ugadi festival celebration-JKKN ஸ்ரீசக்திமயில் செவிலியர் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியில் தெலுங்கு வருட பிறப்பு கொண்டாட்டம்..!
சிறப்பு விருந்தினரை கௌரவிக்கும் கல்லூரி முதல்வர்.
ugadi festival celebration-நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், JKKN ஸ்ரீசக்திமயில் செவிலியர் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியில் இன்று (29ம் தேதி) தெலுங்கு வருட பிறப்பு கொண்டாடப்பட்டது.
பிரார்த்தனை பாடலுடன் கொண்டாட்டத்தின் நிகழ்வுகள் தொடங்கின. இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் டாகடர். ஜமுனாராணி வரவேற்புரையாற்றினார். அதைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர், சிங்கம்பட்டி, அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நாகேந்திரன் சிறப்புரையாற்றினார்.
அவர் பேசும்போது,பண்டிகைகள் எவ்வாறு வேற்றுமையில் ஒற்றுமை காண வைக்கிறது, கலாசார பரிமாற்றங்கள் மாநிலங்களுக்கிடையே எவ்வாறு ஒற்றுமையை நிலை நிறுத்துகிறது, கலாசார, பண்பாட்டு பழக்க வழக்கங்கள் அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்ப்பதின் முக்கியத்துவம் போன்ற கருத்துகளை வலியுறுத்திப் பேசினார்.
கல்லூரியில் 3ம் ஆண்டு பி.எஸ்சி., நர்ஸிங் பயிலும் மாணவி பிரிதிஷா உகாதி பண்டிகை குறித்து சிறப்புரையாற்றினார். அதைத் தொடர்ந்து மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
ugadi festival celebration
தெலுங்கு புத்தாண்டு விழா
தெலுங்கு புத்தாண்டு என்பது நாட்டில் தெலுங்கு பேசும் மக்களால் கொண்டாடப்படும் ஒரு சிறப்பான விழாவாகும். இந்த புத்தாண்டு பண்டிகை அன்று எந்த ஒரு செயலையும் மேற்கொள்வதற்கு மிகவும் உகந்த நேரமாக, நாளாக கருதப்படுகிறது. யுகாதி என்பது சமஸ்கிருத வார்த்தையான யுகாதி என்பதிலிருந்து வந்தது; யுக் என்றால் சகாப்தம், ஆதி என்றால் ஆரம்பம் என்று அர்த்தம்.
கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான உகாதி, சைத்ரா மாதத்தின் முதல் நாளாகக் கருதப்படும் சைத்ர சுத்த பிரதிபதா அன்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த பண்டிகை வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது. உகாதி, யுதகி, சம்வத்சராதி அல்லது விஷு 22 மார்ச் 2023 புதன்கிழமை அன்று அனுசரிக்கப்பட்டது.ugadi festival celebration
உகாதி என்பது முக்கியமாக ஆந்திரா, கர்நாடகா மற்றும் தெலுங்கானாவில் முதல் நாளில் கொண்டாடப்படும் ஒரு முக்கிய கோடை விழா ஆகும்.உகாதி என்பது இந்துக்கள் மத்தியில் மிகுந்த ஆடம்பரத்துடனும் ஆரவாரத்துடனும் கொண்டாடப்படும் புகழ்பெற்ற பண்டிகைகளில் ஒன்றாகும். தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டாக உகாதி கொண்டாடப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu