உயிர்மெய் எழுத்து, தமிழ் மொழியின் சார்பெழுத்து வகை..! மொழி அறிவோம் வாருங்கள்..!

Tamil Uyirmei Eluthukkal Words
X

Tamil Uyirmei Eluthukkal Words

Tamil Uyirmei Eluthukkal Words-தமிழ் பேசும் பலரின் தாய்மொழி ஆகும். தமிழ், உலகில் உள்ள முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும்.

Tamil Uyirmei Eluthukkal Words-உலகில் தொன்மையான மொழி தமிழ். பல இலக்கண,இலக்கியங்களை வளமாக கொண்ட மொழி தமிழ். தமிழில் உயிர் எழுத்துக்கள் 12. அதோடு ஆயுத எழுத்து 1 என 13ம் உள்ளன. உயிர் எழுத்துக்கள் அடிப்படையிலேயே சொற்கள் பிறக்கின்றன. ஆங்கிலத்தில் உயிர் எழுத்துக்கள் 5 அதாவது A,E.I, O, U எழுத்துக்கள் மட்டுமே. உயிர் எழுத்துக்கள் பற்றாக்குறையால்தான் சில வார்த்தைகளில் உச்சரிப்பு குறைபாடுகள் ஏற்படுகின்றன.

உதாரணமாக - BUT என்ற சொல்லை 'பட்' என்று உச்சரிக்கிறோம். ஆனால் அதே PUT என்ற சொல்லை 'புட்' என்று உச்சரிக்கிறோம். ஆக, 'ப' என்ற உச்சரிப்புக்கு 'பு' என்ற உச்சரிப்புக்கும் ஒரே உயிரெழுத்தான U பயன்படுகிறது.

ஆனால், தமிழில் அ,உ என தனித்தனி உயிர் எழுத்துக்கள் உள்ளன. அதனால் உச்சரிப்புக் குறைபாடு ஏற்படாது.

தமிழில் உயிர் எழுத்துக்கள் 12, மெய் எழுத்துக்கள் 18, உயிர் மெய் எழுத்துக்கள் 216 (12×18=216), ஆய்த எழுத்து 1, என ஆக மொத்தம் 247 எழுத்துக்கள் உள்ளன.

உயிர் என்பது உயிரினங்கள் உயிரோடு இருப்பதற்கான சான்று. அதேபோல உடல் இல்லாமல் உயிர் மட்டுமே தனித்து இருக்க முடியாது. உடலும் உயிரும் இணைந்தால் மட்டுமே உயிரினம் முழுமைபெறும். அது போலவே மொழியில் உயிர் எழுத்துக்கள், மெய் எழுத்துக்கள் என வரையறுக்கப்பட்டுள்ளன.

தமிழில் உயிர் எழுத்துக்கள் 12 மற்றும் மெய் எழுத்துக்கள் 18. இதில் உயிர் மெய் எவ்வாறு உருவாகிறது என்பதைப் பார்ப்போம்.

அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஒள என 12 எழுத்துக்கள். மெய் எழுத்துக்களில் ஒரு எழுத்தை உதாரணமாக எடுத்துக்கொண்டு உயிர்மெய் எழுத்து எவ்வாறு உருவாகிறது என்பதைப்பார்ப்போம். மெய் எழுதிட்டு 'க்' எடுத்துக்கொள்வோம்.

க் +அ = க

க் +ஆ = கா

க் +இ = கி

க் +ஈ = கீ

க் +உ = கு

க் +ஊ = கூ

க் +எ = கெ

க் +ஏ = கே

க் +ஐ = கை

க் +ஒ = கொ

க் +ஓ = கோ

க் +ஒள =கௌ

இப்படி 18 மெய் எழுத்துக்களிலும் உருவாக்கி மொழி அறிவை வளர்த்துக்கொள்ளலாம்.

உயிர்மெய் குறில்

மொத்தமுள்ள 216 உயிர்மெய் எழுத்துகளில் அ, இ, உ, எ மற்றும் ஒ ஆகிய ஐந்து குறில் உயிரெழுத்துகளுடன் மெய்யெழுத்து சேர்வதால் பிறக்கும் 18 × 5 = 90 எழுத்துகள் குறில் உயிர்மெய் எழுத்துகள் ஆகும்.

உதாரணம்:

க் + அ = கொ

ச் + இ = சி

த் + உ = து

ம் + எ = மெ

ப் + ஒ = பொ

உயிர்மெய் நெடில்

மொத்தமுள்ள 216 உயிர்மெய் எழுத்துகளில் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ மற்றும் ஔ ஆகிய ஏழு நெடில் உயிரெழுத்துகளுடன் மெய்யெழுத்து சேர்வதால் பிறக்கும் 18 × 7 = 126 எழுத்துகள் நெடில் உயிர்மெய் எழுத்துகள் ஆகும்.

உதாரணம்:

க் + ஆ = கா

ச் + ஈ = சீ

த் + ஊ = தூ

ம் + ஏ = மே

ப் + ஐ = பை

ந் + ஓ = நோ

ஞ் + ஔ = ஞௌ


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
Spam Call வந்துட்டே இருக்கா.....?  அதுக்குதா ஒரு புதிய தொழில்நுட்பம் ஏர்டெல் நெட்வொர்க் கொண்டுவந்துருக்கா...?