நர்சிங் படிங்க..கை நிறைய சம்பாதிங்க..! எங்க படிக்கலாம்..?
நர்சிங் மாணவிகள் (மாதிரி படம்)
செவிலியர் பணிக்கு உங்களை அர்ப்பணிக்கத் தயாரா..?
செவிலியர் பணி என்பது ஊதியத்திற்கு அப்பாற்பட்ட ஒருபணி. சாதாரண மருத்துவ சேவைகளிலிருந்து போர்க்கால மருத்துவசேவைகள் வரை செய்யும் முழு அர்ப்பணிப்பு நிறைந்த பணியாகும். சாதி மதத்திற்கு அப்பாற்பட்டு சகிப்புத்தன்மையுடன் ஆற்றும் மகத்தான சேவையே செவிலியர் பணி ஆகும்.
செவிலியர் என்பவர் நோயாளியின் நோயைக் கண்டறிந்து அதற்குத் தகுந்தபடி தான் பயின்ற செவிலியப்படிப்பின் மூலமும் மருத்துவர் பரிந்துரையின் படியும் மற்றும் அறிவியல் முறைப்படியும் நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிப்பவர்களே செவிலியர் எனப்படுவர்.
மருத்துவர்களுக்கு அவர்களின் சிகிச்சைப் பணிகளில் உதவி செய்பவர்களாகவும், சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளின் பாதுகாவலராகவும் செவிலியர்கள் (Nurse) இருக்கின்றனர். சேவைமனப்பான்மையுடன் செயல்படும் இத்தொழிலில் அதிகமாக பெண்களே மருத்துவ அலுவலகங்களிலும்,சமுதாயநலக் கூடங்களிலும் மற்றும் பல்வேறு இடங்களிலும் பணிபுரிகிறார்கள். நோயாளிகள் வெளியே வர முடியாவிட்டால் வீட்டிற்கே சென்றும் பணியினை செய்கிறார்கள். நோயாளிகளுடன் அன்பாக பேசுவதன் மூலமும்,தேவையான உதவிகளை செய்வதன் மூலமும்,எதுவும் தவறாக நடக்காது என்பதை கவனமாக கூறுவதன் மூலமாகவும்,மருத்துவர்களை விட செவிலியர்கள் தான் மக்களோடு மிக நெருக்கமானவர்களாக திகழ்கிறார்கள். அறுவை சிகிச்சையின் போது அவர்களின் பணி இன்றியமையாதது. குழந்தை பிறப்பின்போது அவர்களின் தனி கவனிப்பும் தாயைப் போன்று அன்புகாட்டுபவர்களும் செவிலியர் ஒருவரே.
இந்த செவிலியர் படிப்பு படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகம் உள்ளன. குறிப்பாக செவிலியர் கல்வியாளர் செவிலியர் மேலாளர், செவிலியர், நிர்வாகி, நர்ஸ் எபிடெமியோலஜிஸ்ட்,கிரிடிகல் நர்ஸ்,சமூக சுகாதார செவிலியர்கள்,தொழில்சார் சுகாதார செவிலியர், மன நலசெவிலியர், மருத்துவ அறுவை சிகிச்சை செவிலியர், மருத்துவ செவிலியர் நிபுணர் மற்றும் பல பிரிவுகள் உள்ளன. அதற்கேற்றாற்போல் அவர்களுக்கு ஊதியமும் வழங்கப்படுகிறது. தற்போது தமிழ்நாட்டில் அரசுபணியில் சமூக சுகாதார செவிலியர்களாகவும்,கிராம சுகாதார செவிலியர்களாகவும்,பணியாளர் செவிலியர்களாகவும்,செவிலியர் கண்காணிப்பாளர்களாகவும், இராணுவ செவிலியர்களாகவும், ரயில்வே செவிலியர்களாகவும் பணியாற்றலாம். மேலும் இவர்கள் வெளிநாட்டிற்க்கு சென்று நிறைய சம்பளத்துடன் பணியாற்றலாம்.
முக்கிய பாடப்பிரிவுகள்:
- B.Sc நர்சிங்
- P.B.B.Sc நர்சிங் (Post Basic)
- M.Sc., நர்சிங்
கல்லூரியின் சிறப்பு
இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகளவில் மருத்துவதுறையின் வளர்ச்சியில் செவிலியர் தேவை மேலும்மேலும் அதிகரித்து வருகிறது. உடனடி வேலை வாய்ப்புக்கு சிறந்த படிப்பு நர்சிங் ஆகும். எல்லா தரப்பு மக்களுக்கும் உகந்த படிப்பு. நமது ஜே.கே.கே.நடராஜா ஸ்ரீ சக்திமயில் செவிலியர் கல்லூரியில் மிக சிறந்த முறையில் திறமையான ஆசிரியர்களை வைத்து கற்பிக்கப்படுகிறது.
- இங்கு பாடத்தை நன்கு தெளிவாகவும் மாணவர்களுக்கு நன்கு புரியும் படியும் கற்பித்தலில் கை தேர்ந்தவர்கள்.
- செய்முறை வகுப்பின் மூலம் பாடங்கள் கற்றுத்தரப்படுகிறது.
- மருத்துவமனையில் நேரடி பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது.
எங்கு படிக்கலாம்?
மாணவன் என்றால் மாண்+அவன் என்று பிரிக்கலாம். மாண் என்றால் பெருமை. மாணவன் என்றால் பெருமைக்குரியவன் என்று பொருள். அந்த பெருமையை ஒவ்வொரு ஆண்டும் எங்கள் கல்லூரியில் படித்த மாணவர்கள் மெய்ப்பித்து வருகின்றனர். இன்றைய மாணவர்கள்தான் இந்தியாவின் எதிர்காலம். அந்தவகையில் ஒவ்வொரு மாணவருக்கும் இந்தியாவின் நலனில் அக்கறை உள்ளது. நமது ஜே.கே.கே.நடராஜா ஸ்ரீ சக்திமயில் செவிலியர் கல்லூரிக்கு வாருங்கள்! படியுங்கள் ! கை நிறையசம்பாதியுங்கள்..!
- By
Dr.R.Jamunarani M.Sc., நர்சிங், Ph.D -Principal,
Ms.K.Uma M.Sc., -Nursing Associate Professor
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu