சிந்திக்கத் தூண்டும் சிறுகதைகள்..! படிச்சி பாருங்க..!
Kadhaikal Tamil
Kadhaikal Tamil-சிறுகதை என்பது பெரிய கதைகளாக இல்லாமல் குறைந்த பாத்திரங்களுடன் விவரிக்கப்படுவதாகும். கற்பனைக்காதாபாத்திரங்கள் மூலமாக ஏதாவது ஒரு கருத்தை வலியுறுத்தும் விதமாகவும் படிப்பதற்கு ரசனையாக இருக்கும் வகையிலும் இது எழுதப்படுகிறது.
சிறுகதைகளை குறுங்கதை, சிறுகதை, நீண்ட சிறுகதை என்று கூட சொல்லலாம். கருங்கதை என்பது சிறுவர்களுக்கு அறிவுப்பூர்வமாக சிந்திக்கும் வகையில் பண்பாடு, பழக்க வழக்கங்கள் போன்றவைகளை வலியுறுத்தி எழுதப்படுவதாகும். சாதாரண சிறுகதைகள் சமூக சீர்திருத்தங்களை வலியுறுத்தி எழுதப்படுவதாகும். தமிழ் மொழியில் சிறுகதை எழுத்தாளர்கள் நிறையப்பேர் உள்ளனர்.
இங்கு சிறுவர்களுக்காக 4 சிறுகதைகள் தரப்பட்டுள்ளன. வாசித்து மகிழுங்கள்.
கிணற்றை மட்டுமே விற்றேன்
ஒரு நாள், ஒரு விவசாயி தனது விவசாய நிலத்துக்கு நீர் ஆதாரத்தைத் தேடிக்கொண்டிருந்தபோது, அவரது நிலத்துக்கு அருகே இருந்த அவரது பக்கத்து வீட்டுக்காரரிடம் கிணற்றை விலைக்கு வாங்கினார். ஆனால் பக்கத்து வீட்டுக்காரர் தந்திரமாக அந்த விவசாயியை ஏமாற்ற திட்டமிட்டார். அடுத்த நாள், விவசாயி விலைக்கு வாங்கிய தனது கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்க வந்தபோது, பக்கத்து வீட்டுக்காரர் தண்ணீர் எடுக்க அனுமதிக்க மறுத்தார்.
ஏன் என்று விவசாயி கேட்டதற்கு, பக்கத்து வீட்டுக்காரர், "நான் உங்களுக்கு கிணற்றை மட்டுமே விற்றேன். தண்ணீரை அல்ல" என்று பதிலளித்துவிட்டு சென்றுவிட்டார். இதில் மனமுடைந்த விவசாயி, மன்னனிடம் நியாயம் கேட்கச் சென்றார். நடந்ததை விளக்கமாக மன்னனிடம் கூறினார்.
பேரரசர் தனது அமைச்சர்களில் புத்திசாலியான அமைச்சர் பீர்பாலை அழைத்தார். பீர்பால் உடனே கிணறு உள்ள இடத்துக்குச் சென்றார். அங்கு பக்கத்து வீட்டுக்காரரைப் பார்த்து, "விவசாயியை ஏன் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்க அனுமதிக்கவில்லை? கிணற்றை விவசாயிக்கு விற்றுவிட்டாயா?"
பக்கத்து வீட்டுக்காரர் கூறும்போது, "பீர்பால், நான் அவருக்கு கிணற்றை மட்டுமே விவசாயிக்கு விற்றேன். ஆனால், அதில் உள்ள தண்ணீரை அல்ல. கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்க அவருக்கு உரிமை இல்லை.
பீர்பால் பக்கத்து வீட்டுக்காரரின் தந்திரத்தை உணர்ந்தவராக, "இதோ பார், நீ கிணற்றை விற்றதால், விவசாயியின் கிணற்றில் தண்ணீர் வைக்க உனக்கு உரிமை இல்லை. உனது தண்ணீரை நீ விவசாயிக்கு சொந்தமான கிணற்றில் வைத்திருப்பதால் வாடகையை செலுத்து. அல்லது உடனடியாக தண்ணீர் முழுவதையும் வெளியே எடுத்துவிட்டு கிணற்றை விவசாயியிடம் ஒப்படைக்கவேண்டும்.' என்றார்.
தனது திட்டம் தோல்வியடைந்ததை உணர்ந்த பக்கத்து வீட்டுக்காரர் மன்னிப்பு கேட்டுவிட்டு வீட்டிற்கு சென்றார். விவசாயி பீர்பாலுக்கு நன்றி கூறினார்.
நீதி: ஏமாற்றினால் எதுவும் கிடைக்காது. ஏமாற்றினால், விரைவில் அதற்கான பலனை அனுபவிக்க வேண்டியிருக்கும்.
.............................................................................................................
கோபம் குறைத்த ஆணி
எதற்கெடுத்தாலும் அதிக கோபம் கொள்ளும் சிறுவன் ஒருவன் இருந்தான். ஒரு நாள், அவனது தந்தை அவனிடம் ஒரு பையில் ஆணிகளைக் கொடுத்து, ஒவ்வொரு முறையும் அவன் பொறுமை இழக்கும்போது, வேலியின் பின்புறத்தில் ஒரு ஆணியை அடிக்க வேண்டும் என்று கூறினார்.
சிறுவன் தன் தந்தையின் அறிவுரைகளை பின்பற்றினான். முதல் நாளே, வேலியில் 37 ஆணிகளை அடித்தான். அடுத்த பல வாரங்களில், கோபம் வரும் ஒவ்வொரு முறையும் அவன் வேலியில் ஒரு ஆணியை அடிக்கச் சென்றான். நாள் செல்ல செல்ல அவனது கோபம் குறையத் தொடங்கியது. வேலியில் அடிக்கப்பட்ட ஆணிகளின் எண்ணிக்கையும் குறைய ஆரம்பித்தது. இறுதியாக, சிறுவன் தேவையில்லாமல் கோபத்தை இழக்காமல் இருந்தான். இதைப் பற்றி அவன் தனது தந்தையிடம் கூறினான். மேலும் சிறுவனிடம் ஒவ்வொரு நாளும் ஒரு ஆணியை வேலியில் இருந்து பிடுங்க வேண்டும் என்று தந்தை பரிந்துரைத்தார். நாட்கள் கடந்துவிட்டன, சிறுவன் தனது தந்தையிடம் எல்லா ஆணிகளையும் வேலியிலிருந்து அகற்றிவிட்டதாக கூறினான்.
பின்னர் தந்தை தனது மகனின் கையைப் பிடித்து வேலிக்கு அழைத்துச் சென்றார். "நன்றாகச் செய்தாய் மகனே. இப்போது வேலியின் ஓட்டைகளைப் பார். ஒருபோதும் அது மாறாது. பல சமயங்களில் கோபம், பொறுமையின்மை போன்ற தவறான மனப்பான்மையுடன் செயல்களைச் செய்கிறோம். நம் செயல்களின் பலனை உணராமல். உடல் ரீதியாகவோ அல்லது வார்த்தையாகவோ மற்றவர்களை அடிக்கடி காயப்படுத்துகிறோம். ஆனால் நாம் ஏற்படுத்தும் காயங்கள் வேலியில் உள்ள ஓட்டைகள் போல அவர்களின் மனதில் அழியாத காயத்தை ஏற்படுத்திவிடுகிறது. கோபம், பேராசை, பொறாமை போன்ற ஆளுமை குறைபாடுகள் மற்றவர்களுக்கு மட்டுமல்ல. தனக்கும் தீங்கு விளைவிக்கும். எனவே அவற்றை உணர்ந்து செயல்படு என்றார்.
தந்தையின் அறிவுக்கூர்மையை எண்ணி சிறுவன் மகிழ்ச்சியடைந்தான். தந்து கோபத்தை இல்லாமல் செய்த தந்தைக்கு நன்றி கூறினான்.
............................................................................................................
நம் பார்வையை மாற்றுவோம்
ஒரு காலத்தில் ஒரு செல்வந்தன் கடுமையான கண் வலியால் அவதிப்பட்டான். அவர் பல மருத்துவர்களைக் கலந்தாலோசித்து சிகிச்சை செய்துகொள்ள முயற்சித்தார். ஆனால், எதுவும் உதவவில்லை. மேலும் கண் வலி முன்பை விட அதிகமானது. கடைசியாக, இதுபோன்ற பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிப்பதில் வல்லுனர் என்று புகழ் பெற்ற ஒரு துறவியைப் பற்றி அவர் கேள்விப்பட்டார். அவரிடம் சென்று தனக்கு இருக்கும் கண் பிரச்னையைச் சொன்னான்.
துறவி அவரது பிரச்னையைப் புரிந்துகொண்டு, "நீங்கள் பச்சை நிறங்களில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும், உங்கள் கண்கள் வேறு எந்த நிறத்தையும் பார்ப்பதை தவிர்க்க முயற்சி செய்யுங்கள்" என்று கூறினார்.
செல்வந்தன் இந்த வகையான மருத்துவத்தை விசித்திரமாகக் கண்டான். மேலும் அவர் கூறிய அந்த சிகிச்சை முறையை முயற்சிக்க முடிவு செய்தான். செல்வந்தன் ஓவியர்களைக் கூட்டி வரவழைத்து ஏராளமான பச்சை வண்ணப்பூச்சுகளை வாங்கி, துறவி கூறியதை போலவே தனது கண்ணில் விழும் ஒவ்வொரு பொருளும் பச்சை நிறத்தில் இருக்குமாறு அறிவுறுத்தினார்.
சில நாட்களில் அந்த செல்வந்தன் வீட்டில் அவனைச் சுற்றியுள்ள அனைத்தும் பச்சை நிறத்தில் இருந்தன. செல்வந்தன் சுற்றிலும் உள்ள எதுவும் வேறு எந்த நிறத்திலும் வராமல் பார்த்துக்கொண்டான். சில நாட்களுக்குப் பிறகு, துறவி செல்வந்தரைப் பார்க்க வந்தார்.
செல்வந்தரின் வேலைக்காரன் ஒருவன் பச்சை வண்ணப்பூச்சின் வாளியுடன் ஓடி வந்து துறவியின் மீது ஊற்றினான். துறவி வேலைக்காரனிடம் இதற்கான காரணத்தைக் கேட்டார்.
"நீங்கள் காவி வண்ணத்தில் உடை அணிந்துள்ளீர்கள். பச்சை நிறத்தை தவிர எங்கள் எஜமானர் வேறு எந்த நிறத்தையும் பார்க்க அனுமதிக்க முடியாது…" என்று வேலைக்காரன் பதிலளித்தான்.
அதைக் கேட்டு துறவி சிரித்துவிட்டு, "அவர் அணிவதற்கு ஒரு ஜோடி பச்சை நிறக் கண்ணாடியை நீங்கள் வாங்கியிருந்தால் செலவு குறைந்திருக்கும். நீங்கள் இந்த சுவர்களுக்கு பூசிய வண்ணங்களுக்கான அனைத்தையும் சேமித்திருக்கலாம். மேலும் அவரது செல்வத்தில் பெரும் தொகையைச் சேமித்திருக்க முடியும். உங்களால் உலகத்தை பச்சையாக வரைய முடியாது." என்றார் துறவி.
செல்வந்தனுக்கும் அப்போதுதான் புரிந்தது. அடடா பார்வையை மாற்றிக்கொள்ளவேண்டும் என்பதை துறவி புரிய வைத்துவிட்டார் என்று துறவியை தந்து வீட்டில் தங்கவைத்து விருந்தளித்து அனுப்பிவைத்தார்.
பாடம்: உலகை வடிவமைப்பது அல்லது மாற்றுவது என்பது முட்டாள்தனம். முதலில் நம்மை வடிவமைப்போம். நம் பார்வையை மாற்றுவோம், அதன்படி உலகம் தோன்றும்.
..............................................................................................
தவறான நம்பிக்கை
ஒரு மனிதர் யானைகளைக் கடந்து செல்லும்போது, யானையின் முன் காலில் ஒரு சிறிய கயிறினால் கட்டப்பட்டிருப்பதைக் கண்டு குழப்பம் அடைந்தார். சங்கிலிகள் இல்லை. கூண்டுகள் இல்லை. யானைகள் எந்த நேரத்திலும் தங்கள் பிணைப்பிலிருந்து பிரிந்து செல்ல முடியும் என்பது தெளிவாகத் தெரிந்தது. ஆனால் சில காரணங்களால் அவை அவ்வாறு செய்யவில்லை.
அவர் அருகில் ஒரு பயிற்சியாளரைப் பார்த்து ஏன் இந்த விலங்குகள் தப்பிக்க முயற்சிக்கவில்லை அங்கேயே நிற்கின்றன என்று கேட்டார். அதற்கு பயிற்சியாளர் கூறினார், "யானைகள் மிகவும் சிறியவர்களாக இருக்கும்போது, அதே அளவு கயிற்றைப் பயன்படுத்தி அவற்றைக் கட்டுவோம். சிறிய வயதில், தப்பிக்க முயற்சிக்கும் போது அவர்களால் அந்த பிடியில் இருந்து தப்பிக்க முடியாது .
அதேபோல இப்போது வளர்ந்து இருந்தாலும் கூட அவர்களால் தப்பிக்க முடியாது என்று அவர்கள் மனதில் பதிந்து போய்விட்டுள்ளது. எனவே, சிறிய கயிறாக இருந்தபோதும் அவர்கள் ஒருபோதும் விடுபட முயற்சிக்க வில்லை." என்று கூறினார்.
அந்த மனிதர் ஆச்சரியப்பட்டார். இந்த விலங்குகள் எந்த நேரத்திலும் தங்கள் பிணைப்பிலிருந்து விடுபடலாம். ஆனால், அவை தங்களால் முடியாது என்று நம்பிக்கொண்டு இருப்பதால் , அவை இருந்த இடத்திலேயே சிக்கிக்கொண்டுள்ளன.
யானைகளைப் போலவே, நம்மில் எத்தனை பேர் முன்பு ஒருமுறை தவறிவிட்டதை, நம்மால் திரும்ப செய்ய முடியாது என்ற நம்பிக்கையில் அதை தொடராமல் இருந்து வருகிறோம். அது எவ்வளவு தவறானது என்பதை யானையின் கயிற்றின் மூலமாக எரிய முடிகிறது என்று அந்த மனிதர் எண்ணினார்.
பாடம்: தோல்வி என்பது கற்றலின் ஒரு பகுதி. வாழ்க்கையில் போராட்டத்தை கைவிடக்கூடாது. நீங்கள் தோல்வியடைவது தோல்வி அல்ல. உங்கள் வாழ்க்கையை நீங்கள் நகர்த்தும்போது நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu