றவை உங்களுக்கானஇடம் எது என்பதை நிர்ணயிக்கும். படிங்க திறமையோடு. தனித்திறமைய வளர்த்துக்கொள்ளுங்கள். ஓகே..இன்னொரு படிப்புடன் நாளை மீட் பண்ணுவோம். ஓகே..
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu