க்யூட் தேர்வு: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு..!

க்யூட் தேர்வு: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு..!
X

க்யூட் மாணவர்கள் (கோப்பு படம்)

மத்திய பல்கலைகளில் சேரும் க்யூட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் ஏப்ரல் 5-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை ஏற்று அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வில் (க்யூட்) தேர்ச்சி பெறவேண்டும். இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

அதன்படி அடுத்த கல்வியாண்டில் (2024-25) இளநிலை படிப்புகளுக்கான க்யூட் நுழைவுத் தேர்வு மே 15 முதல் 31-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த பிப்ரவரி 27-ல் தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. தற்போது பல்வேறு தரப்பின்கோரிக்கைகளை ஏற்று விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து விருப்பமுள்ளவர்கள் /exams.nta.ac.in/CUET-UG/ என்ற இணையதளம் வழியாக ஏப்ரல் 5-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதைத் தொடர்ந்து விண்ணப்பங்களில் ஏப்ரல் 6, 7-ம் தேதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம். ஏதேனும் சிரமம் இருந்தால் 011-40759000 என்ற தொலைபேசி எண்கள் அல்லது cuet-ug@nta.ac.in எனும் மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொள்ளலாம்.

கூடுதல் விவரங்களுக்கு.. இதுகுறித்த கூடுதல் விவரங்களை /www.nta.ac.in/ என்ற வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. க்யூட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் 2-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story