Tamil Stories for Kids-குழந்தைகளுக்கு பிடித்த சிறுகதைகள்..! படீங்க..!
tamil stories for kids-குழந்தைகளுக்கான கதைகள் (கோப்பு படம்)
Tamil Stories for Kids
கதை என்றால் குழந்தைகளுக்குப்பிடிக்கும். தாத்தா பாட்டில் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு தாத்தாவும் பாட்டியும் பல நீதிக்கதைகளைக் கூறி குழந்தைகளுக்கு நல்ல ஒழுக்கத்தைக் கற்றுக்கொடுப்பார்கள். ஆனால், இன்று எல்லாம் தனிக்குடித்தனம் நடத்துவதே சுதந்திர வாழ்க்கை என்று ஆகிவிட்டது. அதனால் குழந்தைகளிடம் பண்பு, பணிவு போன்ற அடிப்படை ஒழுக்கம் இல்லாமல் வளர்கிறார்கள்.
Tamil Stories for Kids
இந்த பதிவில் குழந்தைகளுக்கு 2 சிறுகதைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
சொல்படி கேட்காத கழுதை
ஒரு ஊரில் விவசாயி ஒருவர் இருந்தார். அவருக்கு பென்னி என்கிற கழுதை ஒன்று இருந்தது.
அந்தப் பென்னி ஒருபோதும் விவசாயி பேச்சை கேட்காது. அவர் அதனுடைய நல்லதுக்கு என்று சொன்னாலும் அது அவர் பேச்சுக்கு மதிப்பு கொடுக்காது.
ஒரு நாள் விவசாயி தன் வேலை விஷயமாக மலை உச்சிக்கு செல்ல வேண்டியிருந்தது. அவர் தன்னுடன் பென்னியை அழைத்துக்கொண்டு சென்றார். மேலே மலை உச்சிக்கு சென்ற பிறகு பென்னி விவசாயிடம் சொன்னது, “நான் இங்கு ஏறி வர எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா? ஆனால் கீழே செல்வது மிகவும் எளிதாகத் தான் இருக்கும்,” என்று சொன்னது.
Tamil Stories for Kids
அவர்கள் இருவரும் தங்கள் வேலையை முடித்துவிட்டு கீழே திரும்பி செல்லும்போது அவர்கள் பாதை மிகவும் பள்ளமாக இருந்தது. அப்போது அந்த விவசாயி சொன்னார்,”இங்கு இருந்து செல்லாமல் வேறு ஏதாவது வழியாக செல்லலாம்” என்று. ஆனால் பென்னி அவர் பேச்சைக் கேட்காமல் “இந்த பாதை பார்க்க தான் பள்ளமாக இருக்கிறது, ஆனால் இந்த வழியாக செல்ல எளிதாகத்தான் இருக்கும்” என்றது.
ஆனால் விவசாயி சொன்னார், “இல்லை நான் இந்த வழியாக வரப்போவதில்லை நிச்சயமாக கீழே நிலை தடுமாறி விழ நேரிடும், எனவே வேறு வழியாக செல்லலாம்” என்றார்.
அவர் பேச்சை கேட்காமல் அது சொன்னது, “இங்கு பச்சைப்பசேலாக இருக்கிறது. எனவே நான் இங்கிருந்து கீழே குதிக்க போகிறேன்” என்றது. விவசாயி சொன்னார், “நான் வேறு வழியாக செல்கிறேன், நீ உன் விருப்பப்படி செய்” என்றார்.
Tamil Stories for Kids
விவசாயி வேறு வழியாக பயணிக்க ஆரம்பித்தார். அந்த பென்னி மேல் இருந்து கீழே குதித்தது. கீழே ஒரு வைக்கோல் கூட்டம் இருந்தது, நல்லவேளையாக அதில் விழுந்ததால் உயிருக்கு எந்த ஆபத்தும் வரவில்லை. ஆனால் உடல் முழுவதும் பலமாக அடிபட்டது.
அப்போதுதான் அது உணர்ந்தது, “முதலாளி எது செய்தாலும் அது என் நல்லதுக்காக தான் இருக்கும். நான் தான் ஒருபோதும் அவர் பேச்சைக் கேட்காமல் நடந்துகொண்டேன்”.
........................................................................
முயல்களும் தவளைகளும்
ஒரு காட்டில் முயல் கூட்டம் ஒன்று வாழ்ந்து வந்தது. அந்த முயல்கள் பச்சை பசேல் என இருந்த அந்த காட்டில் கிடைத்த உணவுகளை எல்லாம் உண்டு சந்தோஷமாக வாழ்ந்து வந்தன.
அவர்களுக்கு அங்கு சுலபமாக சாப்பிட உணவு தினமும் கிடைத்துக் கொண்டிருந்தது. திடீரென்று கோடைகாலம் வந்தது, கோடை கால வெப்பம் அதிகமாக இருந்ததால் அங்கே பச்சை பசேல் என இருந்த புற்கள் எல்லாம் கருகி, பாலைவனம் போல் தோற்றமளித்தன.
இந்த முயல்களுக்கு சாப்பிட உணவு எதுவும் கிடைக்காமல் மிகவும் அவதிப்பட்டு கொண்டு இருந்தன. அங்கே வேட்டை நாய்கள் இந்த முயல்களை அங்கேயும் இங்கேயும் பதுங்கி வேட்டையாட காத்திருந்தன.
Tamil Stories for Kids
அந்த வேட்டை நாய்களைக் கண்டு இந்த முயல்கள் பொந்துக்குள்ளே ஒளிந்து கொண்டு, வெளியே வரவும் முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தன. உணவு இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டன.
“எவ்வளவு நாள் தான் இப்படியே பொந்துக்குள் ஒளிந்து இருப்பது நாம் ஏதாவது செய்ய வேண்டும்”, என்று எல்லாம் முயல்களும் கூடி பேசிக்கொண்டு இருந்தன.
அப்போது ஒரு முயல் சொன்னது, “கடவுள் நம்மை பலவீனமாக படைத்து விட்டார். எல்லா விலங்குகளும் ஏதாவது பிரச்சனை வந்தால் தங்களை காப்பாற்றிக்கொள்ளும் அளவிற்கு பலம் உடையதாக இருக்கின்றன.
ஆனால், நாம் என்ன ஒரு பிரச்சனை வந்தாலும் நம்மை காப்பாற்றிக் கொள்ள முடியாமல் பலவீனமாக இருக்கிறோம். கடவுள் ஏன் நம்மை இப்படி படைத்து விட்டார்?” என்று குறை கூறிக்கொண்டே இருந்தது.
அப்போது மற்றொரு முயல் சொன்னது, “என்னால் இதற்கு மேல் இதை பொறுத்துக் கொள்ள முடியாது. பசியினாலும் இந்த வேட்டை நாய்களை பார்த்தும் பயந்து ஒதுங்கி வாழ்வதைவிட சாவதே மேல்.
Tamil Stories for Kids
நான் ஏதாவது ஒரு நதியில் சென்று விழுந்து விடுகிறேன்” என்று சொன்னது. அப்போது மற்றொரு முயல் சொன்னது, “நாம் அனைவரும் எது செய்தாலும் ஒன்றாக செய்ய வேண்டும். வாழ்ந்தால் ஒன்றாக வாழ்வோம், இல்லையா எல்லோரும் சேர்ந்து நதியில் விழுந்து விடுவோம்” என்று நதியை நோக்கி புறப்பட்டு சென்றனர்.
அந்த முயல்கள் எல்லாம் ஒரு நதி கரையை சென்று அடைந்தனர். அங்கே சில தவளைகள் நதிக்கரையில் இருந்தது. இந்த தவளைகள் எல்லாம் முயல்களை பார்த்து பயத்தில் ஒன்றன்பின் ஒன்றாக நதியில் குதித்தன.
இதைப் பார்த்த முயல் கூட்டம் ஆச்சரியமாக நின்றது. “இந்தத் தவளைகள் நம்மை பார்த்த பயந்து நீருக்குள் குதிக்கின்றன.
நாம் நாம்தான் இந்த உலகத்திலேயே பலவீனமானவர்கள் என்று எண்ணினோம். நாம்தான் அனைவரையும் பார்த்து அஞ்சுகிறோம் என்று பேசிக்கொண்டோம்.
Tamil Stories for Kids
ஆனால் நம்மையும் பார்த்து சிலர் அஞ்சுகின்றனர். இந்த தவளைகளுக்கு நம்மை பார்த்தால் பயமாக இருக்கிறது போல” என்று தங்களுக்குள் பேசிக்கொண்டு இருந்தனர்.
அப்போது ஒரு முயல் சொன்னது, “நாம் இந்த பிரச்சனையில் இருந்து தப்பித்துக் கொள்ளவும் நம்மை பாதுகாத்துக் கொள்ளவும் நிச்சயமாக ஏதாவது ஒரு வழி இருக்கும். நாம் அந்த வழி என்ன என்று கண்டுபிடிப்போம்.
இந்த நதியில் விழுந்து நம் வாழ்வை முடித்துக் கொள்வதை விட என்ன பிரச்சனை வந்தாலும் எதிர்கொள்வதே மேல்” என்று கூறிக் கொண்டு உணவு தேடி வேறு இடத்திற்கு திரும்பின.
நீதி : வாழ்க்கையில் என்ன பிரச்சனை வந்தாலும் அதை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் எந்த தவறான முடிவும் எடுக்க கூடாது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu