குமாரபாளையம், JKKN மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி

குமாரபாளையம், JKKN மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு  தடுப்பூசி
X

JKKN மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ,மாணவிகளுக்கு Corbevax தடுப்பூசி போடப்பட்டது.

குமாரபாளையம் JKKN மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ,மாணவிகளுக்கு Corbevax தடுப்பூசி போடப்பட்டது.

கொரோனா வைரசுக்கு எதிராக கோர்பெவேக்ஸ் (Corbevax) தடுப்பூசி 90 சதவீதத்திற்கும் அதிகமான செயல் திறனையும், டெல்டா வகை வைரசின் தொற்றுகளைத் தடுப்பதில் 80 சதவீதத்திற்கும் அதிகமான செயல்திறனை கொண்டிருப்பதாலும், ஓமைக்ரான் தொற்றுக்கு எதிராக இத்தடுப்பூசி அதிக செயல் திறனுடன் எதிர்க்கும் ஆற்றல் உள்ளதாக மருத்துவ ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.

அதன் அடிப்படையில், குமாரபாளையம், JKKN மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில், 12 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வண்ணம், இப்பள்ளியில் பயிலும் சுமார் 120 குழந்தைகளுக்கு 13ம் தேதி புதன்கிழமை அன்று பள்ளிவளாகத்தில், Corbevax தடுப்பூசி போடப்பட்டது.

முன்னதாக, இத்தடுப்பூசி முகாமினை பள்ளியின் தாளாளர் ஸ்ரீமதி.செந்தாமரை துவக்கி வைத்தார். இயக்குனர் ஓம் சரவணா முன்னிலை வகித்தார்.மேலும், பள்ளிமுதல்வர், துணை முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil