அறிவியல் சார்ந்த பெரிய நிறுவனங்களில் வேலை வேண்டுமா? கணிதம் படீங்க..!
கணித மாணவி (மாதிரி படம்)
விண்வெளி நிலையம் போன்ற அறிவியல் சார்ந்த வேலைகள் அத்தனைக்கும் அறிவியல் அடிப்படை. அதிலும் குறிப்பாக கணிதம் சார்ந்த படிப்புகளுக்கு பெரிய மவுசு உண்டு. அதனால், கணிதம் படிங்க, கனிபோல ஒரு வேலையை வாங்குங்க.
மனித வாழ்வில் அனைவரும் தெரிந்தும் தெரியாமலும் பல்வேறு நிலைகளில் கணிதத்தை பயன்படுத்துகிறோம். பிற அறிவியல் பாடங்களைப் படித்தவர்கள் கூட அந்த பாடங்களில் வரும் கணக்கீடுகளை சரியாகச் செய்தால்தான் வெற்றிக்கு வழி வகுக்கும். கணிதத்தின் தேவை அறிவியலின் வளர்ச்சிக்கு முக்கியக் காரணியாக அமைகிறது.
கலிலியோ "கணிதத்தின் உதவியால் நாம் இவ்வுலகத்தையே அறியலாம்" என்று கூறியுள்ளார். பிளஸ் 2 வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணினி அறிவியல் போன்ற பாடங்களைப் படித்த மாணவர்கள், இளம் அறிவியல் கணிதப் பாடப்பிரிவில் சேர்ந்து படிக்க இயலும்.
ஜேகேகேஎன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்,
இளநிலை அறிவியல் கணிதம் (B.Sc., Mathematics)
முதுநிலை அறிவியல் கணிதம் (M.Sc., Mathematics)
போன்ற பாடப்பிரிவுகள், மிகவும் குறைவான கல்விக் கட்டணத்தில் அனுபவமிக்க பேராசிரியர்களைக் கொண்டு சிறப்பாக பயிற்றுவிக்கப்படுகிறது.
வேலை வாய்ப்புகள் :
கணிதப் பாடத்தை முதன்மைப் பாடமாகத் தேர்ந்தெடுத்துப் படித்தப் பின்னர் பி.எட்., எம்.எட்.,அல்லது Phd., படித்தால் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியராகப் பணியாற்றலாம். மேலும்,
- இயந்திரக் கற்றல் பொறியாளர் (Machine Learning Engineer)
- தரவு ஆய்வாளர் (Data Analyst)
- நிதி முதலீட்டு ஆய்வாளர்/ விஞ்ஞானி (Research Assistant/Scientist)
- பொது மேலாளர் (General Manager)
- செயல்பாட்டு ஆய்வாளர் (Operational Researcher)
- காப்பீட்டுத்துறை (Insurance)
- வங்கிகளில் வேலைவாய்ப்பு (Bank Jobs)
- தகவல் தொழில்நுட்பத்துறை (IT Jobs)
- கணினி வீடியோ கேம்களில் பெருமளவு கணிதப் பயன்பாடுகளே பயன்படுகிறது.
- மேத்தமெட்டிஷியன், நியூமெரிக்கல் அனலிஸ்ட் உள்ளிட்ட பணி வாய்ப்பினைப் பெறலாம்.
- இஸ்ரோ, நாசா போன்ற விண்வெளி நிலையங்களில் வேலை வாய்ப்பினைப் பெறலாம்.
மேற்கண்ட துறைகள் மட்டுமல்லாமல், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன.
கணிதத் துறையின் சிறப்பம்சங்கள் :
பாடத்திட்டங்கள் சார்ந்த கருத்தரங்கம். பயிலரங்கம், பயிற்சிப் பட்டறை போன்ற நிகழ்வுகள் சிறந்த அறிஞர்களைக் கொண்டு ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன. வளாக நேர் காணலில் (Campus Interview) வெற்றிபெற மாணவர்களுக்குத் தேவையான அனைத்துப் பயிற்சிகளும் கல்லூரியில் கற்பிக்கப்படுகின்றன.
இத்துறையில் பயின்ற மாணவர்கள், கல்லூரியில் நடைபெற்ற வளாக நேர்காணலில்(Campus Interview) தேர்ச்சி பெற்று இன்ஃபோசிஸ், விப்ரோ, டி.சி.எஸ், வீடெக்னாலஜி, யுனிவர்செல் பவர் சப்ளை , ஐசிஐசிஐ, ஐடிபிஐ போன்ற நிறுவனங்களில் வேலை வாய்ப்பினைப் பெற்றுள்ளனர்.
-By
Dr.Mrs.V.R.PARAMESWARI M.Sc., Ph.D., FRCS
DEAN
JKKN COLLEGE OF ARTS & SCIENCE
KOMARAPALAYAM, NAMAKKAL
K.RAMESH M.Sc., B.Ed.,
HOD & ASSISTANT PROFESSOR
DEPARTMENT OF MATHEMATICS.
JKKN COLLEGE OF ARTS & SCIENCE
KOMARAPALAYAM, NAMAKKAL
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu