JKKN கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு இளங்கலை வகுப்பு துவக்க விழா..!
விழாவில் சிறப்புரை ஆற்றும் JKKN கல்வி நிறுவனங்களின் தலைவர் ஸ்ரீமதி செந்தாமரை.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம்,JKKN கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த இளங்கலை முதலாமாண்டு வகுப்பு துவக்கவிழாவில் கல்லூரியின் டீன் முனைவர். பரமேஸ்வரி வரவேற்புரை வழங்கி, மாணவர்கள் தங்கள் லட்சியத்திற்கான பாதைகளை வகுத்துக்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இவ்விழாவை JKKN கல்வி நிறுவனங்களின் தலைவர் ஸ்ரீமதி செந்தாமரை, குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து, சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது, 'மாணவ, மாணவிகள் தற்போதுள்ள சூழ்நிலைக்கு ஏற்ப தங்களது தனித்திறன்களையும் மற்றும் தொழில்நுட்ப அறிவியல் திறன்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு JKKN கலை மற்றும் அறிவியல் கல்லூரி உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.இந்த வாய்ப்பினை மாணவர்கள் பயன்படுத்தி தங்களது வாழ்கையில் சிறந்து விளங்க எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.' இவ்வாறு அவர் பேசினார்.
அதனை தொடர்ந்து தமிழ்த்துறை தலைவர் குமார் பேசுகையில், மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கான பாதையாய் இக்கல்லூரி அமையும். அதை மாணவர்கள் முறையாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்றார்.
கல்லூரியின் சிறப்பு அம்சங்களையும், தங்களின் கல்லூரி அனுபவம் குறித்தும் மூன்றாம் ஆண்டு பி.எஸ்சி., கணினி அறிவியல் துறை மாணவன் புகழேந்தி மற்றும் பி.பி.ஏ., இரண்டாம் ஆண்டு மாணவன் முத்துராசன் ஆகியோர் பகிர்ந்துகொண்டு முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த விழாவில் சுமார் 350க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக தமிழ்த்துறை தலைவர் குமார் நன்றியுரை கூற, நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu