/* */

டெக்ஸ்டைல் மற்றும் பேஷன் டிசைனிங் படிங்க..! கெத்தா வாழுங்க..!

B.Sc., டெக்ஸ்டைல் மற்றும் பேஷன் டிசைனிங் படித்தால் தமிழகத்திலேயே பெரிய சம்பளத்தில் வேலை செய்யலாம்.

HIGHLIGHTS

டெக்ஸ்டைல் மற்றும் பேஷன் டிசைனிங் படிங்க..! கெத்தா வாழுங்க..!
X

டெக்ஸ்டைல் டிசைன் (மாதிரி படம்)

பி.எஸ்சி., துகிலியல் மற்றும் ஆடைவடிவமைப்பு (B.Sc Textile & Fashion Designing) என்பது மூன்று ஆண்டு பட்டப்படிப்பாகும். பிளஸ் 2 வகுப்பில் எந்தப் பாடப்பிரிவைத் தேர்ந்தெடுத்து படித்திருந்தாலும் இந்தப் படிப்பில் சேரலாம். மக்களின் அடிப்படைத் தேவைகள் மூன்று. அதாவது உணவு,உடை,உறைவிடம். அதில் இரண்டாம் இடம் வகிப்பது உடை. எனவே, மக்களிடையே உடைக்கான முக்கியத்துவமும்,ஆர்வமும் நாளுக்குநாள் பெருகிக்கொண்டே வருகிறது. இத்துறையில் உள்ள ஒவ்வொரு செய்முறைப் பாடங்களுமே சுயதொழில் தொடங்குவதற்கான படிகளாகும்.

வேலைவாய்ப்புகள் :

இத்துறையைத் தேர்ந்தெடுத்துப் படிக்கும் போதே சுயதொழில் தொடங்கி வருமானம் ஈட்டலாம். தனியார் மற்றும் அரசுத்துறையிலும் பணியாற்றலாம். பள்ளி,கல்லூரி ஆசிரியர்களாக பணியாற்றலாம். மேலும் பெரிய டெக்ஸ்டைல் நிறுவனங்களில் ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றும் வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன.

மாணவர்கள் கல்லூரியில் படிக்கும்போதே பாடத்திட்டத்தின்படி தங்களுக்குத் தெரிந்த ஆடை வடிவமைப்பு நிறுவனம் தொடங்கலாம். மேலும் ஜவுளி செயலாக்க நிறுவனத்தில் 15 நாட்கள் ((Internship) பயிற்சி எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.

  • காட்சி வணிகர் (Visual Merchandiser)
  • பொட்டிக் (boutique)
  • ஃபேஷன் ஸ்டைலிஸ்ட்(Fashion Stylist)
  • பின்னலாடைதொழில்துறை (Knitting Industry)
  • பிரிண்டிங் ரூடையிங் (ஆடைகளுக்கு வண்ணமிடும் தொழில்துறை)

ஜே.கே.கே.நடராஜா கல்லூரியின் சிறப்பு அம்சங்கள் :

  • அனுபவமிக்க பேராசிரியர்களைக் கொண்டு பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.
  • மாணவர்கள் மிக எளிதில் தங்கள் பாடங்களைப் புரிந்து கொள்ளும் வகையில் ஸ்மார்ட் வகுப்புகள் (Smart Class) நடத்தப்படுகின்றன.
  • நவீனமயமாக்கப்பட்ட இயந்திரங்களைக்கொண்டு பாடத்திட்டத்திற்கு ஏற்ப நான்கு தனித்தனி செய்முறை பயிற்சிக் கூடங்கள் மூலம் பயிற்றுவிக்கப்படுகிறது.
  • இலவச வைஃபை ( WIFI) வசதி உள்ளது.
  • மாணவர்களுக்கு குறைந்தகல்விக்கட்டணம் மூலம் நிறைவான கல்வியை வழங்கப்படுகிறது.
  • இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு கல்லூரி சார்பில் வளாக-நேர்காணல் (Campus Interview) நடத்தப்பட்டு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

கொஞ்சம் திறமை, கொஞ்சம் ஆர்வம் இருந்தாலே போதும் இந்த துறையில் பெரிய அளவில் சாதிக்க முடியும். தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் போன்ற இடங்களில் டெக்ஸ்டைல் நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. இந்த பட்டம் கையில் இருந்தால் அங்கு நல்ல வேலை பெறலாம்.

Updated On: 11 Feb 2022 9:51 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. இந்தியா
    தினமும் இருமுறை மறைந்து தோன்றும் சிவன் கோயில்!
  3. இந்தியா
    பிரதமர் வேலை வாய்ப்பு திட்டத்தில் கடனுதவி! எப்படி வாங்குவது?
  4. சென்னை
    அடுத்த 3 நாட்கள்... பெரும் புயல் ... வெதர்மேன் எச்சரிக்கை.!
  5. அரசியல்
    கலகலக்கும் கட்சி : அதிமுகவில் என்ன நடக்கும்?
  6. லைஃப்ஸ்டைல்
    தமிழ்நாட்டு பொங்கல் - கர்நாடக சங்கராந்தி: ஒற்றுமையும் வேற்றுமையும்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீடு புகுந்து நகை மற்றும் ரொக்கம் திருட்டு..!
  8. ஆரணி
    ஆரணியில் கோட்டையின் தடயங்கள் கண்டுபிடிப்பு..!
  9. தமிழ்நாடு
    தமிழ்நாடு அரசின் 'தோழி பெண்கள் தங்கும் விடுதி'..!
  10. அரசியல்
    நடுங்கும் கட்சி நிர்வாகிகள் : திமுகவில் என்ன நடக்கும்?