ஆங்கிலம் படிங்க..! ஆங்கில அறிவு செறிவாக இருந்தால் உலகமே உங்களுக்கானதுதான்..!
கலை, அறிவியல் கல்லூரி மாணவிகள்.
ஜே.கே.கே.நடராஜா கலைமற்றும் அறிவியல் கல்லூரி 1974-ம் ஆண்டு நிறுவப்பட்டது. இக்கல்லூரியானது நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் அரசு உதவிப்பெறும் கல்லூரியாக செயல்பட்டு வருகிறது. சேலம் பொரியார் பல்கலைக்கழகத்துடன் இணைவுப்பெற்றது. ஜே.கே.கே.நடராஜா கல்விக் குழுமங்களில் பல கல்லூரிகளும்,பள்ளிகளும் செயல்பட்டுவருகின்றன. இதில் ஒரு அங்கமாக விளங்கும் ஜே.கே.கே.நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரியானது சுயநிதிப் பிரிவு மற்றும் அரசு உதவி பெறும் பிரிவில் இளநிலை,முதுநிலை மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்டப் படிப்புகளை வழங்கி வருகிறது.
இளங்கலை மற்றும் முதுகலை :
குறிப்பாக, இக்கல்லூரியில் இளங்கலை ஆங்கிலப் பாடப்பிரிவானது மூன்று ஆண்டுகள் படிப்புக் காலத்துடன் 2008ம் ஆண்டு தொடங்கப்பட்டது. முதுகலை ஆங்கில பாடப் பிரிவானது இரண்டுஆண்டு படிப்புக் காலத்துடன் 2002ம் ஆண்டும், ஆய்வியல் நிறைஞர் பட்டப்படிப்பு 2016ம் ஆண்டும் தொடங்கப்பட்டது. "ஆங்கிலம் என்பது அதன் பன்முகத்தன்மைக்கு பெயர் பெற்றமொழி"
வாய்ப்புகள் :
ஆங்கில மொழித்திறனை மேம்படுத்திக் கொள்வதற்கு இப்பாடப்பிரிவு வழிவகுக்கும். இப்பாடப் பிரிவினை விருப்பத்துடன் கற்றால் கட்டுரையாளர்களாகவும், நல்லவாசிப்பாளர்களாகவும் மேம்படலாம். மேலும் இப்பாடமானது ஒரு சுமையாகவும் தெரியாது. ஆளுமைத் திறனை மேம்படுத்திக் கொள்வதற்காக மட்டுமல்லாமல் எதிர் காலத்தில் பதிப்பாசிரி யராகவும்,பத்திரிக்கையாளராகவும்,செய்தி வாசிப்பாளராகவும்,தகவல் தொடர்பாளராகவும்,மொழிப் பெயர்ப்பாளராகவும் பணிபுரிய இப் பாடப்பிறிவு நுழைவு வாயிலாக விளங்குகிறது.
சேர்க்கை :
இக்கல்லூரியில் சேர்க்கையானது தகுதியின் அடிப்படையில் நேரடியாகவும் இணையவழி முறையிலும் நடைபெறுகிறது. இக்கல்லூரயில் தகுதியுடைய பேராசிரியர்கள்,மொழி ஆய்வகம், குளிரூட்டப்பட்ட கருத்தரங்க அரங்கம், இயற்கைச் சார்ந்த சூழலையும் கொண்டு சிறப்பாக இயங்கி வருகிறது.
வேலைவாய்ப்பு :
மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு இக்கல்லூரி பல நிறுவங்களுடன் புரிந்துணர்வு நட்பு கொண்டுள்ளது. அதனால் ஒவ்வொரு ஆண்டும் அந்த நிறுவனங்கள் கேம்பஸ் இன்டர்வியூ நடத்தி திறமையான மாணவர்களை வேலைக்கு எடுத்துக்கொள்கின்றனர். (Infosys, WIPRO, HCL, L &T infotech, IBM, ICICI Bank)
உலகம் முழுவதுமான வாய்ப்பு :
மாணவர்கள் அவரவர்களின் திறமை மற்றும் ஆர்வத்தின் அடிப்படையில் எந்த பிரிவையும் தேர்வு செய்யலாம். ஆனால் ஆங்கிலம் அனைத்து பிரிவுகளையும் இணைக்கும் பாலமாக உள்ளது. ஆங்கிலம் உலகம் முழுவதும் பேசப்படும் ஒரு மொழி. ஆங்கில அறிவு செறிவாக இருந்துவிட்டால் உலகம் முழுவதும் நமக்கான வாய்ப்புகளின் கதவுகள் திறந்தே கிடக்கின்றன.
திறமையுடன் ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்வது மற்றும் இளங்கலை மற்றும் முதுகலை முடித்து அதன்பின்னர் நாம் தேர்வு செய்யும் படிப்பின் அடிப்படையில் உலகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் வேலை வாய்ப்பை தருகின்றன. அதற்கு தனித்திறமை மற்றும் ஆளுமை மிக அவசியம் ஆகும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu