நாளை பிளஸ்2 தேர்வு : Instanews செய்தி தளம் மாணவர்கள் வெற்றிக்கு வாழ்த்துகிறது
தேர்வு எழுதும் மாணவிகள் (மாதிரி படம்)
நாளை பிளஸ் 2 தேர்வு நடக்கிறது. மாணவர்கள் மனதில் ஒருவித தயக்கமும்,படபடப்பும் இருக்கும். அதனால் அந்த படபடப்பில் ஹால் டிக்கட்டை மறந்து விடாதீர்கள். தேவையான எழுது பொருட்களை எடுத்துச் செல்லுங்கள்.
முன்னதாக செல்லுங்கள் :
தேர்வுக்கு ஒரு மணிநேரம் அல்லது அரைமணி நேரம் முன்னதாகவே சென்றுவிடுங்கள். சில மாணவர்கள் கிராமத்தில் இருந்து வருவீர்கள். முடிந்தவரை முதல் பஸ்ஸிலேயே செல்லுங்கள். அடுத்த பஸ்சை நம்ப வேண்டாம். உங்கள் தேர்வு எண்ணை சரியாக பார்த்து அமருங்கள். மனதை நிதானப்படுத்திக்கொள்ளுங்கள். வினாத்தாள் தந்தவுடன் ஒரு 5 நிமிடம் வினாத்தாளில் உள்ள வினாக்களை ஒரு முறை பாருங்கள். தெரிந்த வினாக்கள் அதிகம் இருக்கும். உங்களுக்கு நம்பிக்கை வரும்.
எந்த வினாவுக்கு விடை எழுதுகிறீர்களோ அந்த எண்னை மறக்காமல் குறிப்பிடுங்கள். தெரிந்த விடைகளை வேகமாக முடித்துவிட்டு ஓரளவு தெரியும் என்று நீங்கள் நினைக்கும் விடைகளை கொஞ்சம் சிந்தித்து எழுதுங்கள். நேரம் முடிவதற்கு 10 நிமிடங்கள் முன்னதாக எழுதிய விடைகளை ஒரு மீள்பார்வை செய்யுங்கள்.
மதிப்பெண் அறிவுக்கான அளவுகோல் அல்ல :
மனம் ஒன்றே எல்லாவற்றிற்கும் காரணம். மனதை ஒருமுகப்படுத்துவது ஒரு வகை தியானம். அதில் வெற்றிபெற்றுவிட்டால் நீங்கள் சாதனையாளர் தான். இன்னொன்றை மனதில் வையுங்கள். மதிப்பெண் மாணவர்களின் அறிவை அளவிடும் அளவுகோல் அல்ல. அதனால், மதிப்பெண் குறித்து நீங்கள் கவலைப்படத் தேவையில்லை.
மனப்பாடம் செய்வது மென்று சாப்பிடாத உணவைப்போன்றது. அது வாந்தியாக வெளிவரும். ஆனால் புரிந்து படிப்பது நன்றாக மென்று உண்ட உணவு. எளிதில் ஜீரணமாகும். நீங்கள் எதை விரும்புகிறீர்கள் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.
தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ளுங்கள். வெற்றி என்பது ஒரு சம்பவம். தோல்வி அனுபவப்பாடம். இது நான் சொல்லல கைஸ், நம்ம கலாம் ஐயா சொன்னதுதான். சிறப்பாக தேர்வு எழுதி வெற்றி பெற Instanews செய்தி தளம் வாழ்த்துகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu