JKKN கலை,அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு TNPSC தேர்வுகள் பயிற்சி
விழிப்புணர்வு பயிற்சி வழங்கும் சிறப்பு விருந்தினர்.
நாமக்கல் மாவட்டம், குமரபாளையம் JKKN கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு TNPSC குரூப் தேர்வுகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி 7ம் தேதி அன்று JKKN கல்வி நிறுவன வளாகத்தில் உள்ள செந்துர்ராஜா அரங்கில் நடைபெற்றது.
கல்லூரியின் CAO ராஜேந்திரன் வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் DEAN Dr. பரமேஸ்வரி நிகழ்ச்சிக்கு தலைமையேற்று, தலைமை உரை வழங்கினார். கல்லூரி முதல்வர்(பொறுப்பு) Dr. சீங்கநாயகி சிறப்புரையாற்றினர். சிறப்பு விருந்தினர்களாக ETS Academy -ல் இருந்து Technial Head பிரபு, ராஜ்குமார், கார்த்திக் மற்றும் புவனேஸ்வரி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியில் பிரபு மற்றும் ராஜ்குமார் ஆகியோர் TNPSC தேர்வுக்கு மாணவர்கள் எப்படி ஆவது? எந்த மாதிரியான வேலைக்கு எப்படி தயாராக வேண்டும்? விண்ணப்பிக்கும் முறைகள், தற்போதைய போட்டி சூழல்களில் திறமையாக TNPSC தேர்வுக்கு எப்படி தயார் செய்ய வேண்டும் போன்ற விபரங்களை மாணவ,மாணவிகளுக்கு கூறினர்.
மேலும் கார்த்திக் மற்றும் புவனேஸ்வரி ஆகியோர் UPSC, IBPS, RRB போன்ற தேர்வுகள், அதற்கு தயார்படுத்தும் முறைகள் பற்றிய விளக்கங்களை மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர். நிகழ்ச்சியின் நிறைவாக ஆங்கிலத்துறையைச் சேர்ந்த ரம்யா நன்றி கூறினார். இந்நிகழ்வு தேசிய கீதத்தோடு நிறைவுற்றது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu